கோவையாசாரம்!

asara

இனிய ஜெயம்,

 

கோவை புத்தகச்சந்தை.  “ஆசாரக் கோழி” நூலை ஒருவர் தேடுகிறார். அபிப்பிராய சிந்தாமணி போல் தலைப்பா அல்லது மெய்யாகவே ஆசாரக்கோவை நூலை பிழையான தலைப்பில் தேடுகிறாரா. அல்லது கோவை நிலம் குறித்த நூல் என எண்ணி விட்டாரா தெரியவில்லை. மொத்தத்தில் இன்றைய நாள் துவங்கி விட்டது.

 

கடலூர் சீனு

 

அன்புள்ள சீனு,

என்ன செய்ய? சிலநாட்களுக்கு முன்பு ஒருவர் என்னை சந்தித்தார். ‘ஒருபுளியங்கொட்டையின் கதை’ என்ற நாவல் அவருக்கு வேண்டும். என்னிடமிருக்கிறதா? என்ன அவசரம் என்றேன். அதில் நாடார் சாதிபற்றிய தவறான தகவல்கள் உள்ளன.மறுப்பு எழுதவேண்டும் என்றார்.

 

ஆசாரக்கோவை என்று ஒரு நூல் உள்ளது.கோவைமாவட்டக் கொங்கு கவுண்டர்கள் ஆற்றவேண்டிய ஆசாரங்களை விளக்கும் நூல் என நினைக்கிறேன். அதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். இவர் பெயரை முதலில் கேட்டபோது நான் பர்ர் என வாய்பொத்திச் சிரித்தேன். முள்ளுதல் என்றால் மலையாளத்தில் ஒன்றுக்கடித்தல். ஏன் பெருவாயிலிலேயே அதைச் செய்தார் தெரியவில்லை. ஏதாவது சாத்வீகப்போராட்டமாக இருக்கும்.

 

நிற்க, ஆசாரக்கோவையை இணையத்தில் தேடியபோது கிடைத்த நூலின் அட்டை.! சாரதாப்பதிப்பக அட்டை வடிவமைப்பாளர் ஒரு மேதை. அந்தம்மா எவ்வளவு ஆசாரமாக அய்யய்யே!’ என்று சொல்லி திருகிக்கொண்டு நின்றிருக்கிறது

ஜெ

 

முந்தைய கட்டுரைவாசிப்பு இருகடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66