என்ன வேண்டும் ? வலிமை வேண்டும்!

Monsoon_Trip_Day_02-1200603

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம். கண்கள் இப்போது தேவலையா?

நீண்ட அனுபவங்கள் எழுதவேண்டும் என்று சொல்லிக்கொண்டே ‘சோம்பி திரிந்துவிட்டேன்’ அத்தோடு தொடர்ந்து கொண்டேயிருந்த அடுத்தடுத்த வேலை மற்றும் வேளாண்  பணிகள் மேலும் மேலும் அழுத்தும் விதமாக தோட்டத்தில் இரண்டாவது முறையாக, முதல் முறை புது 100 அடி ஹோஸ் பைப், திருட்டு கொடுத்துவிட்டு மனதை தேற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு வேளாண் அடிப்படை அறிவு இல்லாமை, ஆதலால் பல தகவல் கிடைக்க எதை எடுப்பது எப்படி தொடுப்பது என்ற குழப்பம் இதன் இடையே இன்றைய இந்த கட்டுரையை வாசித்தேன் (http://www.jeyamohan.in/100321#.WWWiPceCnBs), ‘சோம்பி திரியேல்’ நினைவூட்டியது. எனது குறிக்கோளுக்கு, முதலில் வேளாண்  பழக, அதை ஆரோக்கியமான் முறையில் பழகமுடிந்தால் இன்னும் நன்றே! கீழே தொடர்வதற்கு முன்னால், தாங்கள் உரைத்த இயந்திரங்கள் இன்றியமையாததாக இருக்கும் என்பதை முழுமையாக ஆமோதிக்கின்றேன். வேலை ஆட்கள் கூலி என்பது தனி பெறும் செலவு! இது இன்றை நிலையில் அனைத்து துறைக்கும் பொருந்தும்.

மாசி கடைசியில் கிணறு பணிகள் முடிவடைந்து அடுத்தாக மாற்று சூரிய சக்தி எற்பாடுகள் கவனித்தோம், அரசு வங்கி சார்ந்து பணிகள், தொடர் சிக்கல், முடியும் ஆனால் முடியாது என்ற ரீதியில் தான், பிறகு இணையத்தில் அலசியதில் நபார்டு இந்த வகை மானியத்தை நிறுத்தி வைத்துள்ளது. இந்த கிராமபுறங்களில் மானிய தொழில்நுட்ப பணிகள் அமைத்து தரும் நபர் ஆரம்பம் முதலே அநேக உதவிகள் எங்களுக்கு, அவர் வழியாக ஒரு மாற்று வழி ஏற்பாடாயிற்று, தனிப்பட்ட உடன்படிக்கையின், நபார்டு மீண்டும் திட்டத்தை தொடங்குகையில் (நம்பிக்கை தானே எல்லாம்) நிறுவனம் மானியத்தை பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் மானிய விலையிலேயே வேலைகள் முடிந்தது, அமைத்து தரும் நிறுவனம் முன் வர காரணம் அவர்களிடம் அதிக உபகரணங்கள் தேங்குகிறது. வேலைகள் முடிந்து விட்டது என்பதற்கு பின்னால் அதிக மனஉளைச்சல், இதுவும் அதிக ஒருங்கிணைப்பு தேவைப்படும் வேலை தான், அனைத்து அவசியங்களும் கடைசியில் தான் சொல்லப்படும் அரக்கபரக்க ஏற்பாடு செய்யும்படி ஆகிவிடும். ஒரு உதாரணம், அவர்கள் சொல்லும் தேவை ஒரு கொத்தனார் இரண்டு சித்தாள், வேலை தொடங்கும் அன்று சித்தாள் நாங்கள் வானம் தோண்டுவதில்லை என்பார்கள், பின் மெய்காட்டாள் அவர் வேலை மத்தியம் முடியும் அப்படி அடுத்த அடுத்த வேலை தள்ளும், இதற்கு பிறகு, கலவை இடத்தில் இருந்து அடித்தளம் அமைக்கும் இடம் நடக்கும் தொலைவிலிருந்தால் ஆட்கள் அதிகம் வேண்டும் என்பார்கள் இப்படியாக நாம் பதம் பார்க்கப்படுவோம் ;). திட்டம் சித்திரை அக்னிதொடுப்பிற்கு முன்பாக அமைக்கவேண்டும் என்பது ஆனால் பணி முடிந்தது சரியாக தொடுப்பு முடிந்த பின்னால் தான். என்ன சொன்னாலும், முதன் முறையாக தண்ணீர் பாயந்த அழகு அந்த கனம் அதுவரை நம்மை துளைத்த அனைத்து உளைச்சலும் அப்படியே காற்றில் பறந்து விடுகிறது.

இப்போதல்லாம் என்ன வேண்டும் என்று கேட்டாலே, குழந்தைகள் விளையாடும் ‘டக் டக் யாரது திருடன் என்ன வேண்டும்..’ கேட்டாலும் வலிமை வேண்டும் என்று மனதில் சொல்லிக்கொள்கிறேன். என்ன வேண்டும் வலிமை வேண்டும்! காரியம் முடியும் வரை கனங்களை கடந்து வர, எதுவும் கடந்து போகும்!!

என் தந்தை மிகுந்த ஆர்வத்துடன் களப்பணியில் உள்ளார், காடு அமைத்து ஆறு மாதங்கள் முடிந்து தண்ணீர் வசதி ஏற்பாடானதும், என்ன பயிர் போடலாம் என்று விறுவிறுவேன விசிராக்க, அக்கம் பக்கம் தண்ணீர் இருந்தால் நெல்லு போடுங்க என்று பரிந்துரை. நெல் வளர்ப்பு சொல்லுவதை விட அதிகம், களைக்கொல்லி, உரம், பூச்சிக்கொல்லி என்று தான் கிராமத்தினர் அறிவுரையிருந்தது ஒரு பீதியாகவே இருந்தது :). தனிப்பட்ட எண்ணம் அதற்கு தண்ணீர் அதிகம் வேண்டும் என்பது ஆனால் அதிகம் சொல்லி அதை வேண்டாம் என்று சொல்ல தோன்றவில்லை. முதலில் திரு. ஆர்.எஸ்.நாராயணனிடம் கேட்க அவர் செய்யுங்கள் எப்பதான் கத்துக்கிறது என்றார் ஆனால் அவர் பரிந்துரை நெல் அல்லாதவைகள், தானியம், பயறுகள், மூலிகைகள். மூலிகைகளுக்கென்று தனி வாரியம் இருந்தால் நன்றாக இருக்கும், இப்பயிறுக்கு அதிகம் விசாரித்து விட்டுவிடுங்கள் என்றார். அத்தோடு, இன்னொன்றும் கேட்டேன், தனிப்பட குழுமங்களாக இயங்கும் (வெகு நாட்களாக இருக்கிறார்கள் திட்டத்தொடு செயல்படுகிறார்கள் இணையமும் உண்டு) சிலரை தொடர்புகொண்டு அறிவுரை கேட்களாமா என்று அதற்கு கேட்ளாம் உங்கள் விருப்பம் ஆனால் அந்த குழுமங்கள் நிறவனங்கள் போல் இயங்குபவை அதாவது நீங்கள் சேவை கேட்பவர் அவர்கள் சேவை அளிப்பவர்கள் என்ற முறையில் தான் தொடர்பு இருக்கும் என்றார். அதற்கு உங்கள் அருகாமையில் இருக்கும் தோட்டங்கள், வேளாண்  அதிகாரி அவர்களிடம் தொடர்பில் இருங்கள் என்றார்.

அடுத்தாக, சேகரிப்புகளிலிருந்து தொடர்பு எண் கண்டு திரு. கிருஷ்ணகிரி தண்டபாணி அவர்களிடமும் பேசினேன், அருகாமையில் அறிவுரை பற்றியும் பேசினோம், பயன்படுத்துகிறவர்கள் பயப்படுவதில்லை அதை பற்றி அதிகம் தெரியாவர்கள் படித்ததை மட்டும் கொண்ட அறிவு ஆதலால் உங்கள் அந்த பயம் அத்தோடு அளவோடு பயன் படுத்தினால் நல்லது தான் என்றார், பியர் செய்யலாம் அடிப்படைகளை பற்றி பேசிவிட்டு ஆனால் நெல் உங்கள் ஊர்களில் உண்டா என்று கேளுங்குள் மற்றும் பிற விபரங்கள் கேட்டு மீண்டும் அழையுங்கள் என்றார். விசாரித்துக்கொண்டேயிருக்கிறோம், வேளாண்  அதிகாரி வந்தார் அவர் நீங்கள் முதல் முறை என்பதால் முதலில் நெல் பாதியாகவும், பாதி உளுந்து பயிரிடுங்கள் என்றார். சிறு விவசாயி சான்றிதழ் பெற்றிடுங்கள் என்றார். இங்கிருந்து பயணிக்கவேண்டும்.

இப்படி போய்க்கொண்டிருக்கையில் தான் தந்தை அழைத்து அந்த கேபிள் கூட 10 மீட்டர் வாங்கிருந்தோமே என்னாச்சு என்றார், அது அப்போதே முடிந்துவிட்டது, ஏன் என்றதும் என்ன தம்பி சொன்ன உங்களுக்கு புரியமாட்டேங்குது 10 கீ.மில இடத்த வாங்கி இருக்கவும் முடியல காவலுக்கு ஆளையும் இருக்கவிடமாட்டாங்க போல் முனியிருக்கு அது இருக்கு இது இருக்குனு, கேபிள திருடிட்டு போயிட்டாயிங்க 25 மீட்டர் தகடுகலயிருந்து மோட்டாருக்கு போரத அத்தோடு தகடுலிலிருந்து செயலிபெட்டிக்கு வரும் அனைத்து கேபிளையும் பிச்சு இணைப்பு கேபிள் 30 மீட்டர் இருக்கும் போல அனைத்தையும் தூக்கிட்டு போயிட்டாயிங்க. என்ன சொல்லுவது என்று தெரியவில்லை தந்தை பதிலையும் எதிர் பார்க்கவில்லை சரி பார்ப்போம் என்று அழைப்பை துண்டித்துவிட்டார். மனதில் ஒரு வித பதட்டம் வெளியில் அமைதி கடைபிடித்தேன். பின் அனைத்தும் முன்னரே அனைவரும் அறிவுறித்தியத்து தான் ஆள் வைக்கவேண்டும் வேறு செய்யவதற்கு ஒன்றுமில்லை என்று தொன்றியது. இதுவும் கடந்து போகும்! முன்னோர்களை பிரார்த்தித்தேன்.

இந்த கடித்தை எழுதிமுடிக்கும் பொழுது தந்தை அழைத்து கேபிள் போட்டாச்சு, தானே அரை நாள் தண்ணீர் பாயிச்சியதாக சொன்னார், 40 ஆண்டு காலம் வங்கி மற்றும் கணக்கு பணிகள் மட்டுமே பார்த்தவர் இன்று முழு மனதொடு உடலால் உழைத்திருக்கிறார். ஆள் வரல எவ்வளவு நாள் தள்ளுரது அதான் நானே பார்த்துட்டேன் நம்மளும் பார்க்கத்தானே வேண்டும் என்றார். என்னப்பா சொல்லுரிங்க என்றேன் புன்முறுவல் மட்டும் கேட்க முடிந்தது.

முன் இணைப்பில் இருந்த திரு. பாலாஜி சங்கர் அவர்கள் இணைப்பை வாசிக்கவேண்டும். எத்தனை வாசித்தாலும் அனுபவம் மட்டுமே பாலபாடம் இத்தொழிலில்.

பாலபாடம் சிறு குறிப்புகளா ஒழுங்குபடுத்தலாம் என்று தோன்றுகிறது;

புதிதாக தோட்டம் வாங்குவதாயிருந்தால் பல விசயங்கிளில், முக்கியமாக – மின்சார வசதி இருந்தால் சால சிறப்பு!

புதிய விவசாய மானிய மின் இணைப்பு என்றால் (எந்த சலுகைகலும் இல்லாத வகையில்) – இணைப்பு கேட்ட பின், அதன் அடிப்படையில் விவசாய விலை (ரூ.4) இணைப்பு கோர வேண்டும் உடனடி இணைப்பிற்கு. அதன் வேகத்தில் தான் நடக்கும் முக்கியமாக அருகில் 100 அடியில் மின் கம்பம் இருந்தால் தான் அதுவும் நடக்கும்.

எந்த ஒரு வேலையும் கேட்பது போல படிப்பது போல அது ஒன்றாக மட்டும் இருப்பதில்லை, அதனுள் பல படிகளாக வேலைகள் இருக்கும், நெருங்குகையில் தான் தெரியும், ஆக தயாராகயிருக்கவேண்டும்.

சிறு விவசாயி – அங்கே சில ‘க்’குகள் பாசனவசதியற்ற புஞ்சை (பாசன வசதியிருந்தால் 2.5 ஏக்கர்), தனி நபருக்கு 5 ஏக்கர் குறைவாக இருத்தல் வேண்டும், குடும்பத்தில் வேறு யாருக்கும் நிலம் இருக்ககூடாது.

நன்றி!

நாராயணன் மெய்யப்பன்

***

ஒற்றை தேங்காய்க்கு வந்த சோதனைகள்
கன்றுகள் காடாகவேண்டும்!
இயற்கைவேளாண்மை -கடிதம்
அப்பா, இயற்கைவேளாண்மை -கடிதங்கள்
கடைநிலை பொருளாதாரம் – அறுந்த நூல்கள்
அறம்செய விரும்பு -தகவல்கள்
முந்தைய கட்டுரைபெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு
அடுத்த கட்டுரைஐயையா, நான் வந்தேன்