மத்தியப்பிரதேசப் பயணம்

maxresdefault

வரும் அக் 20 முதல் 28 வரை 10 நண்பர்களுடன் இரண்டு கார்களில் மத்திய பிரதேசத்தை காண இருக்கிறோம். முக்கிய வரலாற்றுத் தலங்கள், காடுகள் , அருவிகள் என ஒரு கலவையான பயணம்.
இந்தூரில் துவங்கி குவாலியர் சென்று ஜபல்பூர் வழியாக மீண்டும் இந்தூர் திரும்புகிறோம்.
மாளவர்கள் ,ஹூணர்கள், ஹேகையர்களின்  தொல் நிலம். வெண்முரசுக்கு உத்வேகமளிக்கும் என எண்ணுகிறேன்.
அப்பகுதியில் நண்பர்கள் இருந்தால் சந்திக்கலாம்.
ஜே