அபிப்பிராய சிந்தாமணி -கடிதங்கள்

Abippiraya  Sinthamani_9788184936490_KZK - W

அன்புள்ள  ஜெயமோகன்,

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புத்தகத்தைப் படித்து ரசித்து ரசித்து சிரித்து மகிழ்ந்து இன்னும் சிரித்துக்கொண்டேஇருக்கின்றேன்.

அடேங்கப்பா! என்ன ஒரு கிண்டல்,நக்கல்,பகடி,எதார்த்தம்.

தென்குமரித் தமிழ் விளையாட்டு.அற்புதம்.கெட்ட வார்த்தைகள் வெகுஇயல்பு.எங்க ஊர் மக்கள் மாதிரியே சில குணாதிசயங்கள்.

இரண்டு மூன்று நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த

இரவில் உங்கள்  எழுத்து  உந்திய சிரிப்பு சத்தம் கேட்டு என் தம்பி ஓடிவந்து  என்ன ஆயிற்று என்று கேட்டு அவனுக்கும் சிலவற்றைப்படித்துக்காட்ட ஒரே கலாட்டா.

அதுவும் அந்த ஏரிக்கரையின்மேலே போற பெண்மயில்  அய்யோ!!.ஷெரீப் இருந்திருந்தால் சிரித்துக்கொண்டே இரண்டாம்முறை செத்திருப்பார்.

இன்னும் நிறைய.

உடல்  தேறிவிட்டது.நன்றி  நண்பரே.

இயகோகா சுப்பிரமணியம்.

***

அன்புள்ள இயகோகா அவர்களுக்கு

நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நானே அவ்வப்போது எல்லாவற்றையும் பார்த்துச் சிரிக்கவேண்டியிருக்கிறது. இல்லையேல் கடந்துசெல்ல முடியாது

ஜெ

***

அன்புள்ள ஜெ

அபிப்பிராயசிந்தாமணியின் பல கட்டுரைகளை இணையத்தில் வாசித்திருக்கிறேன். அபூர்வமான நகைச்சுவை. பல இடங்களில் வாய்விட்டு வெடித்துச்சிரித்தேன் [வாயுவிட்டு என்று டைப்போ வந்துவிட்டது] வாழ்த்துக்கள் ஜெ. உங்கள் இன்னொரு முகம். அதில் கிளாஸ் என்பது பத்தினியின் பத்துமுகங்கள். என் மனைவியிடம் வாசித்துக்காட்டி அவளுடைய பதினொன்றாவது முகம் தெரியவந்தது

மாதவன்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 40
அடுத்த கட்டுரைஇலக்கியநட்பு, புகைப்படங்கள்…