புத்தகங்களும் பனையும்

IMG-20170907-WA0058

சார்,

கடந்த சனிக்கிழமை அன்று மதுரை சென்று கண்காட்சியில் புத்தகங்கள் வாங்கினேன் எனக்கு அட்டை பரிவர்த்தனை தெரியாததால் இன்று வரை வாங்காமல் இருந்த சொல்வளர்காடு, பன்னிருபடைக்களம் இரண்டும் கூட அங்குதான் வாங்கினேன். உங்களின் சொல்முகம் இப்போது வாசிக்கிறேன். மணிமேகலை, கண்ணகி குறித்தெல்லாம் எழுதியிருந்ததையும் கீதை குறித்தும், தேவதேவன் அவர்களைக்குறித்தும் வாசித்து என் சகோதரியிடம் தொலைபேசி அவற்றை பகிர்ந்துகொண்டேன் இன்று புத்தகத்தை வாசித்து முடித்து விடுவேன். இன்னும் வலசைப்பறவைகள், உச்ச வழு, சொல்லி முடியாதவை என்று என்னிடம் இல்லாத உங்களின் புத்தகங்கள் அனைத்தும் வாங்கினேன். முகங்களின் தேசம் கிடைக்கவில்லை

கடந்த 7 ஆம் தேதி காட்சன் அவர்களின் பனை குறித்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியாக பனையின் வகைப்பாட்டியல் பற்றிய என் ஒரு மணி நேர வகுப்பை வகுப்பறையிலேயே படம் பிடித்தார்கள். மாணவர்களுக்கும் எனக்கும் வித்தியாசமான அனுபவமாயிருந்தது. பனையின் வகைப்பாட்டியல் பற்றி அதிகம் பாடப் புத்தகங்களில் காணக்கிடைக்கவில்லை, சித்திரங்கள் உள்பட எல்லாம் புதிதாய் சேகரித்து தயாரித்து வகுப்பெடுத்தேன்

அனைத்திற்கும் நன்றி சார்

லோகமாதேவி

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 3
அடுத்த கட்டுரைகேரளக் கம்யூனிசம், இடதுசாரி இலக்கியம், பினராய் விஜயன்