Tag Archive: லா.ச.ராமாமிருதம்

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?




[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/79847

வலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்




கு.ப.ராஜகோபாலனின் ஒரு பழைய கதையில் [கனகாம்பரம்] ஒருவன் கும்பகோணத்தில் தன் நண்பனை தேடிச்செல்கிறான். நண்பனுக்கு அப்போதுதான் திருமணமாகியிருக்கிறது. இவன் அங்கே செல்லும்போது நண்பன் இல்லை. அவனுடைய இளம் மனைவி மட்டும் தனியாக இருக்கிறாள். பெரிய அழகி அவள். அவள் இவனை வரவேற்று காபி போட்டுக் கொடுக்கிறாள். கணவன் நாளைதான் வருவான் என்கிறாள். இவனுக்கு கும்பகோணத்தில் செல்வதற்கு ஓர் இடமில்லை. என்னசெய்வதென்று தெரியாமல் இருக்கையில் அவளே மாடியில் தங்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறாள். அவள் சமைத்துப்போட்டதைச் சாப்பிட்டுவிட்டு இவன் மாடியில் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/47508

சாய்வுநாற்காலி




என்னுடைய மூத்த வாசகர் ஒருவர் தென்காசியில் வங்கியில் பணியாற்றிய காலகட்டத்தில் அவருக்கு அதிகாரியாக இருந்தவர் லா.ச.ராமாமிருதம். அவர் அப்போதுதான் இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்திருந்தார். கோயில்தெய்வம் கூடவே வாழ வந்துவிட்ட பரவசத்துடன் அவர் லா.ச.ராவைக் கொண்டாடினார். கூடவே எந்நேரமும் இருந்தார். லா.ச.ராவின் குடும்பம் சென்னையில் இருந்தது. நெடுங்காலம் அவர் வங்கி குமாஸ்தாவாக இருந்து அப்போதுதான் அதிகாரியாகப் பதவி உயர்வுபெற்று வந்திருந்தார். ஆகவே தென்காசியில் ஒரு வீடு எடுத்துத் தனியாகத் தங்கியிருந்தார். நண்பர் பெரும்பாலான நாட்களில் லா.ச.ராவுடனேயே இரவு தங்கிவிடுவதுண்டு …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/31264