ஓர் அழைப்பு

index

இன்று பின்மதியம் 7367884327 என்னும் எண்ணிலிருந்து ஓர் அழைப்பு. இந்திநெடி கொண்ட ஒரு குரல் பேசியது. “நாங்க் பேங்க் மேனேஜர் பேசறேன். நீங்க ஏ.டி.எம் கார்டு வச்சிருக்கீங்கல்ல?”

நான் அரைக்கவனத்துடன் “ஆமாம்” என்றேன்.

“அதை பிளாக் பண்ணியிருக்கோம். அது செல்லாது. அதிலே மால்பிராக்டீஸ் நடக்குது”

எனக்குச் சந்தேகம் வந்தது. என் வங்கி நிர்வாகிகளை எனக்கு நன்றாகவே தெரியும்.

“சரி, நீங்க எந்த பேங்க்?” என்றேன்

“நீங்க அக்கவுண்ட் வச்சிருக்கிற பேங்க்”

“அதான் எந்த பேங்க்?”

“அதோட நம்பர் , கோட் ரெண்டும் எஸ்.எம்.எஸ் பண்ணுங்க. ரிலீஸ் பண்ணிடலாம்”

“சார் நீங்க எந்த பேங்க்?’

போன் வைக்கப்பட்டுவிட்டது. நான் திரும்ப அழைத்தேன். சுவிட்ச் ஆஃப்

சரியான வலை. அறியாதவர்கள் எளிதாக தகவல்களை அனுப்பிவிடுவார்கள். நூறுபேருக்கு ஃபோன் செய்தால் பத்துபேராவது விழுவார்கள்.

முன்பெல்லாம் இதை நைஜீரியாவிலிருந்துதான் செய்துகொண்டிருந்தார்கள். இப்போது நம்மூரும் முன்னேறிவிட்டது

இதை எங்காவது புகார் செய்யவேண்டும். நண்பரைக் கூப்பிட்டேன். வங்கி ஊழியர். “இது நடந்திட்டே இருக்கு. அனேகமா நார்த் இண்டியா. அங்கபோய் யார் கம்ப்ளெயிண்ட் பண்றது? யாரு ஃபாலோ பண்றது? பேசாம விடுங்க”

ஆகவே என்ன செய்யமுடியும்? இப்படி எழுதிவைப்பதுதான்

முந்தைய கட்டுரைசுசித்ரா பேட்டி -Asymptote
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 73