கோசாலைகள் பற்றி…

kosaali

பாஜக பிரமுகரின் கோசாலையில் 200 மாடுகள் பலி
பசுக்கொலை- பொருளியலும் சட்டமும்

ஜெ

கோசாலை பற்றி நீங்கள் சொல்லியிருந்ததை இந்தக்கட்டுரையுடன் இணைத்து வாசித்தேன்.. பசுக்களை பேண கோசாலை போன்ற ஒரு தவறான வழி கிடையாது. மாடுகளை உண்பது முழுமையாக தடைபட்டால் உண்மையில் மாடுகள் அனாதையாக்கப்படும். அவற்றை தெருவில் அவிழ்த்துவிடுவார்கள். அதற்கும் முடியாமலானால் மாடுகளை வளர்ப்பதே நின்றுவிடும். \

க.சுப்ரமணியம்

***

அன்புள்ள சுப்ரமணியம்,

மாடு வளர்ப்பது ஒரு தொழில். தொழிலாக மட்டுமே அதைச்செய்யமுடியும். வெறும் செண்டிமெண்டுகள் கொஞ்சநாளைக்குச் சரிவரும். அதன்பின் ஊழல், உதாசீனம். நோயுற்ற முதியமாடுகளை தேசமெங்கும் பராமரிப்பதென்றால் தேசமெங்கும் மருத்துவநிலைகளைப் பராமரிப்பதைவிட அதிகம் செலவாகும். மதவெறி மூடநம்பிக்கையுடன் இணைந்தது. அது அரசியலுக்கு வரும்போது வெறும் வன்முறையாக உருக்கொள்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைஆயுர்வேத மாட்டிறைச்சி
அடுத்த கட்டுரைதன்னை அழிக்கும் கலை