அட்டை -கடிதம்

nuru

 

அன்புள்ள ஜெ

 

அட்டைகள்

நூறுநாற்காலிகளுக்கு மலையாளத்தில் வரையப்பட்டவற்றில் மிகச்சிறந்த ஓவியம் இது. ஒரு நிகழ்ச்சியில் காட்சிக்கு வைத்திருந்தார்கள். ஒரு பதிப்பகம் இதை அட்டையாகவும் போட்டிருந்தது என நினைக்கிறேன். என்ன ஒரு அற்புதமான வாசிப்பு என நினைத்துக்கொண்டேன்

 

அருண்

muj

உங்களது அட்டைகள் பதிவை வாசித்ததும் யானை டாக்டர் கதையையும் நூறு நாற்கலிகள் கதையையும் ஒருமுறை கூட வாசித்தேன்.உடம்பு அதிர்ந்து கொண்டே இருக்கிறது.சக உயிர்கள் குறித்த இளக்காரம் மனிதனை போல் வேறு உயிர்களுக்கி இருக்குமோ என்னவோ?யானை டாக்டர் என் மர்மஸ்தானத்தை பிடித்து உலுக்கியது போன்ற மூச்சுமுட்டலை உணர்ந்தேன்.

 

தக்கலையில் என் தகப்பானார் வீட்டின் பெயர் கொம்பானை வீடு என்பதாகும்.அந்த காலத்தில் அந்த வீட்டில் யானையை வளர்த்து வந்திருக்கிறார்கள்.எனது மாமா ஒருவர் யானைபாகனாக அந்த யானைக்கு இருந்திருக்கிறார்.அவர் கொம்பானையை பற்றி சொல்லும் கதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை.யானையை குறித்து நான் கேட்ட கதைகளில் யானைக்கு பார்க்கும் மருத்துவமும் அது சார்ந்த கதைகளும் ரசனையானவை.என் தகப்பனாரின் சித்தப்பா அவுக்காருபிள்ளையே யானை டாக்டர் ஆவார்.யானை வைத்தியர்.முன்றாவது வரை படித்தவர்.யானைக்கு அறுவை சிகிட்சை முதற்கொண்டு அத்தனை மருத்துவமும் செய்வார்.

 

உங்கள் கதையை படித்தபோது கொம்பானையின் ஞாபகமும் என் உப்பாவின் ஞாபகமும் வந்தது.வாப்பாவும் யானைக்கு மருத்துவம் பார்த்ததாக சொல்லி இருக்கிறார்.யானையின் சாணத்தை வைத்தே அதற்கு என்ன நோய் என்று கண்டுபிடிப்பார்களாம்.இந்த கதை யூனிவர்சலிசத்தை உணர்த்தும் கதையாகும்.எல்லாம் அவனே என்ற சூபியிசத்தை அல்லது அத்வைதத்தை சொல்லும் யூனிவர்சலிசம் அபூர்வ படைப்புகளின் உள்ளுறையாகும்.

 

சகல உயிர்களின் உணர்வெழுச்சியையும் மனவெழுச்சியாக கொண்ட நூறு நாற்கலிகள் மனிதத்தை கிளர்ந்தெழச்செயத அற்புத எழுத்தாகும்.சூபியின் அகத்தை கொண்ட புறமாகும் இவை.ஒரு சூபியல்லாத ஒருவரால் இப்படி எழுத சாத்தியம் இல்லை.

 

இவற்றை படித்தபோது மவுலானா ரூமியின் வாக்கு நினைவுக்கு வந்தது.நெருங்கி வா..நானே நீ என்பதை உணர்.

 

அன்புடன்

எச்.முஜீப் ரஹ்மான்

தக்கலை.

 

அன்புள்ள முஜீப்

 

ஏறத்தாழ இதே நிகழ்ச்சியை  கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த அபுபக்கர் என்னும் நண்பர் சொன்னார்.  அவருடைய கொடையாக ஒரு யானையை வாங்கி தர்காவுக்கு அளித்திருக்கிறார். அந்த யானையை வெறிநாய் கடித்துவிட்டது. பாகன் அவர்களிடம் சொல்லாமல் மருத்துவம் பார்த்திருக்கிறார். யானை ரேபீஸ் வந்து இறந்துவிட்டது. அந்த யானையின் படத்தை அட்டையில் வெளியிட்டு அவர் யானைடாக்டரின் ஒரு பதிப்பை வெளியிட்டிருக்கிறார். நாங்கள் பொதிகைமலைப்பயணம் சென்றபோது எங்களை வந்து சந்தித்து ஒரு பிரதி தந்தார். யானை இருக்கவேண்டிய இடம் காடு என உணர்ந்ததாகச் சொன்னார்

 

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52
அடுத்த கட்டுரைமலேசியா -சிங்கப்பூர் குடியேற்றம்