கீதையை ஒரு தத்துவநூலாக ஆன்மீகநூலாகவே நான் முன்வைக்கிறேன். அது செய்-செய்யாதே என ஆணையிடும் நெறிநூல் அல்ல. அதன் அடுக்குகள் பல வகையானவை.
நெறிநூல்கள் காலத்துடன் பிணைந்தவை. காலமாற்றத்தில் பொருந்தாமலாகக்கூடியவை. தத்துவநூல்கள் அப்படி அல்ல. அவை அடிப்படையான வினாக்களை எழுப்பி விடைதேடுபவை. அவை நின்றுபேசும் சமூகதளத்தின் இயல்புகள் அவற்றில் இருக்கும், அவற்றை கடந்து அவை பேசும் தத்துவவினாவை மட்டுமே தத்துவ மாணவன் எடுத்துக்கொள்வான்