Tag Archive: திரைப்படம்

விழியில் விழுந்த கவிதை
  நான்குநாட்களுக்கு முன் ஆபீஸுக்குப் போய்க்கொண்டிருந்தபோது வழியில் ஒரு கூட்டம். ஏதோ சிறு விபத்து என்று முதலில் நினைத்தேன். ஆனால் ஜனங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோலப் பட்டது. அப்படியானால் ஏதாவது கர்ப்பிணிப்பெண் தாய்வீடு வந்திருக்கலாம். அமெரிக்க மென்பொருள்மைந்தன் வீடு திரும்பியிருக்கலாம். சுவிசேஷ ஆராதனைக்கூட்டத்தை எவராவது வீட்டிலேயே ஒழுங்கு செய்திருக்கலாம். அருகே நெருங்கியபோது சொன்னார்கள், படப்பிடிப்பு என்று. ”என்ன படம் ?” என்றேன். ஏதோ மலையாளப்படப்பிடிப்பு போல தெரிகிறது என்றார் ஒருவர். அங்குமிங்கும் வயர்கள் ஓடின. ஒரு படப்பிடிப்பு வேன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/1803

அழகிய அசடுகள்
சமீபத்தில் நான் எழுதும் இரு படங்களுக்காக நடிக்க விழையும் புதுமுகங்களின் ஒளிக்காட்சித் துண்டுகளைப் பதிவுசெய்துவந்து எனக்குக் காட்டினார்கள் இயக்குநர்கள். நடிகைகளில் பெரும்பாலும் எல்லாருமே அழகிகள். ஆனால் எல்லாருமே ஒரே மாதிரி ஒப்பனைசெய்து, ஒரேபோல நின்று, ஒரேபோலக் கையசைத்து, ஒரேபோல முகம் திருப்பி முடிதள்ளி சிரித்து, ஒரேபோன்ற உச்சரிப்பில் பேசினார்கள். ஆச்சரியமென்னவென்றால் உளறல்கள் மட்டும் வேறுவேறு. படமெடுக்கும் உதவி இயக்குநர் ‘உங்க பேரென்னம்மா?’ என்று கேட்க வசீகரமாக நாணி, முடியைத் தள்ளிக் கண்களை சுழற்றி யோசித்து, புருவம் தூக்கிப் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/19415

சினிமாவின் சோதனைமுயற்சிகள்
//எனக்குக் கலை வடிவம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது. அதனாலேயே கொதார்த், லூயி புனுவல் போன்றவர்களையும் என்னால் ரசிக்க முடியவில்லை. இது என் தனிப்பட்ட ரசனையைச் சார்ந்தது. இவர்களை நவீனத்துவம் முற்றி, அது வெறும் வடிவச்சோதனையாக ஆகி, அடுத்த கட்டம்நோக்கி நகரமுடியாமல் திணறிய காலகட்டத்தின் கலைஞர்கள் என்று வகுத்துவைத்திருக்கிறேன்// மணி கௌலைப் பற்றிய தன் பதிலில் ஜெயின் இந்த வரிகளைப் படித்தேன்.  இருபதாம் நூற்றாண்டு வடிவச் சோதனைகளின் விளைவாய் ‘தூய கலை’ என்ற நிலைப்பாடு நவீனத்துவத்தில் ஓங்கியிருந்ததைப் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/18117

திரைப்பட விழா
நேற்று டொரொண்டோ நகரில் ஸ்கார்பரோ பகுதியில் சர்வதேச குறும்பட விழா. காலையிலேயே கிளம்பிக் குளித்து உடைமாற்றி மனைவி சகிதம் கிளம்பிச்சென்றேன். காலம் செல்வம் நடத்திய வாழும்தமிழ் நூல்விற்பனை அரங்கும் அருகே இருந்தது. பல நண்பர்களை அங்கே சந்தித்தேன். அவர்களில் பலர்,என்னுடைய நூல்களை விரிவாக வாசித்தவர்களாக இருந்தார்கள். ஒட்டுமொத்தமாகப் ’பின் தொடரும் நிழ’லின் குரல்தான் அவர்களிடம் அதிக தாக்கம் ஏற்படுத்தியதாக இருந்தது என்று தோன்றியது. நூல்கள் நடுவே அமர்ந்து இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டோம். நூல்களில் கையெழுத்துப் போட்டுக்கொடுத்தேன். நல்ல …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/16831

நஞ்சுபுரம், கடிதங்கள்
வணக்கம் சார் நஞ்சுபுரம் இசை வெளியீட்டு விழா பற்றிய உங்கள் அறிமுகக் குறிப்பு, பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. என்மீதான உங்கள் அன்பும் அக்கறையும் எப்போதும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாகவே உள்ளது. ரொம்ப நன்றி சார் அந்தப் பதிவில் இறுதியில் நீங்கள் “மகுடேஸ்வரன் முதல்முறையாக அதில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்” என்று எழுதியிருக்கிறீர்கள். அவர் என் படத்தில் ஐந்து பாடல்களை எழுதியிருக்கிறார் (இன்னொரு ராப் பாடலை ராகவ் எழுதினான்), அதில் ஒரு பாடல் மட்டும் புத்தகத்தில் பிரசுரமான அவருடைய …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/13532

சார்லஸின் நஞ்சுபுரம்
என்னுடைய நெருக்கமான நண்பர் சார்லசின் முதல்படம் நஞ்சுபுரம். சார்லச் உலகத்திரைப்பட ரசனையும் திரைத்தொழிலில் மிகச்சிறப்பான அனுபவமும் உள்ளவர். நெடுநாள் தொலைக்காட்சித்துறையில் பணியாற்றினார். நண்பர்களின் உதவியுடன் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. அந்த எல்லைக்குள் அது ஒரு சாதனை என்று சொல்லப்படுகிறது. நஞ்சுபுரம் வெளிவரவிருக்கிறது அந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாபற்றி மகுடேஸ்வரன் எழுதிய கட்டுரை வாசித்தேன். மகுடேஸ்வரன் முதல்முறையாக அதில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
Permanent link to this article: http://www.jeyamohan.in/13527

திரைப்படங்கள்
அன்புள்ள ஜெ, போரும் அமைதியும், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் போன்ற ருஷ்ய படங்கள் ஆங்கில உதவித்தலைப்புகளுடன் (sub titles) இங்கே உள்ளது. பொறுமையாக தரவிறக்கிப் பார்க்கலாம். இங்கேயே இன்னும் சில சிறந்த ருஷ்ய படங்கள் உள்ளன (தஸ்தயேவ்ஸ்கியின் ‘இடியட்’, புஷ்கினின் ‘Ruslan and Lyudmila’ etc.,). போரும் அமைதியும் 1960 களில் பிரம்மாண்டமான பொருட்செலவில் 7 ஆண்டுகளில் நான்கு பகுதிகளாக (கிட்டத்தட்ட 8 மணி நேரம் ஓடக்கூடிய) திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 1969ஆம் வருடத்திய கோல்டன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/12005

அங்காடித்தெருவுக்கு விருது
அங்காடித்தெரு திரைப்படத்துக்கு சென்னை திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. வசந்தபாலனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அங்காடித்தெரு பழைய கட்டுரைகள்-இணைப்புகள் அங்காடி தெரு கடிதங்கள் 4 அங்காடி தெரு கடிதங்கள் 2 அங்காடி தெரு,கடிதங்கள் 3 அங்காடித்தெரு கடிதங்கள் அங்காடித்தெரு, நூறாவது நாள். அங்காடித்தெரு கேரளத்தில் … சீன அங்காடித்தெரு அலாவுதீன் அங்காடித்தெரு இன்று அங்காடி தெரு காட்டும் கண்ணாடி:சின்னக்கருப்பன்
Permanent link to this article: http://www.jeyamohan.in/10977

அம்பேத்கார்-காந்தி
டாக்டர் அம்பேத்கார் பற்றி இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜப்பார் பட்டேல் எடுத்த திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இப்படம் காந்தியைக் கிட்டத்தட்ட தலித்துக்களின் எதிரி என்று, பொய்யான தகவல்களின் அடிப்படையில், வெறுப்பு உமிழும் கோணத்தில் சித்தரிக்கிறது என்றார்கள்.  சாவித்ரி கண்ணன் ஒரு கட்டுரையில் இதை விவாதிக்கிறார். பார்க்க டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் திரைப்படம் ஏற்கனவே பகத்சிங் பற்றி வெளிவந்த திரைப்படம் ஒன்று காந்தியைப்பற்றி மிக எதிர்மறையாகச் சித்தரித்தது.  காந்தி பகத்சிங்கைக் காப்பாற்ற எதுவுமே செய்யவில்லை என்றும் மாறாக …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/10718

நந்தலாலா,இளையராஜா, ஷாஜி
அன்புள்ள் ஜெ, நந்தலாலா பற்றி ஒரு சந்தேகம். உங்கள் நண்பர் ஷாஜி அதிலே இசை சரியில்லை, ராஜாவுக்கு ஒன்றும் தெரியாது என்றெல்லாம் சொல்லியிருந்ததாக சாரு நிவேதிதா எழுதி வாசித்தேன். ஷாஜியைப்பற்றி நீங்கள் கொஞ்சம் சீரியஸாகவே யோசிக்க வேண்டும். அவருக்கு உங்களைப் போன்ற உயிர் நண்பரின் உதவி தேவைப் படுகிறது இப்போது. சாருவைப்பற்றி பயமில்லை. அது ஒரு சர்க்கஸ். ஒருவருடம் முன்பு இதே நந்தலாலாவை பார்த்துவிட்டு இளையராஜாவின் இசை மேதமையைப்பற்றி கண்ணீர் மல்க எழுதினார். கேட்டு அழுதேன் என்றார். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/9575

Older posts «

» Newer posts