என் மலையாள நூல்கள்

co

[படம் என் தீவிரவாசகியான ரம்யாவின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்து. ரம்யா நான் மலையாளத்தில் எழுத ஆரம்பித்தபோது பள்ளி மாணவி. அன்றுமுதலே தொடர்பில் இருக்கிறார்

ஜெ

***

உங்கள் நூல்கள் மலையாளத்தில் ஏராளமாக வந்துள்ளன. ஒரு புத்தகக் கண்காட்சியில் நிறைய நூல்களை பார்த்தேன். ஒரே நூலே பலர் வெளியிட வந்துள்ளது என நினைக்கிறேன். என்னென்ன நூல்கள் வந்துள்ளன?

ராம்பிரசாத்

***

அன்புள்ள ராம் ,

மலையாளத்தில் வெளிவந்துள்ள நூல்கள் 1. நெடும்பாதையோரம் 2.உறவிடங்கள் 3 நூறுசிம்ஹாசனங்கள் 4 ஆனடோக்டர்

மிகக்குறைவாகவே நூல்கள் வந்துள்ளன. காரணம் என்னால் மலையாளத்தில் தட்டச்சு செய்யமுடியாது. கையால் எழுதுவது கடினம். ஆகவே நான் மலையாளத்தில் மிகக்குறைவாக எழுதுபவன். குறைவாக எழுதினாலும் மலையாளத்தில் பிற எவரிடமும் இல்லாத தனித்த மொழிநடை ஒன்று எனக்கு உண்டு என்று விமர்சகர்கள் சொல்வார்கள். என் நூல்கள் மலையாளத்தில் ஆயிரக்கணக்கில் விற்றுள்ளன. குறிப்பாக நூறுசிம்ஹாசனங்கள் இரண்டுலட்சம் பிரதிகளைத் தொடுகிறது. யானைடாக்டர் விரைவில் அதை அடையும்

ஜெ

***