கோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்

kovai2

அன்புள்ள ஜெ

கோவை புத்தகச்சந்தையில் உங்களுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியூட்டுவதாக அமைந்தது. சிலமுறை உங்கள் உரைகளைக் கேட்டிருந்தாலும் நேரில்சந்திக்க வாய்க்கவில்லை. சந்தித்து என்னுடைய எண்ணங்கள் சிலவற்றைச் சொல்ல முடிந்ததை பெரியவிஷயம் என்றுதான் நினைக்கிறேன். எனக்கிருந்த பலவகையான குழப்பங்களை உங்கள் எழுத்துக்கள் தீர்த்துவைத்தன. மேலதிகமான கேள்விகளையும் எழுப்பின. அவை என்னை மேலும் வாசிக்கவைத்தன. அதுவரை என் வாழ்க்கையைப்பற்றி ஒரு சலிப்பைத்தான் கொண்டிருந்தேன். எதிலும் பெரிய ஈடுபாடு எழவில்லை. படித்தோம் வேலைபார்க்கிறோம் என்றுதான் இருந்தேன். அறிந்துகொள்வதன் இன்பம் என்ன என்று உங்கள் எழுத்துக்கள் வழியாக அறிந்தேன். நன்றி

மாதவன்

***

kovai

அன்புள்ள ஜெ

உங்கள் தளத்தில் நிறைய கடிதங்கள் எழுதியிருந்தாலும் நேரில் சந்திக்க வாய்த்தது கோவை புத்தகக் கண்காட்சியில்தான். உங்களுக்கான தனி ஸ்டால் என்பது ஒரு நல்ல ஐடியா. உங்களையும் உங்கள் நண்பர்களையும் அங்கே சந்திக்கமுடிந்தது. கிருஷ்ணன் ராஜமாணிக்கம் யோகா ஆகியோரை அங்கே கண்டேன். நீங்கள் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது பெரிய பொறாமையை உருவாக்கியது

இதேபோன்ர கண்காட்சிகளை எல்லா அரங்கிலும் அமைக்கலாம். நீங்கள் ஏராளமாக எழுதியிருக்கிறீர்கள். அனைத்தையும் ஒரே கூரையின்கீழே பார்ப்பதும் வாங்கமுடிவதும் மிகப்பெரிய அனுபவம்

செந்தில்

***

afe7f752-1747-4e94-95d6-3c5c2c90ed0f

அன்பு ஜெ,

முதல்நாள் இரவு பேசும்போது இயல் நாளை கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவிற்கு செல்வதாக சொன்னாள். ஸ்கூலிலிருந்து எல்லா மாணவர்களையும் கூட்டிச் செல்வதாகவும் கூறினாள். சந்தோஷமாக இருந்தது.

உங்களுக்காக ஒரு தனி அரங்கிருப்பதாகவும், சீனுவையும் திருக்குறள் அரசியையும் அங்கு சந்திக்கலாம் என்றும் சொல்லியிருந்தேன். இரண்டு நாட்கள் முன்னால் வந்திருந்தால் உங்களைச் சந்தித்திருக்கலாம்.

இயல் ஃபோனில் தெரிவித்ததும், இயல் பள்ளியின் பிரின்சிபலுக்கு வாட்ஸப்பில் நன்றி தெரிவித்து மெஸேஜ் செய்தேன். உங்கள் அரங்கைப் பற்றி அவரிடமும் தெரிவித்தேன். இயலின் முன்னால் தமிழ் ஆசிரியர் ராஜசேகர், பெருமாள் முருகனின் மாணவர். பிரின்சிபல் பாலாவும் புத்தகக் காதலர்; இலக்கிய பரிச்சயம் உடையவர்.

இயல் பள்ளி நண்பர்களோடு ஒரு நாளை புத்தக திருவிழாவில் கொண்டாடியது மகிழ்ச்சியாக இருந்தது. இயலுக்கும்.

படங்களை இணைத்திருக்கிறேன்

வெங்கடேஷ் சீனிவாசகம்

***

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76
அடுத்த கட்டுரைபாரதிமணியின் திருமணம்