விஷ்ணுபுரம் விழா – சந்திப்புகள்

c.muthusami

சீ முத்துசாமி தமிழ் விக்கி

வரும் விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் கோவையில் நிகழ்கிறது. அதில் ஒருங்கு செய்யப்பட்டுள்ள இருநாள் கருத்தரங்கை ஒட்டிய நிகழ்ச்சிகளை முன்னரே வகுத்துள்ளோம். சந்திப்பில் கலந்துகொள்ளும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசகர்கள் முன்னரே வாசித்துவிட்டு வந்து அவர்களுடன் விவாதிக்கும்பொருட்டு இந்த ஏற்பாடு.

இம்முறை மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள் விருதுபெறுகிறார்கள். அவருடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நிகழும். அவருடைய நூல்களை கிழக்கு பதிப்பகத்தில் இருந்தும் உடுமலை தளத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம்

janes
ஜனிஸ் பரியத்

மேகாலய எழுத்தாளரான ஜனிஸ் பரியத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். அவருடன் ஓர் உரையாடல் ஒருங்குசெய்யப்பட்டுள்ளது.

நவீன்
நவீன்

 

 

suyuva
சு.யுவராஜன்

மலேசிய எழுத்தாளர்களான நவீன், சு யுவராஜன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். அவர்களுடனான அமர்வில் மலேசிய இலக்கியம் குறித்த ஓர் பொது உரையாடல் நிகழும். நவீன் மலேசியாவிலிருந்து வெளிவரும் பறை, வல்லினம் போன்ற இதழ்களின் ஆசிரியர். மண்டைஓடி, உலகத்தின் நாக்கு முதலிய நூல்கள் வெளிவந்துள்ளன.

ம்லேசியாவின் முக்கியமான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர் சு.யுவராஜன். அவருடையஅல்ட்ராமேன் என்னும் சிறுகதைத் தொகுதி வெளியாகியிருக்கிறது.

suresh
சுரேஷ் பிரதீப்

 

முதல்நாள் அரங்கில் முதல்தொகுதி மட்டும் வெளியிட்ட இளம் படைப்பாளிகள் நால்வர் கலந்துகொள்கிறார்கள். சுரேஷ் பிரதீப் ஒளிர்நிழல் என்னும் நாவலையும் நாயகிகள் நாயகர்கள் என்னும்    சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார்

thuyan
தூயன்
vishaal
விஷால் ராஜா
KJAgmail
கே.ஜே.அசோக் குமார்

மு.தூயன் ’இருமுனை’ என்னும் சிறுகதை தொகுதியை வெளியிட்டிருக்கிறார். விஷால் ராஜா எனும்போதும்  உனக்கு நன்றி’ ‘ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். கே.ஜே.அசோக் குமார் சாமத்தில் முனகும் கதவு என்னும் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். இவர்களை வாசகர்கள் சந்தித்து உரையாடலாம்.

bogan
போகன்

எழுத்தாளர் சந்திப்பில் போகன் சங்கர், ஆர்.அபிலாஷ் இருவரும் கலந்துகொள்கிறார்கள். போகன் சங்கர் சமீபத்தில் அதிகமாக பேசப்படும் எழுத்தாளர். கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், போகப்புத்தகம் என்னும் இரு நூல்கள் வெளிவந்துள்ள. 

நாகர்கோயில்லை அருகே பத்மநாபபுரத்தைச் சேர்ந்த ஆர்.அபிலாஷ் கட்டுரையாளரும்கூட. அவருடைய ‘கால்கள்’ ‘கதைமுடிவுக்கு வந்துவிட்டீர்கள்’ என்னும் இரு நாவல்கள் வெளிவந்துள்ளன.

writer-abilash-2
ஆர்.அபிலாஷ்

கவிஞர் வெய்யில் இவ்விழாவில் வாசகர்களைச் சந்திக்கிறார். வெயில் ‘கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்’ குற்றத்தின் நறுமணம் புவன இசை போன்ற தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்

veyil
வெய்யில்

இப்படைப்பாளிகளின் படைப்புகளுடன் அறிமுகம் செய்துகொண்டு அவர்களுடனான உரையாடலைப் பயன்படுத்திக்கொள்ளும்படி வாசகர்களையும் நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

வழக்கம்போல நாஞ்சில்நாடன், தேவதேவன், சு வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், பாவண்ணன் உட்பட முக்கியமான மூத்த படைப்பாளிகள் வருகைதருகிறார்கள். இளம் படைப்பாளிகளை மூத்தபடைப்பாளிகள் வந்து அவையில் அமர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு, விமர்சித்து, வினாவெழுப்பி விவாதித்து வாழ்த்துவது மலையாளத்தில் உள்ள மரபு. என் அரங்கில் கேள்வியாளராக பி.கே.பாலகிருஷ்ணனும், அய்யப்பப் பணிக்கரும் அமர்ந்திருந்ததை இப்போது எண்ணும்போது உருவாகும் பெருமிதம் அரிய ஒன்று

 

வாசிப்புக்கு

சு யுவராஜனின் அல்ட்ராமேன் குறித்து

சு யுவராஜன் சிறுகதைகள்

ம.நவீன் | சிறுகதைகள்

நவீன் குறித்து ஜெயமோகன்

சிற்றிதழ் என்பது… ஜெயமோகந் நவீன் உரையாடல்

தூயன் நூல்வெளியீட்டு விழா காணொளி

தூயன் சிறுகதைகள்

தூயனின் இருமுனை ஒரு குறிப்பு

விஷால் ராஜா | பதாகை

அந்தரச் செடி – சிறுகதை விஷால் ராஜா

சுரேஷ் எழுதுகிறான் சுரேஷ் பிரதீப் இணையதளம்

சுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல்

பட்சியின் வானம் கே ஜே அசோக்குமார் இணையதளம்

எழுத்துப் பிழை போகன் சங்கர் இணையதளம்

மின்னற் பொழுதே தூரம்: போகன் சங்கர்

போகன் சங்கர் கவிதைகள் – வல்லினம்

போகன் சங்கர் | சிறுகதைகள்

சொல்வனம் போகன்

மின்னற் பொழுதே தூரம் அபிலாஷ் இணையதளம்

வெய்யில் உரை காணொளி

 

 

 

 

முந்தைய கட்டுரைகாட்டின் இசை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 38