நகலிசைக் கலைஞன்

john

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

தங்கள் தளத்தில் ஜானகி லெனின் அவர்களின் ” My Husband and Other Animals ” குறித்த பதிவு கண்ட பிறகு வாங்கிப் படித்தேன். தி ஹிந்துவில் ஓரிரெண்டு கட்டுரைகள் முன்னதே படித்திருந்த ஞாபகம். மிகவும் சுவாரஸ்யமான நூல்.

 

ஜான் சுந்தரின் ” நகலிசை க் கலைஞன்” அதே வரிசையில் மேம்பட்டப் படைப்பு. ஒரு சிறுகதைக்குரிய கச்சிதத்துடன் பல கட்டுரைகள் இருக்கின்றன. நகலிசைக் கலைஞர்களின் தினப்படி வாழ்வின் குறுக்கு வெட்டு தோற்றம் செம்மையாக பதிவாகி இருக்கிறது.

 

வெவ்வேறு துறைகளில் இம்மாதிரியான படைப்புகள் வரத் தொடங்கும் நாள் விரைவில் வரும் என்று நம்புகிறேன் –

 

சுகா இந்நூலைப் பற்றி எழுதியிருக்கும் பதிவு

http://venuvanam.com/?p=341

 

அன்புடன்,

மணிகண்டன்