சிறிய மனங்கள்

a

ஜெ,

உங்கள் இரு கட்டுரைகளைப்பற்றி முகநூலில் வந்த இரு எதிர்வினைகள். மன்னிக்கவும் உங்களை இந்த எல்லைக்கு இழுக்கவில்லை. ஆனால் நீங்கள் எங்கோ ஒருபக்கம் கடுமையான உழைப்புடன் , சொந்த அவதானிப்புகளுடன் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். மறுபக்கம் அது இப்படித்தான் வாசிக்கப்படுகிறது. இதை நான் உங்கள் கவனத்திற்குக்கொண்டுவருவது இதனால்தான்

ரவிச்சந்திரன்

*

இந்த நபர் எவ்வளவு அற்பன் என்பதற்கு இந்தச் சொல்லாட்சி ஒரு சான்று. ஏலவே ‘இடதுசாரி’ என வழங்கிவரும் ஒன்று ஏன் ‘இடங்கை’ என ஆகிறது? இனி பொச்சுக் கழுவப் பயன்படும் ‘பீச்சாங்கை’ இலக்கியம் என இந்த வெறியன் எழுதக் கூடும். பீ கழுவுவது இழிவு அன்றோ? இந்த ஆளின் முகத்தில் இடங்கையில் ஒரு கூடை பீயை அள்ளிப் பூச வேண்டும் போல இருக்கிறது. எத்தனை வெறி கொண்ட மனம்!

யமுனா ராஜேந்திரன்

*

கட்டுரை சிறப்பாக இருக்கிறது. புத்தகத்தை படிக்கத் தூண்டுகிறார் ஜெயமோகன்.

அதே நேரத்தில் தனது சூட்சும கிள்ளுதலையும் செய்கிறார்.

1ஒன்று, ஸ்டாலின் ராஜாங்கம் ஒரு தலித் எழுத்தாளர் என நிறுவுகிறார் .

பிராமணர்களுக்காகவும், இந்து அரசுக்காகவும் பரிந்து பேசும் ஜெயமோகன் ஒரு பொது எழத்தாளராக இருக்கும்போது இந்துக்கள் இடையில் இருக்கும் மனித உரிமை மீறல் என்னும் முரண்பாட்டை பேசுபவர் தலித் எழுத்தாளராகி விடுகிறார். நுட்பமான வகைபடுத்தல் இது.

இரண்டாவது, அம்பேத்கரை பாமரன்கள் இழித்துப் பேசுவதைப்போல ” அம்பேத்கார்” என்று குறிப்பிட்டு சாதி இந்துக்களுக்கு தனது நுட்ப எள்ளலை ரசிக்கத் தருகிறார்.

மூன்றாவது, அம்பேத்கரியலின் தத்துவார்த்த முன்னெடுப்பக்களின் போதெல்லாம் அவர்களின் செயல்களை காந்தியின் சிறுபிள்ளைத் தனங்களோடு பொருத்திப் பார்த்து அவர்களை சாதீயத் தனங்களாக சுருக்கி சித்தரிக்கும் நரித்தன அரசியல் செய்வது.

இவை மூன்றையும்தான் ஜெயமோகன் தனக்கே உரிய பாணியில் இந்தக் கட்டுரையில் செய்திருக்கிறார்.

மா. தொல்காப்பியன்

*

அன்புள்ள ரவி,

இடங்கை வலங்கைப்பிரிவினை என்பது தமிழகத்தில் 10 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய சமூகப் பிரிவுமுறை. அதில் இடங்கைப்பிரிவு பொதுவாக அடித்தள மக்களை, உழைப்பாளிகளை குறிக்கிறது.

ஸ்டாலின் ராஜாங்கத்தைப் பற்றி பேசும்போது “ஐயமே இன்றி இந்த தலைமுறையின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் என்று ஸ்டாலின் ராஜாங்கத்தை இந்நூலை மட்டுமே ஆதாரமாக்கிச் சொல்ல முடியும்” என்றுதான் கட்டுரை சொல்கிறது. தலித் மட்டுமே என குறுக்கவில்லை.

இவை மிகச்சிறிய மனங்கள். சிறியவற்றில் திளைப்பவை.காழ்ப்பை உண்டு காழ்ப்பில் நெளிந்து அதிலேயே மடிபவை.எளிய வரலாற்றைக்கூட இவற்றுக்கு எவரும் புரியவைத்துவிடமுடியாது

ஜெ

***

இடங்கை இலக்கியம்
நம் நாயகர்களின் கதைகள்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48
அடுத்த கட்டுரைசீ முத்துசாமி நேர்காணல் -நவீன்