அஞ்சலி எம்.ஜி.சுரேஷ்

m.g.suresh

 

இன்று காலை [3-10-2017] எம்.ஜி.சுரேஷ் அவர்களின் இறப்பு குறித்த செய்தி வந்தது. அதை உறுதிசெய்ய மாலை ஆகியது.

 

எம்.ஜி.சுரேஷ் தமிழில் பின் நவீனத்துவம் குறித்த அறிமுகநூல்களையும் விவாதக்கட்டுரைகளையும் எழுதியவர்களில் ஒருவர். பின்நவீனத்துவத்தை ஒரு சிந்தனை அலையாக அல்லாமல் ஒருவகை புதியமதமாகவே அவர் எடுத்துக்கொண்டார். அதற்கான ஆவேசமான வாதிடல்கள் அவருடைய நூல்களில் உண்டு.  அவை பின்நவீனத்துவர் என தன்னை முன்வைத்த ஒருவரின் குரல்கள். அந்தப்புரிதலுடன் வாசிப்பவர்களுக்கு பின்நவீனத்துவ ஆசிரியர்கள், மற்றும் கருதுகோள்களைப்பற்றிய புரிதலை அளிப்பவை அவருடைய நூல்கள்

 

அலக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனீரும், சிலந்தி, யுரேகா என்றொரு நகரம் போன்ற பரிசோதனை முயற்சி நாவல்களையும் எம்.ஜி.சுரேஷ் எழுதியிருக்கிறார். அவை அவர் மேலைநாட்டு எழுத்தில் இருந்து கற்றுக்கொண்ட வெவ்வேறு வடிவங்களை முயற்சி செய்து பார்த்தவை.

 

சிங்கப்பூரில் மகள் வீட்டில் வாழ்ந்த சுரேஷ் நோயுற்றிருந்தார் என தெரிகிறது. நான் அவரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.

 

சுரேஷுக்கு அஞ்சலி

முந்தைய கட்டுரைஆழமற்ற நதி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபினராயி விஜயனின் எழுத்தறிவித்தல்