குறிச்சொற்கள் யுயுத்ஸு

குறிச்சொல்: யுயுத்ஸு

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11

அஸ்தினபுரியின் அவைக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்கள் பொறுமையிழந்தவர்களாக உடலை அசைத்துக்கொண்டிருந்தனர். ஏவலர்களிடமும் அந்தப் பொறுமையின்மை இருந்தது. சம்வகை அவையை நோக்கியபடி நின்றாள். யுயுத்ஸு அங்கிலாதவன் போலிருந்தான். இளையோர் நால்வரும் நிலம்நோக்கி உடல் அசைவிலாது உறைந்திருக்க அமர்ந்திருந்தனர். யுதிஷ்டிரன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7

பலி நிகழ்வுகளுக்குப் பின்னர் கங்கையின் பெருமணல் பரப்பில் அனைவரும் உண்டாட்டுக்கு அமர்ந்தனர். நீத்தோரை வழுத்தி நிறையுணவு உண்டு செல்வது என்பது தொல்மரபு. உண்டாட்டுக்குரிய ஓசைகளோ முகமன்களோ இல்லாமல் அனைவரும் அமைதியாக தங்களுக்குரிய இடங்களில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5

உத்கலத்து வணிகர்களுக்கான குடியிருப்பின் பெருங்கூடத்தில் குபேரருக்கு மிருத்திகன் முன்பு அந்த பலிச்சடங்கின்போது நிகழ்ந்தவற்றை சொன்னான். நான் வணிகச் செய்திகளுக்காக அன்றி எங்கும் செல்வதில்லை. பெருவிழவுகளையும் களியாட்டுகளையும் எப்போதும் தவிர்த்து வந்திருக்கிறேன். வணிகர்கள் அவற்றை...

’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 2 சாத்யகி சொன்னான் “அரசவையிலிருந்து வெளியே வந்தபோது உளம்சலித்திருந்தேன். அவ்வண்ணமே திரும்பி ரிஷபவனத்திற்குச் சென்றுவிடவேண்டும் என்றும், என் ஆநிரைகளுடன் அறியாக் காடொன்றில் அமர்ந்திருக்கவேண்டும் என்றும், காட்டுவிலங்குபோல...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 79

பகுதி எட்டு : அழியாக்கனல்-3 தீக்ஷணன் வெளியே நெரிந்த கூட்டத்தில் இறங்கியதுமே அவனை அது அள்ளிச் சென்றது. அவன் தன்னை மறந்து அதில் ஒழுகினான். அது எத்திசை நோக்கி செல்கிறது என அவனால் உணரமுடியவில்லை....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 68

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 18 அர்ஜுனன் நகர்நுழைவு முடிந்து அரண்மனையை அடைந்தபோது களைத்து தளர்ந்துவிட்டிருந்தான். அவன் அஸ்தினபுரியின் அணிப்படையினருடன் கோட்டைமுகப்பை அடைந்தபோது முதற்கதிர் எழத் தொடங்கியிருந்தது. அவ்வேளையிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அவனை எதிர்நோக்கி கோட்டைமுகப்பின் பெருமுற்றத்தில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 67

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 17 யுயுத்ஸு துரோணரின் குருநிலையைச் சென்று சேர்ந்தபோது உச்சிப்பொழுதாகிவிட்டது. அவன் வழியிலேயே காய்களைத் தின்று நீர் அருந்தியிருந்தான். எனினும் பசித்துக் களைத்திருந்தான். அவனைக் கண்டதுமே அங்கிருந்த யாதவ இளைஞன் “நீங்கள்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 66

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 16 சுரேசரின் அறைக்குள் நுழைந்து யுயுத்ஸு தலைவணங்கினான். அவர் சற்று பதற்றத்தில் இருந்தார். எழுந்து அவனை வரவேற்று அமரும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்று அங்கிருந்த ஒற்றர்களிடம் ஓரிரு சொற்கள் பேசிவிட்டு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 65

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 15 யுதிஷ்டிரனின் அறைக்குள் மருத்துவர் இருந்தார். முதியவர், அவர்களைக் கண்டதும் எழுந்து நின்றார். சுரேசர் வணங்கி “அரசருடன் உரையாடலாமா?” என்றார். அவர் “உரையாடுவது அவருக்கு நன்று” என்றார். சுரேசர் “அரசே,...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 64

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 14 அறைக்குள் காற்று சுழன்று வீசிக்கொண்டிருந்தது. கதைகள் சொல்லப்படும் இடங்களில் காற்று மேலும் பொருள்கொண்டுவிடுவதாக யுயுத்ஸு எண்ணிக்கொண்டான். அது அங்கே சிறுகுழந்தைபோல சூழ விளையாடிக்கொண்டிருக்கிறது. திரைச்சீலைகளை அசைக்கிறது. சாளரக்கதவுகளில்...