குக்கூ .இயல்வாகை – கடிதம்

அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

 

1

குக் கூ  காட்டுப்பள்ளி நிலத்தில் நண்பர்கள் அனைவரும் கலந்துரையாடிக் கொண்டிருந்த அந்த ஒரு நாளில் திருப்பூர் காது கேளாதோர் பள்ளி முருகசாமி அய்யாவின் வாழ்வில் ஏற்பட்டு இருக்கும் இடர்பாட்டினை களைந்து மீட்க நினைத்த அந்த தருணத்தில் மீண்டும் உங்களினை தீர்க்கமாக   கண்டடைகிறோம்.

 

 

கடந்த நான்கு நாட்களாக உங்களுடன் நாங்கள் செலவழித்த கணங்களை மிக நல்ல ஒரு அனுபவமாக உணர்கிறோம்,அதிலும் தீராத மணிக்கணக்கான உரையாடலை அதில் நீங்கள் குறிப்பிடும் தகவல்களை,ஆளுமைகளின் பெயர்களை,ஆய்வுகளை அது குறித்த புத்தகங்கள் என ஒற்றை விஷயம் விரிவதை மிகவும் கவனம் கொண்டு உள்வாங்க முயன்றோம்.

2

இடைநிறுத்தப்படாத இந்த உரையாடலும் அதில் கிடைக்கப்பெறும் மன எழுச்சியை தக்க வைத்துக் கொள்ள, மேலும் உள்வாங்கிக் கொள்ள தீவிரமான வாசிப்பு ஒன்று தான் ஆகச் சிறந்த வழி என உணர்கின்றோம்.அடுக்குகள் அற்று நீங்கள் பழகும்விதமும் அனைவருக்கும் அதே சொல்லை நீங்கள் வழங்குவதும் பிரமிப்பாய் உள்ளது.சமூகம் குறித்த பார்வையை மக்களின் சிந்தனைகளை நடைமுறை வாழ்க்கையை இறுதியில் அவன் சென்றடையும் நிலையை என ஒட்டு மொத்தம் அல்லது முழுமை குறித்த மன நிலையை இறுதியில் உணர முடிந்தது.

 

காலம் தவறாமை என்பதை உறுதியாக நீங்கள் கடைபிடிப்பதை அறிகிறோம்.உங்களுடனான முதல் பயண அனுபவம் பரவசத்துடன் துவங்கியது.கல்வி குறித்த உங்களின் சிந்தனையை உள்வாங்கிக் கொள்வதே எங்களின் தவிப்பாக இருந்தது .ஆசிரியர் தினமான அன்று இயல்பாக சமணர் தளங்களுக்கு சென்றதும் அங்கே பள்ளி குறித்து நீங்கள் பேசியதின் நீட்சியில் ஆசிரியர் மற்றும் மாணவன் குறித்த அந்த உரையாடல் அலாதியானது.

 

3[சுயம்புச் செல்வி]

இரண்டாம் நாள் தென்பரங்குன்றத்தில் குக்கூ நணபர்களுடனான சந்திப்பு,நாங்கள் எதிர்பார்த்த தளத்தினையும் தாண்டி வேறு ஒரு ஆழத்திற்குள்ளும் தீவிரத்திற்குள்ளும் அன்னைவரையும் இட்டு சென்றது.எங்களின் மனத்தவிப்பக்கான ஒற்றை சொல்லாக அந்த மூன்று மணி நேர உரையாடலை பார்கின்றோம்.இயல்வாகை பதிப்பகத்தின் நவகாளி யாத்திரை நூல் வெளியீடு  உங்கள் கைகளினால் நடைபெற்றது மிகுந்த மன நிறைவை அளித்தது

 

நாங்கள் எங்கள் பயணத்தை அற வழிமுறைகளின் வழியே அமைத்துக் கொள்ள துவங்கி சென்று கொண்டு இருக்கும் இந்த தருணத்தில்  உங்களின் 30 வருட வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் எங்களுக்கு முன் இதே பாதையில் சென்றவர்களின் சூழல்களையும் எடுத்துக்கூறி எங்களுக்குள் நல்ல ஒரு தெளிவினை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறீர்கள்.உங்களை சந்திக்க வந்த புதிய நணபர்களும் மிகுந்த மனநிறைவுடன் சென்றனர் .

5

[சிவகுருநாதன்]

குக்கூ நிலத்தில் இருக்கும் அத்தனை சிற்றுயிர்களின் சார்பாக நன்றியயையும் பிரார்த்தனையயையும் முன்வைக்கின்றோம்.

 

ஸ்டாலின்

 

6

[நந்தகுமார் 8

 

ஆக்கம் சங்கர் unnamed

[நேசன்[

[email protected]

முந்தைய கட்டுரைபசவர், தமிழ் ஹிந்து – உளறல்களின் பெருக்கு
அடுத்த கட்டுரைஇரண்டு செப்டெம்பர் ஐந்துகள்…