கடவுளும் கவர்மெண்டும்

  கடவுளும் கவர்மெண்டும் ஒன்று அதைத் தூற்றாதே; பழி சேரும் உனக்கு. அதற்கு ஆயிரம் கண்கள்: காதுகள். ஆனால் குறையென்றால் பார்க்காது கேட்காது கை நீளும்; பதினாயிரம் கேட்கும், பிடுங்கும். தவமிருந்தால் கொடுக்கும். கவர்மெண்ட் பெரும் கடவுள் அதைப் பழிக்காதே பழித்தால் வருவது இன்னும் அதிகம் கவர்ன்மெட்தான்.   கி. கஸ்தூரி ரங்கன் [ஆகஸ்ட் 1965]

Permanent link to this article: https://www.jeyamohan.in/122037

தக்கவைக்கும் இயந்திரம்-பிலிப் கே டிக்

தமிழாக்கம் டி ஏ பாரி   டாக்டர் லேப்ரின் கண்களை மங்கலாக மூடியவாறே தனது புல்வெளி நாற்காலியில் சாய்ந்தார். போர்வையை முழங்காலுக்கு மேலே இழுத்துவிட்டுக்கொண்டார்.   ”அதாவது?” நான் பேச்சுக் கொடுத்தேன். இறைச்சி சுடும் கனலடுப்பின் அருகே நின்று என் கைகளை தேய்த்துக் கொண்டிருந்தேன். அதுவொரு தெளிவான குளிர்நாள். லாஸ் ஏஞ்சல்ஸின் பிரகாசமான வானத்தில் கிட்டத்தட்ட மேகங்களே இருக்கவில்லை. லேப்ரினுடைய அந்த நடுவாந்திரமான வீட்டுக்குப் பின்னால் மலையடிவாரத்தின் எல்லை வரை மரங்கள் அடர்ந்த பசுமையின் நீட்சி இருந்தது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121958

ஜப்பான் – ஷாகுல் ஹமீது

  ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,   தற்போது கப்பல் காரன் டைரி என சில கப்பல் அனுபவங்களை பதிவு செய்து வருகிறேன் .ஜப்பான் குறித்து எனது பார்வையை எழுதவேண்டுமென நினைத்து நீண்ட நாட்களாக தள்ளிப்போய்கொண்டிருந்தது.உங்கள்  ஜப்பான் பயணம் பற்றி தளத்தில் கண்டதும் நீங்கள் ஊர் திரும்பும் முன் எழுதிவிட வேண்டுமென நினைத்ததால் எழுந்த வேகத்தில் எழுதிய பதிவு இது .   அன்புடன் , ஷாகுல் ஹமீது . டோக்கியோ உரை பற்றி… ஜப்பானிலிருந்து திரும்பினோம்…   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121974

விஷ்ணுபுரம் கடிதம்

விஷ்னுபுரம் நாவல் வாங்க https://vishnupuram.com/ ஜெயமோகன் ,   எப்படி இந்த பேரூவகையை வார்த்தைகளில் கடத்துவது என தெரியவில்லை. விஷ்ணுபுரம் நாவலை இன்றுதான் வாசித்து முடித்தேன். எட்டு நாட்கள் நூறு நூறு பக்கங்கள் என கணக்கிட்டு அண்ணா நூலகத்தில் அமர்ந்து வாசித்து முடித்தேன். கடந்து போகவே முடியாத கனவு என்று இந்த நாவலை நினைத்திருந்தேன். இந்த விடுமறை அந்த கனவை சாத்தியப்படுத்திவிட்டது.   சேமித்து வைக்கப்பட்ட வாசிப்பின் அற்றலை இந்த நாவல் கோருகிறது. அந்த ஆற்றல் வெறும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121971

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-46

மென்மழை நின்றுகொண்டிருந்த குருக்ஷேத்ரக் களத்தில் கௌரவப்படைகள் அணிவகுத்து சூழ்கை அமைத்தன. படைக்கலங்களும் தேர்களின் உலோகமுகடுகளும் ஒளியென்றும் மெல்லிருளென்றும் மாறி மாறி விழிமாயம் காட்டிய நீர்த்திரைக்குள் மின்னி திரும்பின. புரவிகளின் குளம்படி ஓசைகளும் சகட ஒலிகளும் ஆணைகளின் பொருட்டு எழுந்த கொம்பொலிகளும் சங்கொலிகளும் நீர்த்திரையால் மூடப்பட்டு மழுங்கி கேட்டன. கூரையிடப்பட்ட காவல்மாடங்களில் எழுந்த முரசொலிகள் இடியோசைகளுடன் கலந்து ஒலித்தன. முரசுத்தோற்பரப்பு சாரல் ஈரத்தில் மென்மை கொள்ளாதிருக்கும்பொருட்டு காவல் மாடத்தில் அனல்சட்டிகளை கொளுத்தி தோலை காய்ச்சிக்கொண்டிருந்தார்கள். மழைக்குள் நூற்றுக்கணக்கான காவல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122019

காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா

  வழக்கமான அரசு அல்லது தனியார் துறைகள் முன்வைக்கும் பெரும் திட்டங்கள் அனைத்தும், வளங்களையும், தொழில்நுட்பங்களையும் முன்வைத்துத் திட்டமிடப்படுபவை. அவை மக்கள் நலனுக்கென்றாலும், நிதியாதாரங்களும், தொழில்நுட்பமும் இல்லாமல், அவை துவங்கப்படுவதில்லை. அதிலும், தனியார் துறைத் திட்டங்கள், கூடுதலாக, லாபம் என்னும் குறிக்கோளை முதன்மையாக வைத்துத் துவங்கப்படுகின்றன. அவை மக்களுக்குப் பயன்படுவதாக இருந்தாலும், லாபமே முக்கியக் குறிக்கோள். மக்கள் நலன், அதற்கு அடுத்த நிலையில்தான் இருக்கும். மாறாக காந்தியத் திட்டங்கள் சாதாரண மக்களின் தேவைகளை முன்வைத்து, அதற்கேற்ப தொழில்நுட்பங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121804

இ.பா.வின் ஔரங்கசீப்

Konichiwa Jemo-San,     தங்களுடைய ஜப்பான் பயணம் இனிதாய் செல்கிறது என்று எண்ணுகிறேன். என்னுடைய முதல் சம்பளத்தை அந்நிலத்தில்தான் பெற்றுக்கொண்டேன்.  வாழ்வின்மேல் கொண்டிருந்த பதற்றத்தையும், அவநம்பிக்கையையும் விரட்டியடித்த நிலம். தானியங்கிப் படிக்கட்டுகளில் ஏறக் கற்றுக்கொண்ட காலமது. கிட்டத்தட்ட ஓராயிரம்பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய Self-Service Food Courtல் நமக்கான உணவு தயாரானதை ஒரு சன்னமான பீப் சத்தத்தோடு நமக்குணர்த்தும் கையடக்க கருவிதான், இந்நிலத்தில் நிலவும் ஒழுங்கிற்கு ஒரு சான்று. இவையெல்லாம் 2000த்தின் தொடக்க வருடங்களில்.     …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121825

ரப்பர் -வாசிப்பு

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமா, நான் உங்களுக்கு கடிதம் எழுத தொடங்கிய நாளில் இருந்து இக்கடிதம் பெரும் இடைவெளியில் எழுதுகிறேன்(பணிச்சுமை), இதற்கிடையில் நேரில் உங்களை சிலமுறை சந்தித்தும் உள்ளேன் என்றாலும் பேச முடிந்ததில்லை, உங்களிடம் என்று இயல்பாக பேச முடியுமோ தெரியவில்லை. அது ஒரு கனவாகவே இன்னும் உள்ளது. இன்று ரப்பர் நாவல் வாசித்தேன். நாவல் வாசிக்கும் போது parallel ஆகா ஓடிக்கொண்டிருந்த சிந்தனை இதை நீங்கள் 22 வயதில் எப்படி எழுதினீர்கள் என்றே. நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121822

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-45

எட்டாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான துருதர் பாரதவர்ஷத்தில் மலைக்காடுகள் மண்டிய மணிப்பூரக நாட்டிலிருந்து வந்திருந்தார். மூங்கில்களை ஒன்றுடன் ஒன்று சேர்த்து அமைக்கப்பட்டிருந்த வேத்ரம் என்னும் இசைக்கருவியின் மீது சிறிய கழிகளால் விரைந்து தட்டி யாழ்நிகர் ஒலியெழுப்பி அவர் பாடத்தொடங்கினார். “தோழரே இக்கதையை கேளுங்கள். இது செவிகளினூடாக பரவி, புல்விதைகள் போல் பெருகி, அருகு போல் செழித்து, அனல் கடந்து, நீர்ப் பெருக்கை வென்று என்றும் இங்கு நின்றிருக்கும் சொல்லென்று உணர்க! இதைச் சொல்லும் நான் புல்லின் வேர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121955

சக்கரம் மாற்றுதல்

சக்கரம் மாற்றுதல் நான் மைல்கல் மேல் அமந்திருக்கிறேன் ஓட்டுநர் சக்கரத்தை கழற்றி மாற்றிக்கொண்டிருக்கிறார் நான் கிளம்பி வந்த இடத்தில் இருக்க விரும்பவில்லை செல்லுமிடத்திற்கு போகவும் பிடிக்கவில்லை ஆனாலும் சக்கரம் மாற்றுவதை ஏன் அத்தனை பொறுமையிழந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்?   பெர்டோல்ட் பிரெஹ்ட்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/121981

Older posts «