Tag Archive: கிடா

படைப்புக்குள் ஆசிரியன்

அன்புள்ள ஜெ , விஷ்ணுபுரம் வாசிக்கும் போது உங்களைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாது, பின்பு உங்களை அறிந்த பின்பு திருவடியின் தந்தையில் உங்கள் தந்தையைக் கண்டேன், உங்களின் நெருக்கமானவர்களை உங்கள் புனைவில் மாற்றி மாற்றிக் கொண்டு வருகிறீர்கள். டார்த்தீனியத்தில் நீங்கள் உங்கள் தந்தை எப்படி இருக்க வேண்டும் என்று சிறு வயதில் விரும்பினீர்களோ அப்படியே வந்தார். இப்போது கிடா கதையில் உங்கள் அண்ணனை அப்படியே காண்கிறேன். இதில் முறை பெண்ணிற்கு பதில் அம்மாவின் நெருக்கமான அன்பு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/35067

தீபமும் கிடாவும்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, தீபம் மிக அற்புதமான கதை. வார்த்தைகளுக்கு அகப்படாத அக எழுச்சியைத் தந்தது. லட்சுமி ஏற்றிய தீபம் முருகேசன் மனத்தில் மட்டுமல்லாமல், என் இதயத்திலும் சுடர் விட்டு எரிந்து ஒளி வீசுகிறது, அன்புடன், சந்திரசேகரன் அன்புள்ள சந்திரசேகரன் சிலசமயம் கதைகளில் ஒன்றுமே இல்லாமல் எல்லாம் அமைந்துவிடுகிறது ஜெ அன்புள்ள ஜெ , கிடா…. கண்களை மூடிக் கொண்டே யாரையாவது வாசிக்க சொல்லிக் கேட்டால்… ஒரு மிக நல்ல மண்வாசனை நிறைந்த குறும்படம் பார்ப்பது போல இருந்தது. …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/34722

கிடா [புதிய சிறுகதை]

முட்டன்கிடா. மட்கிய கம்பிளியின் கொச்சைவாடையுடன் தாடிதழைய குறுங்கொம்புடன் நின்று பர்ர் என்று செருக்கடித்தது. முன்காலால் தரையை இருமுறை உதைப்பதுபோல பிறாண்டித் தலையைக் குனித்து வாசனை பிடித்தபோது அதன் மூக்கு நெளிந்தது. அதன் ஒவ்வொரு அசைவிலும் கம்பீரம். சிதம்பரம் அதனருகே நெடுநேரம் நின்றுவிட்டான். பின்பு கொஞ்சம் துணிவுடன் அதை நோக்கிக் கையை நீட்டினான். கனத்த உறுமலுடன் கிடா இரு கால்களையும் தூக்கி ஆக்ரோஷமாக முட்டவந்தது. அவன் சட்டென்று பின்னால் நகர்ந்துகொண்டான். இல்லாவிட்டால் அபப்டியே தூணோடு அவனைச்சேர்த்து நசுக்கியிருக்கும். யாரும் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/34348