குறிச்சொற்கள் திருஷ்டத்யும்னன்

குறிச்சொல்: திருஷ்டத்யும்னன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47

தொலைவில் தெரிந்த பந்த ஒளியை முதலில் சாத்யகிதான் கண்டான். முதலில் அது மின்மினியின் அசைவெனத் தோன்றியது. அதற்குள் உள்ளமைந்த எச்சரிக்கையுணர்வு விழித்துக்கொண்டது. “யாரோ வருகிறார்கள்” என்று கூவியபடி அவன் எழுவதற்குள் திருஷ்டத்யும்னன் விசையுடன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-45

“நெடும்பொழுது...” என்னும் சொல்லுடன் சதானீகன் தன்னுணர்வு கொண்டபோது அவன் எங்கிருக்கிறான் என்பதை உணரவில்லை. நெடுநேரம் அவன் போரிலேயே இருந்தான். குருதிமணம், அசைவுகளின் கொந்தளிப்பு, சாவில் வெறித்த முகங்கள். பின்னர் ஒரு கணத்தில் அவன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27

திருஷ்டத்யும்னன் தேரிலேறி நின்று சூழ நோக்கினான். விழிதொடும் தொலைவுவரை ஒரு மானுட அசைவுகூட இருக்கவில்லை. பதிந்து உறைந்த கரிய அலைகளைப்போல மானுட உடல்கள் தெரிந்தன. அவை மெல்ல நெளிந்து ததும்பிக்கொண்டிருப்பது போலவும் அசைவிலாது...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21

சல்யர் யுதிஷ்டிரனின் வில்லையே விழிவாங்காமல் நோக்கிக்கொண்டிருந்தார். முதலில் அந்த வில் போருக்கு எழும் என்பதையே அவரால் உணரமுடியவில்லை. அதன் அம்புகளின் விசையை மெல்ல மெல்ல அவர் உணர்ந்தபோது ஒரு கணத்தில் அது தன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-14

திருஷ்டத்யும்னன் அஸ்வத்தாமனை எதிர்த்து போரிடத்தொடங்கி நெடுநேரத்திற்குப் பின்னரே அவ்வாறு போரிட்டுக்கொண்டிருப்பதை அவனே உணர்ந்தான். அம்புகளால் அஸ்வத்தாமனின் தேர்த்தூண்களை அவன் அறைந்து அதிரச்செய்தான். வெறிக்கூச்சலிட்டபடி வில்லை துள்ளச்செய்தும் தேர்த்தட்டில் சுழன்றும் போரிட்டான். தன் உடலில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-13

அஸ்வத்தாமனை நோக்கி அம்புகளைத் தொடுத்தபடி போர்க்கூச்சல் எழுப்பிக்கொண்டு தேரில் சென்றபோது திருஷ்டத்யும்னன் துயிலிலோ பித்திலோ என முற்றிலும் நிலையழிந்திருந்தான். வெளியே கேட்டுக்கொண்டிருந்த ஓசைகளும் அறைந்து உதிர்ந்த அம்புகளும் புகையென அவன் உடலைக் கடந்து...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12

சாத்யகி ஒருகணத்தில் மூண்டுவிட்ட அப்போருக்கு மிக அப்பால் நின்றான். இருபுறமிருந்தும் கரிய நீர்ப்பெருக்குகளென படைவீரர்கள் எழுந்து சென்று அறைந்து குழம்பி கலந்து கொப்பளித்து கொந்தளிக்கும் உடற்பரப்பென ஆயினர். எப்பொருளும் எண்ணிக்கை பெருகுகையில் நீரென...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10

திருஷ்டத்யும்னன் சென்று சேர்ந்தபோது ஏற்கெனவே யுதிஷ்டிரனின் அவை கூடியிருந்தது. அவனுக்காக பிறர் காத்திருப்பது தெரிந்தது. முகப்பில் நின்றிருந்த சுருதகீர்த்தி தலைவணங்கி கையசைவால் அவையமரும்படி காட்டினான். பாடிவீடுகளென அமைந்திருந்த குடில்களும் கூடாரங்களும் முற்றாக எரிந்தகன்று...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61

படைகளைக் கடந்து பின்பகுதிக்குச் சென்றதும் அர்ஜுனனின் தேர் விரைவழிந்து தயங்கியது. பெருமூச்சுவிடுவதுபோல் அதன் சகடங்கள் ஓலமிட்டன. அதன்பின் புரவிகள் ஒவ்வொன்றாக நீள்மூச்செறிந்து அமைந்தன. ஒரு புரவி மட்டும் தலையை அசைத்துக்கொண்டே இருக்க அந்த...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-56

சிகண்டி தன்னை வெறிகொண்டு எதிர்த்த கிருதவர்மனை விழிதூக்கி நோக்கவில்லை. அப்போர்க்களத்தில் அவர் பீஷ்மரைத் தவிர எவரையுமே நோக்கவில்லை. பீஷ்மரை எதிர்த்துநின்றபோது முதற்கணம் அவருடைய விற்தொழிலும் உடலசைவும் உள்ளம் செல்லும் வழிகளும் முன்னரே நன்கறிந்திருந்தவை...