கிராதம் – செம்பதிப்பு முன்பதிவு

kiratham

கிராதம் – வெண்முரசு நாவல் வரிசையின் பன்னிரண்டாவது நாவல். ஜெயமோகன் மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். அதன் பன்னிரண்டாவது நூல் இது.

இந்த செம்பதிப்பில் வண்ண ஓவியங்கள் உண்டு.வேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை கனவுகளாகவும், உருவகங்களாகவும் முன்வைக்கிறது கிராதம். வருணனை முதல் தேவனாகக் கொண்ட தொல்வேதகாலம் முதல் இந்திரனை முதல் தெய்வமாகக்கொண்ட வேதம் எழுவதுவரையிலான காலம், நாராயணனை முதல்தெய்வமாகக் கொண்ட நாராயணவேதம் எழும் தொடக்கம் இதிலுள்ளது.

அதை அர்ஜுனனின் பயணங்களாக இது சித்தரிக்கிறது. வேதமுதல்வனிடமிருந்து பாசுபதவேதத்தை அர்ஜுனன் பெறும்போது நிறைவடைகிறது. பாண்டவர்களில் அர்ஜுனனுக்கே கீதை உரைக்கப்பட்டது. அவனே வில் வழியாக யோகியானவன். இந்நாவலில் வருவது நாராயணவேதத்தின் உச்சத்தைக் கேட்கும் இடம் நோக்கி அவன் செல்லும் பயணமும்கூட. வேதம் எங்கிருந்தெல்லாம் ஊறியிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்களோ அங்கெல்லாம் அவன் பயணம் நிகழ்கிறது. ஆளுமையின் அனைத்து வடிவங்களிலும் அமைந்து அறிந்து அவன் மீள்வதே இதன் கதை.

உலகக் காப்பியவரலாற்றில் மாவீரர்களின் பயணங்களை மெய்ஞானப் பயணங்களாகச் சித்தரிப்பது பொதுவான வழக்கம். ஒருபக்கம் எளிய வீரகதையாகவும் மறுபக்கம் அகப்பயணமாகவும் தோன்றும் ஒரு கதையாடல் தொன்மைக்காலம் முதலே இங்கு இருந்துள்ளது. அந்த காவியப்போக்கு கொண்ட நாவல் இது.

இதை நீங்கள் விபிபியில் ஆர்டர் செய்யமுடியாது.

இப்புத்தகம் உங்களுக்கு 2017 ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும்.

முன்பதிவு செய்ய கடைசி நாள் – ஜீலை 25, 2017.

முன் பதிவு செய்பவர்களுக்கு தபால் செலவு கிடையாது. எனவே ஆர்டர் செய்யும்போது ‘ரிஜிஸ்டர் புக் போஸ்ட்’ என்பதைத் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.

செக், டிடி, எம் ஓ மூலம் முன்பதிவு செய்ய விரும்புகிறவர்கள் டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

ஜெயமோகன் கையெழுத்து தேவைப்படுபவர்கள், நீங்கள் முன்பதிவு செய்தபின்பு, எங்கள் பிரதிநிதி உங்களைத் தொடர்புகொள்ளும்போது அதைத் தெளிவாகக் குறிப்பிடவும்

கிழக்கு இணையதளம்