சுந்தர ராமசாமி இணையதளம்

எழுத்தாளர்களின் இணையதளங்களில் சுந்தர ராமசாமியின் தளத்தையே நான் கடைசியாக பார்க்க நேர்ந்தது என்பது ஆச்சரியமல்ல. நான் காலச்சுவடு வாசித்து இரு வருடங்களாகிறது. ஒரு நண்பரின் கடிதத்தில் இணைப்பு இருந்தது, மரியா தாமுவுக்கு எழுதிய கடிதம் என்ற நூலுக்கு இணைப்பு கொடுத்திருந்தார்

சுந்தர ராமசாமியின் இணையதளம் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு அரசாங்க இணையதளத்தின் கச்சிதம். நாஞ்சில்நாடன் இணையதளம் போன்று ஆர்வம் கொண்ட வாசகர்கள் நடத்தும்போதுள்ள உயிர்த்துடிப்பு இல்லை. ஆனால் சுந்தர ராமசாமி இதையே விரும்பியிருக்கக்கூடும் என்று படுகிறது

இணையதளத்தில் சுந்தர ராமசாமியின் நினைவோடை எழுத்துக்கள் சிறுகதைகள் சில அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை தவிர வாசிக்கத்தக்கதாக ஏதும் இல்லை. அவரது குடும்பத்தினரும் அவரது கடைசிக்காலத்தில் கூட இருந்தவர்களும் எழுதிய சாதாரணமான குறிப்புகள் தான் மீதியெல்லாம். சுந்தர ராமசாமியை பற்றிய மிக சாதாரணமான சித்திரத்தை அளிப்பவை அவை.

சுந்தர ராமசாமிக்கு அவரை படைப்பிலக்கியவாதியாக அறிந்த நல்ல வாசகர்கள் யாராவது இன்னொரு இணையதளம் நடத்தலாமென்று தோன்றுகிறது

http://sundararamaswamy.com

http://nanjilnadan.wordpress.com/