பசுமைப்புரட்சியும் பூசல்களும்

ms

அன்புள்ள ஜெ,

வணக்கம். பசுமை புரட்சி பற்றி எம்.எஸ்.சுவாமினாதனின் இந்த

முக்கிய பேட்டியை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்:

கே.ஆர்.அதியமான்

எம்.எஸ். சுவாமிநாதன் பேட்டி

***

அன்புள்ள அதியமான்,

ஆம், முக்கியமான பேட்டி. ஆனால் இதில் சொல்வதையெல்லாம் பலகாலமாக சொல்லிவருகிறார். ஒப்புநோக்க வரலாற்றுணர்வுடனும் நடுநிலையுடனும் பேசியிருக்கிறார்.

எந்த ஒரு செயல்பாட்டுக்கும் வெற்றியும் இழப்புகளும் உண்டு. அத்தனை கருத்துக்களுக்கும் மறுதரப்பு உண்டு. ஆனால் நம்மால் எதையும் வசைகளாக ஆக்கிக்கொள்ளவும் நக்கலும் நையாண்டியுமாக விவாதிக்கவும் மட்டுமே முடிகிறது. எதிர்தரப்பை மறுப்பதற்கல்ல இழிவுசெய்வதற்கும் உள்நோக்கம் கற்பிப்பதற்கும் மட்டுமே தெரிகிறது.

சமீபத்தில் இயற்கைவேளாண்மை குறித்து நான் எழுதிய குறிப்புக்கு சம்பந்தப்பட்ட ஒருவர் முகநூலில் எதிர்வினை ஆற்றியிருந்தார். நான் அவர் ஏதோ ஒரு துறையில் நிபுணர், அறிவியலாளர் என நினைத்திருந்தேன்.அவர் என்ன சொன்னாலும் அதற்கு ஓரு முக்கியத்துவமிருக்கும் என நினைத்தேன். நான் அறிவியலாளர், களச்செயல்பாட்டாளர்கள் மேல் மதிப்பை ஒருபோதும் குறைத்துக்கொள்ளாதவன்.அவர் நான் சொல்வதற்கெல்லாம் வரிவரியாக உள்நோக்கம் கற்பித்து எழுதியிருந்ததைப் பார்த்ததும் அடச்சே என்றாகிவிட்டது. சரியான முகநூல் சல்லி

இன்று இயற்கைவேளாண்மை X பசுமைப்புரட்சிச் சண்டை அஜித் விஜய் போரின் தளத்திற்கு முகநூலர்களால் இறக்கப்பட்டுவிட்டது. நிபுணர்கள் அவர்களுக்கே உரிய நிதானத்துடன் பேசுவதை மட்டுமே பொருட்படுத்தவேண்டும் என நினைக்கிறேன்

ஜெ

***

மீண்டும் ஒரு மதப்பூசல்
 
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 67
அடுத்த கட்டுரைகோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்