Tag Archive: எஸ்.ராமகிருஷ்ணன்

கலாய்ப்புகள்

ஜெ முன்பு ஒருமுறை நீங்கள் தமிழர்களின் நகைச்சுவை பற்றி சொல்லியிருந்தீர்கள். நான் கடந்த நாலைந்து நாட்களாக அதை ‘அனுபவித்து’ தமிழே வேண்டாம்டா சாமி என்கிற நிலைமையிலே இருக்கிறேன். ‘ஜாமீன் கடல்லயே இல்லியாம்’ என்று ஒரு வடிவேலு டயலாக். அதுவே ஒரு மொக்கை காமெடி. அதையே போட்டு போட்டு பின்னிப்பின்னி எழுதி எழுதி சிரித்து பின்னூட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நேரிலும் ஒரே நாளில் ஆபீஸில் வீட்டில் தெருவில் எல்லாம் இதே வரியை ஐம்பது முறை கேட்டாகிவிட்டது. ஒருத்தர் சொன்னதுமே கெக்கேபிக்கே …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/62808

மு.வ.வின் எக்ஸ்ரே

எஸ்.ராமகிருஷ்ணனின் தளத்தில் இந்தக்கதையையும் அவர் எழுதிய குறிப்பையும் வாசித்தேன். சிறப்பான கதை, சிறந்த அறிமுகம் ஆனால் மிகப்பெரிய பிழை ஒன்று நிகழ்ந்துள்ளது. கதையின் பெயர் ‘மு.வ.வின் எக்ஸ்ரே’ என நினைக்கிறேன். வந்து படுத்துக்கொண்டு “நாம் மாறியிருக்கிறோம். ஆனால் வளர்ந்திருக்கிறோமா?” என்ற புத்தம்புதிய, ஆழமான கேள்வியைக் கேட்பவர் மு.வ தான். ராமகிருஷ்ணன் சரிபார்த்துக்கொண்டால் நல்லது.

Permanent link to this article: http://www.jeyamohan.in/41079

காந்தி- எஸ்.ராமகிருஷ்ணன்

காந்தி ஒரு தூய்மையான காற்று, அது எப்போது உக்கிரம் கொள்ளும், எப்போது தணிவு கொள்ளும் என்று தெரியாது, ஆனால் அதன் வேகத்தில் தூசிகள், குப்பைகள் அடித்து கொண்டு போகப்படும் என்பது உண்மை தானே,// http://www.sramakrishnan.com/?p=3437

Permanent link to this article: http://www.jeyamohan.in/37634

சைதன்யா என்னும் எழுத்தாளர்

நண்பர் கே.பி.வினோத்தின் மகள் சைதன்யாவைக் கைக்குழந்தையாகவே அறிவேன். குழந்தைகள் வளரும் வேகம் பிரமிக்கச்செய்வது. ஒருநாள் அவரைத் தேடிச்சென்றபோது ஒரு நோட்டுப்புத்தகம் நிறைய பென்சிலால் எழுதியிருந்ததைக் கொண்டுவந்து காட்டினாள். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கால்முளைத்த கதைகள் நூலில் உள்ள கதைகள் சிலவற்றை மொழியாக்கம்செய்திருந்தாள். ஒரு மூன்றாம்வகுப்பு மாணவியின் மொழி அல்ல அது. சரளமான ஆங்கிலம். அதேசமயம் ஒருவகை இந்திய ஆங்கிலமும் கூட எஸ்.ராமகிருஷ்ணனிடம் கதைகளைக் காட்டலாம் என்று நான் சொன்னேன். அவளுடைய பள்ளியிலும் காட்டலாம் என்றேன். பள்ளியில் உடனே அவற்றை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/34870

வசைகளின் நடுவே…

வணக்கம் சார், தமிழ் எழுத்துலகில் உள்ள வன்மங்கள் இப்பொழுதுதான் புரிகிறது.உங்களுக்கு நேர்ந்தமையால்… இது என்னுடைய நேரடி அனுபவமாகவே உணர்கிறேன். நான் உங்களைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் பெரிய விவாதத்துக்கு உள்ளானது இப்பொழுதுதான்.நீங்கள் இதை மிக மன விரிவுடன் எதிர்கொள்ளும் விதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு பலியின் தலை மீது கால் வைத்து வளர்ந்து கொண்டு இருக்கும் வாமனன் தான் ஞாபகத்துக்கு வருகிறான்.அவன் வளர்ச்சி முன் பலி, இந்த உலகு, விஸ்வம் எல்லாமே சிறியதாக மாறிக்கொண்டு இருக்கும். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/31835

இரு காந்திகள்

நம் சமூகத்தில் எப்போதும் காந்தி மீதான ஒரு விமர்சனமும் கசப்பும் இருந்துகொண்டிருக்கிறது. முதன்மையாக அது அரசியல்காரணங்களுக்காக உருவாக்கப்படுகிறது. காந்தியை அறிந்துகொள்ள முயலாமல் நிராகரிப்பது அவ்வரசியலின் அடிப்படைத்தேவைகளில் ஒன்று. இடதுசாரிகள் வலதுசாரிகள் பிரிவினைவாதிகள் சாதியவாதிகள் என அவர்கள் பலதரப்பினர். காந்தி இந்திய அரசமைப்பின் அடையாளமாக, பாடநூல்களில் சம்பிரதாயமாக அறிமுகமாகிறவராக இருப்பதனால் இளையதலைமுறை அவரை நிராகரிப்பதை ஒருவகை அமைப்புமீறலாக எடுத்துக்கொள்கிறது. ஒரு முதிரா வயதில் காந்தியை எதிர்த்துப்பேசுவது சிகரெட் பிடிப்பது, தண்ணியடிப்பது போல ஒரு இளமையின் மீறலாக எண்ணப்படுகிறது. ஆனால் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/31664

கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இலக்கியவிருதுகள் சென்ற ஜூன் 16 அன்று வழங்கப்பட்டன. எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது பெற்றார். இலக்கியத்தோட்டம் விருதுகளும் அன்று வழங்கப்பட்டன விருதுகள் 1. இயல் விருது – எஸ்.ராமகிருஷ்ணன் 2. புனைவு – யுவன் சந்திரசேகர் – நாவல் – ’பயணக் கதை’ 3. அபுனைவு – பெருமாள்முருகன் – ‘கெட்டவார்த்தை பேசுவோம்’ 4. கவிதை – தேவதச்சன் – ’இரண்டு சூரியன்’ 5. கவிதை -அனார் – …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/28277

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது

2011 ம் ஆண்டுக்கான கனடாவின் இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் சாதனைக்கான இலக்கிய விருது இது. கனடா இலக்கியத்தோட்டமும் யார்க் பல்கலையும் இணைந்து வழங்கும் இவ்விருது இவ்வருடம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதிப்புமிக்க விருது இது. தமிழ் நாவல், சிறுகதைத் தளத்திலும், நாடகங்களிலும் தீவிரமான பங்களிப்பாற்றிவரும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ்.ராமகிருஷ்ணன். நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்துவதிலும், ஒரு இயக்கமாக அதை நிலைநிறுத்துவதிலும் தொடர்ச்சியான ஈடுபாட்டைக் காட்டிவருபவர். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/24052

ஒரு புது முயற்சி

சென்ற டிசம்பரில் எஸ் ராமகிருஷ்ணன் சென்னையில் ஆற்றிய உலக இலக்கிய அறிமுகப்பேருரைகளை மிக விரும்பி தொடர்ந்து நண்பர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழிலக்கியத்தில் முக்கியமான ஒரு தொடக்கம் இது என்றார்கள் அந்த உரைகள் டிவிடி களாக வெளியிடப்பட்டுள்ளன என்ற அறிவிப்பு எஸ்.ராமகிருஷ்ணன் தளத்தில் வெளியாகியிருக்கிறது. முக்கியமான முன்னோடி முயற்சி

Permanent link to this article: http://www.jeyamohan.in/23790

பாரதி விவாதம் 2 – மகாகவி

ஜெ, பாரதியின் சமூகப்பாடல்களில் சில,தேச வணக்கப் பாடல்களில் சில நீங்கலாகப் பார்த்தால் பெரும்பான்மையான பாடல்கள் பேரிலக்கியவகைமையைச் சார்ந்தவைதாம். சாக்த வழிபாட்டு நிலையில்கூடபக்தியையும் கடந்து சாக்தம் குறித்த தத்துவம் பொதிந்த கவிதைகள்பாரதியிடம் இருந்து தோன்றியுள்ளன. காலமா வனத்தில் அண்டக் கோலமா மரத்தின்மீது காளிசக்தி என்ற பெயர் கொண்டு என்ற கவிதையில் உள்ள உருவகம் ஓர் உதாரணம். “பல்வகை மாண்பினிடையே -கொஞ்சம் பயித்தியம் அடிக்கடித் தோன்றுவதுண்டு” என்று ’கண்ணன் என் தந்தை’யில் பாடும்போது தந்தை-மகன் உறவினிலான உளவியல் சிக்கலை அழகாகப் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/21493

Older posts «