பயணம் -கடிதங்கள்

unnamed

தங்களை மீண்டும் வாசிக்கிறேன், பனிமனிதன் படித்துக்கொண்டிருக்கிறேன், சிறுவயதில் வானொலியில் இளையபாரதம் மானுடம் வென்றது என்ற பகுதி நினைவுக்கு வந்தது.  இன்று சுட்டி டிவியே பல குழந்தை களுக்கு உலகம், வில்லனை அழிப்பபது தவிர வேறு கதைகள் இல்லை. Hydi னு ஒரு கதை நல்லாயிருக்கு.

ஒவ்வொரு பனிமனிதன் அத்தியாயத்திலும் உள்ள விளக்க குறிப்புகள் அருமை. என் மகளுக்கு 5 வயதாகிறது. வருங்காலத்திற்கு இது உதவும்.
தங்களின் சங்கரர் உரை YouTube ல் கேட்டேன் அருமை, ஒரு மணி நேரத்தில் பல தகவல்களைத் தந்துள்ளீர்கள், நன்றி.
கடந்த வாரம் இந்திய பயணம் படித்து முடித்தேன், நானும் உங்களோடு பயணப்பட்ட மகிழ்ச்சி.
அன்புள்ள
பகவதிராஜன்
***

அன்புள்ள பகவதிராஜன் 

இந்தியப்பயணம் சென்று எட்டாண்டுகள் ஆகின்றன திரும்பிப்பார்க்கையில் அந்தப்பதிவுகள் அப்பயணத்தை உயிருடன் மீட்டுக்கொண்டுவருவதை உணர முடிகிறது. அரிய நாட்கள். மீண்டும் ஒரு பயணம் இப்போது. 

ஜெ

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48
அடுத்த கட்டுரைமையநிலப் பயணம் – 8