கோவையில் ஒருநாள்..

9
கே.என்.செந்திலுக்கு நினைவுப்பரிசு

10

இன்று காலை நானும் அரங்கசாமியும் கிருஷ்ணனும் கதிர்முருகனும் கோவை ஞானியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தோம். முன்னர் பார்த்ததுபோல் இல்லாமல் உடல்நிலை தேறி நன்றாக இருக்கிறார்.. சற்றுநேரம் அரசியல், இலக்கியம்,சமகாலப் பொருளியல் என பேசிக்கொண்டிருந்தோம். நண்பர் செந்தமிழ்த்தேனீ சந்திப்புக்கு ஏற்பாடுசெய்திருந்தார்

7
கவிஞர் இசைக்கு நினைவுப்பரிசு நாஞ்சில்நாடன்

 

6
கார்த்திகைப் பாண்டியனுக்கு போகன்

நேராக புத்தகக் கண்காட்சி. பகல் முழுக்க அங்குதான் இருந்தேன். என் நூல்களுக்கான அரங்கில். காலை இலக்கிய அரங்கில் ஜடாயுவின் பேச்சைக்கேட்க முடியாமலாகிவிட்டது. பவா செல்லத்துரை பேசினார். செவ்விலக்கியங்கள் வாழுமா என்பது தலைப்பு. பவா நவீன இலக்கியத்திலும் செவ்விலக்கியங்கள் உண்டு என்று சொன்னார்.

மதியம் இலக்கிய உரையாடலில் மரபின் மைந்தன் முத்தையா ,போகன் ஆகியோரின் பேச்சுக்களைக் கேட்டேன் நவீன இலக்கியம் பழைய இலக்கியம் குறித்த உரையாடல்.

11

தி ஹிந்து ஏற்பாடு செய்திருந்த அரங்கில் கே.என்.செந்திலுடன் ஒரு வாசகர் சந்திப்பு. அவருடைய சமீபகாலப்பேட்டி குறித்துத்தான் கேள்விகள். அதிலிருந்து இலக்கியமதிப்பீடுகள் நோக்கி சென்றது பேச்சு. பின்னர் இசை, போகன், கார்த்திகைப்பாண்டியன் ஆகியோரும் வந்து கலந்துகொண்டார்கள்.

மாலைகோவையின் சமூகசேவகரான ஜெகன்னாதன் வந்திருந்தார். உடல்நலக்குறைகள் இருந்தாலும் குன்றா ஊக்கம் கொண்டவர். இலக்கியவாசகரும்கூட. அவருடன் பேசிக்கொண்டிருந்தபோதுவானதி ஸ்ரீனிவாசன் அரங்குக்கு வந்தார். இன்றைய காந்தி நூலை அவருக்கு அளித்தேன்.

13

ஏராளமான வாசகர்கள், குட்டிக்குட்டி உரையாடல்கள். மகிழ்ச்சியான ஒரு நாள்.

***

முந்தைய கட்டுரைதாழ்வுணர்ச்சியின் வரலாற்றுச்சித்திரம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62