Tag Archive: விமரிசகனின் பரிந்து

பதினெட்டாவது அட்சக்கோடு




ஜெ,   அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ்தான். ஆனால் 18 வது அட்சக்கோடு நாவல் எனக்குப்பிடிபடுவதில்லை. என்னதான் சொல்ல வருகிறார்? இதில் என்ன சிறப்பை காண்கிறீர்கள்?   ஆர்வி     அன்புள்ள ஆர்வி 18 அவது அட்சக்கோடு ஒரு குறிப்பிட்ட வகையில் வரலாற்றைப் பார்க்கும் கதை. ஒரு முக்கியமான வரலாற்றுநிகழ்வின்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பார்த்தால் அந்தக்கதையின் முக்கியத்துவம் தெரியும். நாம் அந்த வரலாற்று நிகழ்வில் சென்று முட்டிக்கொள்வதுவரை எதையுமே கவனிக்காமல் நம் அன்றாட எளிய …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/11891

எம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்




  1921இல் சென்னையில் பின்னி ஆலை வேலை நிறுத்தம் நடந்தது. இந்தியத் தொழிற்சங்க வரலாற்றிலேயே முக்கியமான போராட்டம் இது. திரு. வி.க. இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். தொழிற்சங்க முன்னோடியான வாடியாவின் பங்களிப்பு இதில் இருந்தது. எம்.சி.ராஜா இந்தியாவில் தொழிற்சங்கப் போராட்டங்கள் அப்போதுதான் ஆரம்பித்திருந்தன. தொழிற்சங்க இயக்கமே குழந்தை நிலையில்தான் இருந்தது. மும்பை, கல்கத்தா, சென்னை போன்ற ஊர்களில் உள்ள ஆலை ஊழியர் நடுவேதான் அது அரும்பியிருந்தது.   இந்தியத் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் அதற்கே …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/5516

கார்ல் சகன், ‘தொடர்பு’




  முடிவின்மையின் தொடர்பு ‘எல்லி அரோவே’ யின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. மிக இளம் வயதிலேயே அவளுக்குள் பிரபஞ்சம் எப்படி எதனால் செயல்படுகிறது என்ற வினா குழந்தைக்கே உரிய தீவிரத்துடன் எழுந்துவிட்டது. அந்த அடிப்படையான தேடலை அறிவியலாளரான அவள் தந்தை கணிதத்தையும் அறவியலையும் நோக்கித் திருப்பினார். தந்தையுடன் அவளுக்கிருந்த உணர்வுப்பூர்வமான நுட்பமான உறவு அந்த தேடல் வலுப்பெற்று அதை மட்டுமே மையமானதாகக் கொண்டு அவளது ஆளுமை உருவாகக் காரணமாக அமைந்தது. இளமையின் சபலங்களுக்கோ உலகியல் ஆர்வங்களுக்கோ …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/5655

வாசிப்பின் நாட்டிய சாஸ்திரம்




தமிழில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராமானுஜரைப் பின்பற்றி ஒரு வைஷ்ணவ சம்பிரதாயம் உருவாகியது. அது இன்றும் உயிர்ப்புடன் உள்ள ஒரு மரபு. பல பேரிலக்கியங்களையும் உரைநூல்களையும் அது உருவாக்கியது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் அவர்களுக்கு என்று ஒரு பரிபாஷை உண்டு. அதை வைஷ்ணவ பரிபாஷை என்பார்கள். பெருமாளுடனும், ராமானுஜருடனும் தொடர்புள்ள எல்லாவற்றையும் புனிதமாக ஆக்கி திரு என்றும் என்றும் சேர்த்துச் சொல்வார்கள். அதைப்பற்றி நிறைய வேடிக்கைக் கதைகள் உண்டு. ஒருகதை. வைணவ மடாதிபதி நான்குநேரி வானமாமலை ஜீயர் சுவாமிகளின் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/13432

ஓர் அக்கினிப்பிரவேசம்




எம் எஸ். சுப்புலட்சுமியின் அதிதீவிர ரசிகரான ஒரு பிராமணர் எனக்கு அலுவலகத்தோழராக இருந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி ஏராளமாகப்பேசியிருக்கிறார். அவரது இல்லத்தில் எப்போதுமே எம்.எஸ் பாடிய பாடல்கள்தான் காலையில் முதலில் ஒலிக்கும் என்றார். ஒருபேச்சில் தற்செயலாகச் சொன்னார், எம்.எஸ்ஸின் முகம்தான் ஒரு மங்கலமான பிராமண குடும்பத்தலைவியின் முகம் என்று.   நான் சாதாரணமாக, எம்.எஸ் பிராமணப்பெண்ணே அல்ல என்றேன். அவருக்கு ஆச்சரியம். நான் அவர் மதுரை சண்முகவடிவு என்ற தேவதாசி குலத்து வீணைக்கலைஞருக்குப் பிறந்தவர். அவரது அப்பாபெயர் என்பது …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/4607

அம்மா வந்தாள்: மூன்றாவது முறை…

download




அம்மா வந்தாள் நாவலை மீண்டும் படிக்க நேர்ந்தது, பதினைந்து வருடம் கழித்து. இது மூன்றாவது முறை. இம்முறை தி.ஜானகிராமனின் எண்ண ஓட்டச் சித்தரிப்புகள் சற்று சலிப்பூட்டின. உரையாடல்களில் ஒரே பாணியை பல இடங்களில் பல கதாபாத்திரங்களில் கடைப்பிடிக்கிறாரோ என்ற எண்ணம் ஏற்பட்டது. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரத்தின் ஒரேயொரு அம்சத்தை மட்டுமே அவர் கவனிக்கிறார் என்ற எண்ணமும் வலுவாக உருவாகியது. ஆனாலும் இப்போதும் அது சுவை குன்றாத முக்கியமான ஆக்கமாகவே தோன்றியது, அப்படி தொடர்வாசிப்புக்கு ஈடுகொடுக்கும் தமிழ்ப் படைப்புகள் உண்மையில் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/481

மணல்மேடுகள் நடுவே ஒரு பெண்

Kobo_Abe




பூச்சிஆய்வாளனாகிய ‘நிகி ஜூம்பி ‘ என்ற அந்த இளம் பள்ளி ஆசிரியன் ஒரு நாள் சற்று தள்ளிச் சென்று விடுகிறான் . மணல் குன்றுகள் நிரம்பிய அப்பகுதியில் மென்மணலில் வாழும் ஓர் அபூர்வ வகையான பூச்சியைத் தேடித்தான் அவன் அங்கு செல்கிறான். அது மணலின் மென்மையான சுழிக்குள் ஒளிந்திருக்கும் . சுழியின் விளிம்புக்கு வரும் பூச்சிகள் மணலில் சரிந்து சுழிக்குள் விழுந்து அதனருகே வருகின்றன. சரியும் மணலில் அப்பூச்சிகள் தப்பச் செய்யும் முயற்சிகள் அனைத்துமே வீணாகி விடும் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/351

பாவ மௌனம்




1933ல் ஜெர்மனியில் அடால்·ப் ஹிட்லர் அதிகாரத்துக்குவந்தது உலக அரசியலில் மட்டும் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய திருப்புமுனை அல்ல, உலக தத்துவ ஞானத்துக்கும் திருப்புமுனைதான். அந்தத் தருணம் வரை மானுடம் சந்தித்தே இராத அறவியல் கேள்விகளை எதிர்கொண்டது. யூதர்களை ஜெர்மனிய தேசியத்தின் எதிரிகளாகச் சித்தரித்து, ஜெர்மனிய தேசிய வெறியை எதிர்மறையாகத் தூண்டிவிட்டு, அதன் விசையில் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 1935ல் இயற்றப்பட்ட சட்டங்கள் வழியாக யூதர்களின் இயல்பான சமூக உரிமைகள் பிடுங்கப்பட்டன. யூதர்கள் இரண்டாம்கட்ட குடிகளாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களின் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/791

ஈராறுகால் கொண்டெழும்புரவி – களம் சிறுகதை




கதையில் மகாபாரதத்தின் ஒருகாட்சியை நேரில் பார்ப்பதுபோல் இருந்தது. கூர்மையான வசனங்கள், நேர்த்தியான சொல்லாட்சிகள், வர்ணனைகள் காட்சியைக் கண்முன்கொண்டுவந்தன. இளவரசர்களின் அரங்கேற்றக்களம் அஸ்தினாபுரத்தில் நடக்க இருப்பதை அவ்வளவுத்துல்லியமாகச்சொல்லப்பட்டிருக்கிறது!. பிச்சினிக்காடு இளங்கோ விமர்சனம்




Permanent link to this article: http://www.jeyamohan.in/58062

வெளியே செல்லும் வழி – 1




எல்லா தேவாலய மணிகளும் தெய்வீகமாக ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியன் மூழ்கிக் கொண்டிருந்தது. தொன்மையான நகரமான ரூவனில் மணிமுடிகளாக நின்ற அழகான சாம்பல்நிற கோபுரங்களில் இருந்து அந்தப் புனிதமான ரீங்காரம் அலையலையாக எழுந்து வந்தது. இனிமையானதும் வெவ்வேறு சுதிகொண்டதுமான மணியோசை பெருகி வந்து இளவெம்மையான இலையுதிர்கால காற்றை நிறைத்தது… ரூவனில் சந்தைக்குப்போய் வந்த கிராமத்துப்பெண்களிடம் ஒரு புதிய பரபரப்பு இருந்தது. அன்று அந்நகருக்கு ஒரு புனிதர் வருகை தந்திருக்கிறார். ·ப்ரான்ஸின் மறக்கப்பட்ட தொலைதூரத்து தேவாலய நகரம் ஒன்றின் கார்டினல் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/439

Older posts «