கடிதங்கள், இணைப்புகள்

கனத்த காகித அட்டை போடப்பட்டுக் கையால் அச்சுக் கோர்ப்புச் செய்யப்பட்ட அந்தப் பழுப்பேறிப் போன காகிதங்களில்தான்
சில நேரங்களில் சில மனிதர்களையும், நாடகம் பார்க்கும் நடிகையையும்,சினிமாவுக்குப் போகும் சித்தாளையும், உயிர்த் தேனையும், லா ச ரா கதைகளையும் இன்னமும் ரசிக்க முடிகிறது…

நெஞ்சுக்குப் பக்கமாகக் குறிப்பிட்ட ஒரு காலத்தின் சாட்சியாக இருந்து கொண்டிருப்பவை…. மட்கத் தொடங்கியிருக்கும் அந்தப் பக்கங்கள்தான்…

காண்க;
இணைப்பு
மீனாட்சியின் பொன்விழா
http://www.masusila.com/2010/11/blog-post_28.html

எம்.ஏ.சுசீலா,(M.A.Susila)
புது தில்லி
(தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை)
D II 208 KIDWAI NAGAR WEST,NEW DELHI110023
www.masusila.com
http://www.google.com/profiles/susila27

===================================

வணக்கம் ஜெ,

நலம். தங்கள் நலனை தினமும் உங்கள் தளத்தில் அறிகின்றேன் :)

நேரம் கிடைக்கும் போது என் வலைப்பூவில் இருக்கும் புகைப்படங்களை கண்டு ரசிக்கவும். அனைத்தும் சென்னையைச் சுற்றி எடுத்தவையே. நீங்கள் ரசிப்பீர்கள் எனத் தோன்றியது. அடுத்து எங்கேனும் பயணம் மேற்கொண்டால் அவசியம் அழைக்கவும் :)

விழியன்
http://vizhiyan.wordpress.com

==================================

அன்புள்ள ஜெ,

“என் துள்ளலைத் துவள்மென் நடையாக்கினேன்” – இதுவே, கொற்றவையில் என்னைக் கவர்ந்த ஆகச் சிறந்த சொல்லாடல் என்பேன்.

நினைவில் தோன்றும் போதெல்லாம் ஆழ் மனதில் லேசான ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தும் இந்த வாக்கியம், இன்று முத்துலிங்கத்தின் “கொம்புளானா”வைப் படித்து முடித்ததும் மனதில் தோன்றியது.

பெண்மையின் பெருந்துயரை இதைவிடக் கச்சிதமாகக் கூறிவிடமுடியாதென்று கருதுகிறேன்.

அன்புடன்
ஸ்ரீனிவாசன்

=============================

இனிய ஜே மோ அவர்களுக்கு

தங்களின் விசும்பு என்ற அறிவியல் கதை தொகுப்பு படித்தேன் ..மிக சிறப்பாக இருந்தது..
அதை பற்றிய என் கருத்து இங்கே.. http://pichaikaaran.blogspot.com/2010/11/blog-post_24.html

அதன் முன்னுரையில் அறிவியல் புனை கதை என்பது அறிவியலில் இருந்து பிரச்சினைகளையும் படிமங்களையும் எடுத்துக்கொண்டுள்ள ஓர் இலக்கிய படைப்புதான் என சொல்லி இருக்கிறீர்கள்..

அந்த வகையில் கிரைம் கதைகளையும் , சரியாக எழுதப்பட்டால், இலக்கியமாகக் கருத முடியுமா.. ஒரு த்ரில்லர் பாணியில் தமிழில் வந்தது இல்லையே. இது பற்றி உங்கள் கருத்து ?

regards,
pichaikaaran.blogspot.com

முந்தைய கட்டுரைஅருந்ததிராய்.. இணைப்புகள்
அடுத்த கட்டுரைஅருந்ததி ராய்-கடிதங்கள்