கோவைப் புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்

grஇனிய ஜெயம்,

 

புத்தக சந்தையில் கையில் கிடைத்த தொகுப்பை புரட்டி கிடைத்த பக்கத்தை வாசித்தேன்.  கவிதை.

 

= உன் பார்வை=

 

நீ விரும்பிக்கூட பார்க்க வேண்டாம்;

ஒரு முறை திரும்பப் பார்.

போதும்.

உன் பார்வை என் மேல் பட்டால் போதும். அவ்வளவுதான்.

 

கவிக்கு 70 வயது. சிவகங்கை காரர். தொகுப்பு முழுதும் காதல் தாண்டவம். சாம்பிள் கவிதை மேலே. அகரம் வெளியீடு. கவிஞர் பெயர் மீ. சுகுமாரன்.

தொகுப்பின் தலைப்பு குறியீட்டு தனம்  கொண்டது . தலைப்பு. இது.

 

மரணவீதிப் பயணம்.

 

கடலூர் சீனு

 

அன்புள்ள சீனு,

கடுமையாக மீண்டு வந்திருக்கிறார். இதை ஆங்கிலத்தில் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்பார்கள். வீரப்பனைப் புகழ்ந்து ராஜ்குமார் பேட்டி கொடுத்ததுபோல என விளக்கலாம்

ஜெ

 

ஜெ

 

கோவை புத்தகக் கண்காட்சி நிறைவுநாள் மீண்டும் செல்லவேண்டும். இன்றுதான் புத்தகங்களை வாங்கவேண்டும். இந்த ஆண்டு சாகித்ய அக்காதமி, என்பிடி போட்ட பல நூல்கள் குறைவான விலையில் கிடைக்கின்றன, பள்ளி கல்லூரிகள் தொடங்கும் காலம். அட்மிஷன் நடந்துகொண்டிருப்பதனால் கோவையில் எவரும் நிலையில் நிற்காத காலகட்டம். ஆகவே கூட்டம் கொஞ்சம் கம்மிதான். இனிவரும் புத்தகக் கண்காட்சியை ஆகஸ்டில் நடத்துவது நல்லது என நினைக்கிறேன். உங்கள் அரங்கில் சில நூல்கள் வாங்கினேன். ஆரோக்கிய நிகேதனம் வாங்க நினைத்தேன் கிடைக்கவில்லை

 

என் அபிமான எழுத்தாளருக்கான ஸ்டால் என்பது பெருமிதமாக உணரச்செய்தது. நண்பர்களைக்கூட்டிவந்து காட்டினேன்

 

செந்தில்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 68
அடுத்த கட்டுரை’ஆனடோக்டர்’