’ஆனடோக்டர்’

yanai

அட்டைகள்

அன்புள்ள ஜெ,

ஆன டோக்டர் நூலின் இரண்டு பதிப்புக்களை இன்று பார்த்தேன். இதில் அந்த இரண்டாவது அட்டை மிகமிக அழகானது. இப்படி கிரியேட்டிவாக அட்டையை யோசிப்பவர்கள் இங்கே மிகக்குறைவானவர்கள்தான்.

நிற்க, இந்த நூல்களின் ராயல்டியை நீங்கள் ஏன் துறக்கவேண்டும்? இதை ஏன் சூழியல் அமைப்புகளுக்கு அளிக்கக்கூடாது?

ஸ்ரீதர்

yanai

அன்புள்ள ஸ்ரீதர்,

பதிப்புரிமைத்தொகையை நான் துறந்தமையால்தான் இதற்கு இத்தனை பதிப்புகள். இவற்றின் விலையைப் பார்த்தால் பெரும்பாலும் நான் துறந்த பணம் விலையில் குறைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும் அதிகவாசகர்களிடம் நூல் செல்ல இது வழிவகுக்கிறது

நூல் முடிந்தவரை சென்றடையவேண்டும் என்பதே என் எண்ணம். அறம் கதைகள் பொதுவாசகர்களுக்குரியவை. குழந்தைகள் வரை

ஜெ

***

அட்டைகள்

அட்டை -கடிதம்

 

முந்தைய கட்டுரைகோவைப் புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…