இணையப்போதை -கடிதம்

adiction
நாம் ஏன் படிப்பதே இல்லை?

இந்த இலக்கிய வெண்ணைக எஜ ரா ஜெமோ அப்பபுரம் சாதிவெறியர்கள் என்னை கச்சுறுத்துகிறார்கள் என் கதறிய பெ முருகன் இஇருக்கீங்கல்லா நீசன்களே ச்சீ த்தூ எப்படிட நைட்டு பொண்டாட்டி கூ டஉங்களாளபடுக்கமுடியுது.

 

இது முகநூலில் மித்ரன் சுரேஷ் என்பவர் எழுதியது. இந்த இளைஞனின் பிரச்சினை என்ன? என்ன தெரிந்து இந்தக்கொதிப்பு? இதை நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் உங்கள் கட்டுரை. ’இணையப்போதை’ என்ற அந்த வரிகளைப்படித்ததும் நினைத்துக்கொண்டேன். இந்தக்கொந்தளிப்பு வெறும் பாவலா. வசைபாடும் இன்பத்தின் பொருட்டு பெரிய புரட்சியாளன் அல்லது கலகக்காரன் போல ஒரு நிலைபாட்டை எடுத்துக்கொள்கிறார், அவ்வளவுதான். வசைபாடுகையில் ஏற்படும் கிளர்ச்சிக்காகவே இதைச்செய்கிறார். சினிமா போஸ்டர்களுக்கு அப்பால் வாசிப்பதில்லை என்பது மொழியைப்பார்த்தாலே தெரியும். இந்தக்கும்பல்களால் நிறைந்துள்ளது முகநூல்

 

எப்படியும் போகட்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நம் கண்முன்னால் ஒரு தலைமுறை எதையும் ஒத்திசைவுடன் சிந்திக்கமுடியாதவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறது. எழுதப்படிக்கக்கூடத் தெரியாத கும்பல் இது. இது நம் அரசியலிலும் சமூகவியலிலும் மிகப்பெரிய தீயவிளைவுகளை உருவாக்கும் என நினைக்கிறேன்

 

எஸ்.ஆர்.ரமேஷ்

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 5
அடுத்த கட்டுரைடான்ஸ் இந்தியா, டான்ஸ்!