வசந்தபாலனின் வெற்றி

31CP_VASANTHA_BALAN_738260g

 

தமிழக அரசின் திரைவிருதுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அரசுத்துறைகள் ஒவ்வொன்றும் மையத்தை நம்பியிராமல் உரியமுறையில் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கியிருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. கல்வித்துறைச் செயல்பாடுகளைப்பற்றி மிகவும் பாராட்டுக்கள் எளிய மக்களிடமிருந்தே வரத்தொடங்கியிருக்கின்றன.

 

2009க்கான திரைவிருதுகளில் சிறந்த நடிகை, இயக்குநர் ஆகிய பிரிவுகளில் அங்காடித்தெரு விருதுபெற்றுள்ளது. 2104க்கான விருதுகளில் காவியத்தலைவன் 9 விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது சித்தார்த்துக்கும், வில்லன்நடிகருக்கான விருது பிருதிவிராஜுக்கும். சிறந்த குணச்சித்திரநடிகருக்கான விருது நாசருக்கும் குணச்சித்திரநடிகைக்கான விருது குயிலிக்கும் காவியத்தலைவனுக்காக வழங்கப்பட்டுள்ளது.

 

சிறந்த பின்னணிப் பாடகர் – ஹரிசரண் சிறந்த ஒளிப்பதிவாளர் – நிரவ்ஷா, சிறந்த கலை இயக்குநர்  – சந்தானம் ,சிறந்த ஒப்பனைக் கலைஞர் – பட்டணம் முகம்மது ரஷீத் சிறந்த தையற் கலைஞர் – செல்வம் ஆகிய விருதுகளும் காவியத்தலைவனுக்கு வழங்கப்பட்டுள்ளன

 

வசந்தபாலனின் தனிப்பட்ட வெற்றி இது. சமரசமாகாமல் நின்றிருக்கும் அவருடைய பிடிவாதத்திற்கான பாராட்டும்கூட. நண்பரை இத்தருணத்தில் நெஞ்சோடு தழுவி வாழ்த்துகிறேன்

முந்தைய கட்டுரைகலைப் பயிற்சிவகுப்பு: ஏ.வி மணிகண்டன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53