கிறித்தவப்பாடல்கள், கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

இந்த தளத்தில் அனைத்து கிறிஸ்தவ (பழைய, புதிய) பாடல்களும் உள்ளது. இது ஒரு கிறிஸ்தவ பாடல் களஞ்சியம். இதன் நிர்வாகிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும்.

http://www.manavai.com/n_songs_fp.htm

அன்புடன்,
கிறிஸ்டோபர் ஆ.

அன்புள்ள கிறிஸ்

ஆம். முக்கியமான தளம் ,நன்றி

ஆனால் இங்கே பாடல்களை ஆல்பங்களாக அல்லாமல் ஒரே பட்டியலாக செய்திருக்கலாம். தேடி எடுக்கும் வசதி செய்திருக்கலாம்

ஜெ

அன்புள்ள ஜெ

கிறித்தவப்பாடல்களைப்பற்றிய உங்கள் குறிப்பு என் பழையகால நினைவுகளை கிளறியது. என் சொந்த ஊர் திருச்சி பக்கம் ஆரோக்கியபுரம். நான் இந்துவாக இருந்தாலும் கிறித்தவப்பாடல்களை சிறுவயதுமுதலே கேட்டு வளர்ந்தவன். அய்யய்யா நான் வந்தேன் பாட்டை சிறுவயதுமுதல் கேட்டு வந்தேன். நினைவில் மறைந்து கிடந்த பாட்டை உங்கள் கட்டுரை தட்டி எழுப்பியது. தொடர்ந்து அந்தப்பாடலை முனகிக்கொண்டே இருக்கிறேன்.

நடராஜா முதலியாரின் ’தட்டுங்கள் திறக்கப்படும்’ கிறித்தவப்பாடல்களில் ஒரு கிளாசிக். அவரையும் நினைத்துக்கொண்டேன்

தேவநாத் ஏகாம்பரம்

========================================

அன்புள்ள தேவநாத்,

அய்யய்யா நான் வந்தேன் வழக்கமான கிறித்தவபாடல் அல்ல. வழக்கமான கிறித்தவப்பாடல்களில் ஆர்மோனியத்துக்கு ஏற்ப இசை போடப்பட்டிருக்கும். கமகங்கள் இருக்காது. இந்தப்பாடலில் சுசீலா மிக உருக்கமாக ஏராளமான சங்கதிகளுடன் பாடியிருக்கிறார். கிறித்தவர் அல்லாதோரிடம் அதிகம் புகழ்பெற்ற பாடல் இதுவாகவே இருக்கும்

ஜெ

============================================

அன்புள்ள ஜெ

கிறித்தவப் பாடல்களை பற்றி நீங்கள் எழுதியதற்கு நன்றி. என் மனசுக்குள் அழியாமல் கிடக்கும் பாடல்கள் பல உண்டு. எனக்கு பக்தி என்றாலே இசைதான். நிறையபாடல்களை கேட்டு கேட்டு என்னை அறியாமலேயே பாட்டு என் மனசுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். கிறித்தவப்பாடல்களை பாடிய பலரை மக்கள் அறிவதில்லை. அவர்களையும் அறிமுகம் செய்து எழுதலாம்

ஜெசிந்தா, மதுரை

அன்புள்ள ஜெசிந்தா,

கிறித்தவப்பாடல்களுக்கு எழுபதுகள் வரை இருந்த ஒரு இயல்பான தன்மை பிற்பாடு இல்லாமலாயிற்று. சொல்லப்போனால் எல்லா பக்திப்பாடல்களிலும் இந்தச்சரிவு நிகழ்ந்தது. காரணம் ஒலிப்பதிவு வசதி மிகுந்து யாரும் கேசட் வெளியிடலாமென்ற நிலை. தரமற்ற பாடல்கள் குவிந்து சமீபத்தில் வந்த நல்ல பாடல்களை அப்படியே குப்பைகள் மூடிவிட்டன

ஜெ

========================================

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு.,

வணக்கம்.தங்களுடைய வலைத்தளத்தை தொடர்ந்து படித்து

வருகிறேன்.

தாங்கள் விரும்பி கேட்கும் பழைய கிறிஸ்துவ பாடல்களில்

சிலவற்றுக்கான இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன்

தந்தானை துதிப்போமே

http://www.mediafire.com/?2wqc0ynmjg0

கேளுங்கள் தரப்படும்

http://www.mediafire.com/?3yzmzm1rwii

சர்வலோகாதிபா நமஸ்காரம்

http://www.mediafire.com/?1dwwnihcjth

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

http://www.mediafire.com/?zndmotzyynw

இயேசு ரட்சகர் பெயரைச்சொன்னால் எதுவும் நடக்குமே

http://www.mediafire.com/?yemmtdd2z2z

ஏசுபிரான் எங்கள் ஏசுபிரான்

http://www.mediafire.com/?u2nymimozym

என்னுடைய தொகுப்பில் உள்ள மேலும் சில பக்திப்பாடல்களும் .,

சொற்பொழிவுகளும் கீழ்கண்ட இணைப்பில் இருக்கிறது .

http://www.mediafire.com/?76dclxbvcr77b

அன்புடன்

ரவி

முந்தைய கட்டுரைசந்திப்புகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல் 3