குறிச்சொற்கள் குந்தி

குறிச்சொல்: குந்தி

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11

அஸ்தினபுரியின் அவைக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்கள் பொறுமையிழந்தவர்களாக உடலை அசைத்துக்கொண்டிருந்தனர். ஏவலர்களிடமும் அந்தப் பொறுமையின்மை இருந்தது. சம்வகை அவையை நோக்கியபடி நின்றாள். யுயுத்ஸு அங்கிலாதவன் போலிருந்தான். இளையோர் நால்வரும் நிலம்நோக்கி உடல் அசைவிலாது உறைந்திருக்க அமர்ந்திருந்தனர். யுதிஷ்டிரன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10

முரசுகளும் கொம்புகளும் முழங்கி ஓய்ந்தன. அவைநடைமுறைகளை அறிவிக்கும்பொருட்டு பட்டுத்தலைப்பாகையும் மேலாடையும் அணிந்த இளம்நிமித்திகன் அறிவிப்பு மேடையில் ஏறினான். வெள்ளிக்கோலை இருபுறமும் சுழற்றி தலைவணங்கி, உரத்த குரலில் அவன் அஸ்தினபுரியின் குடிவரிசையை கூறினான். “பிறவா...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7

பலி நிகழ்வுகளுக்குப் பின்னர் கங்கையின் பெருமணல் பரப்பில் அனைவரும் உண்டாட்டுக்கு அமர்ந்தனர். நீத்தோரை வழுத்தி நிறையுணவு உண்டு செல்வது என்பது தொல்மரபு. உண்டாட்டுக்குரிய ஓசைகளோ முகமன்களோ இல்லாமல் அனைவரும் அமைதியாக தங்களுக்குரிய இடங்களில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6

அன்று முன்விடியலில்தான் இளவரசரை பலிநகருக்கு கொண்டுவந்தார்கள். அவரை கொண்டு வருவதற்கென்று விந்தையானதோர் தேர் அமைக்கப்பட்டிருந்தது. அகன்ற தேர்பீடத்தில் வெண்கலத்தாலான தொட்டி ஒன்றில் நீர் நிறைக்கப்பட்டு அதற்குள் மிதந்து கிடந்த பிறிதொரு கலம்மீது அவர்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5

உத்கலத்து வணிகர்களுக்கான குடியிருப்பின் பெருங்கூடத்தில் குபேரருக்கு மிருத்திகன் முன்பு அந்த பலிச்சடங்கின்போது நிகழ்ந்தவற்றை சொன்னான். நான் வணிகச் செய்திகளுக்காக அன்றி எங்கும் செல்வதில்லை. பெருவிழவுகளையும் களியாட்டுகளையும் எப்போதும் தவிர்த்து வந்திருக்கிறேன். வணிகர்கள் அவற்றை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58

பகுதி எட்டு : விண்நோக்கு - 8 கங்கைக்கரை எங்கும் ஓசைகளும் உடலசைவுச்சுழல்களும் உருவாயின. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் நிலையழிய அச்சூழலே கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஸ்ரீமுகர் அங்குமிங்கும் ஓடினார். தொலைவில் குந்தியின் தேர் கிளம்பிச்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-57

பகுதி எட்டு : விண்நோக்கு - 7 சுகோத்ரன் கண்களை மூடி அந்தக் காலத்தையும் இடத்தையும் கடந்து வேறெங்கோ இருந்தான். உஜ்வலன் அசைந்து அசைந்து அமர்ந்தான். அவ்வப்போது சுகோத்ரனை நோக்கினான். வேள்வி தொடர்ந்து நடக்க...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51

திரௌபதி துயிலில் மயங்கிவிட்டிருந்தாள். மெல்லிய காலடிகளுடன் குந்தி உள்ளே வந்து நின்றபோது சேடி முடிநீவுவதை நிறுத்திவிட்டாள். அதை உணர்ந்து அவள் விழிப்புகொண்டு குந்தியை நோக்கியபின் வணங்கியபடி எழுந்தாள். “அமர்க!” என்று அவள் கைகாட்டிவிட்டு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50

கதவு மெல்ல தட்டப்பட்டு “அரசி” என ஏவல்பெண்டு அழைத்தாள். திரௌபதி கண்களைத் திறந்தபோது உள்ளம் நடுக்குகொண்டது. அச்சமின்றி விழித்துக்கொள்ள முடியாதவளாக எப்போது ஆனேன்? அவள் எழுந்து அமர்ந்து குழலை கைகளால் நீவி பின்னுக்குச்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49

திரௌபதி கதவைத் திறந்து வெளியே வந்தபோது சேடி தலைவணங்கி மேலாடையை நீட்டியபடி “பேரரசி நெடுநேரமாக காத்திருக்கிறார்கள். சற்று பொறுமையிழந்துவிட்டார்கள்” என்றாள். மேலாடையை வாங்கி தன் தோளில் அணிந்து கூந்தலை தன் இடக்கையால் நீவி...