Tag Archive: யயாதி

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–79
79. விதைகளும் காற்றும் யயாதி எளிய வெண்ணிற ஆடையை அணிந்து மீண்டும் தன் அறைக்கு வந்தபோது அவனுக்காக சர்மிஷ்டை காத்து நின்றிருந்தாள். அவன் காலடியோசையையே கேட்டிருந்தாள். எழுந்து வாயில்நோக்கி வரும் அசைவிலிருந்தவள் அவனைக் கண்டதும் நின்று முகம் மலர்ந்து பின் சூழலை உணர்ந்து சேடியரின் முறைப்படி தலைவணங்கினாள். அவனுடன் எவருமில்லை என அறிந்தபின் அருகணைந்து “களைத்திருக்கிறீர்கள்” என்றாள். “ஆம், வங்க நாட்டுக்குச் சென்றிருந்தேன்” என்றபடி அவன் பீடத்தில் அமர்ந்தான். அவனருகே வந்து காலடியில் தரையில் அமர்ந்தவளாக “இங்கு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/97577

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–78
78. புதைவிலெழுதல் யயாதியும் பார்க்கவனும் முதற்புலரியிலேயே அசோகவனியை சென்றடைந்தனர். வழக்கமாக கதிர் நிலம் தொடுவதற்கு முன்னரே கோட்டைவாயிலைக் கடந்து அரண்மனைக்குள் நுழைந்துவிடுவது அவர்களின் முறை. அவர்கள் வந்து செல்வது காவலர் தலைவனுக்கும் மிகச்சில காவலருக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. அசோகவனி அவர்களின் அரசனை கண்டதே இல்லை. அரசமுறையாக வரும் ஒற்றர்கள் என்றே அவர்களை காவலர்தலைவனன்றி பிறர் அறிந்திருந்தனர். தலைவனின் மாளிகையின் மேலடுக்கு முழுமையாகவே யயாதிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு அவன் வந்து தங்கும்போது சர்மிஷ்டை தன் மைந்தருடனும் தோழியுடனும் புறவாயிலினூடாக …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/97523

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–77
77. துயரழிமரச்சாயல் அசோகவனிக்கு பார்க்கவனுடன் கிளம்பியபோது யயாதி அமைதியிழந்திருந்தான். பார்க்கவன் “அனைத்தையும் விளக்கி அரசிக்கு விரிவான ஓலையை அனுப்பியிருக்கிறேன்” என்றான். யயாதி எரிச்சலுடன் “அவள் அரசுசூழ்தல் கற்றவள் அல்ல” என்றான். “ஆம், ஆனால் இத்தகைய நிலைகளில் பெண்டிர் அனைவரும் ஆண்களைவிட பன்மடங்கு நுண்ணுணர்வை காட்டுவர்” என்றான் பார்க்கவன். யயாதி பெருமூச்சுடன்  “ஆம், அதைவிட நுண்ணுணர்வை தேவயானியும் காட்டுவாள். வேட்டைவிலங்கு இரைவிலங்கைவிட நுண்மையும் விரைவும்கொண்டது என்பதனால்தான் காடு வாழ்கிறது” என்றான். “ஆம், ஆனால் என் நம்பிக்கை என்னவென்றால் பதினாறாண்டுகளுக்கு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/97492

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–76
76. ஐம்பெருக்கு “ஐந்து துணையாறுகள் இணைந்து பெருகி ஓடும் இந்த நதி கடலை அணுகுகையில் ஐந்து கிளையாறுகளென்றாகிறது. எந்தத் துணையாறு எந்தக் கிளையாறாகிறதென்று எவர் சொல்ல முடியும்? நதியறிந்திருக்குமோ? நீர் அறிந்திருக்குமோ? ஊற்றுமுகங்கள் அறிந்தனவோ? ஒற்றைமேலாடை என புவிமகள் இடையும் தோளும் சுற்றிய ஆழிநீலம் அறிந்திருக்குமோ? அதிலெழும் அலைகள் அறிந்திருக்குமோ? அதிலாடும் காற்றும் அதில் ஒளிரும் வானும் அறிந்திருக்குமோ? முந்நீரும் முழுப்புவியும் ஒருதுளியென தன் கால்விரல் முனையில் சூடிய பிரம்மம்தான் அதை சொல்லலாகுமோ?” மாளவத்துக் கவிஞர் சாம்பவர் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/97435

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–75
75. துயரிலாமலர் அஷ்டசிருங்கம் என்னும் மலையின் அடியில் சுரபஞ்சகம் என்னும் மலைச்சிற்றூரில் இளவேனிற்காலத்தில் நடந்த பெருங்களியாட்டு விழவில் பன்னிரு பழங்குடிகளின் குலப்பாடகர்கள் பாடுவதை கேட்க பார்க்கவனுடன் சென்றிருந்த யயாதி திரும்பும்போது சோர்ந்து தலைகவிழ்ந்திருந்தான். பார்க்கவன் அவன் தனிமையை உணர்ந்து சொல்லெடுக்காமல் உடன்வந்தான். மலைச்சரிவில் இறங்கிய அருவி ஒன்றின் ஓசை உடன்வந்துகொண்டே இருந்தது. நிகர்நிலத்தை அடைந்ததும் பெருமூச்சுடன் நிலைமீண்ட யயாதி திரும்பி பார்க்கவனை நோக்கி “நாம் எங்கு செல்கிறோம்?” என்றான். அதை புரிந்துகொள்ளாமல் வெறுமனே நோக்கினான் பார்க்கவன். “குருநகரிக்கேவா?” …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/97407

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74
74. ஆழமுது குருநகரி தேவயானியை பெரும் கொண்டாட்டத்துடன்தான் வரவேற்கும் என்று யயாதி முன்னரே அறிந்திருந்தான். சர்மிஷ்டையை அவன் மணங்கொள்ள முடிவெடுத்தது முன்னரே நகரில் ஆழ்ந்த சோர்வை உருவாக்கியிருந்தது. அம்முடிவை அவன் அவையில் அறிவித்தபோது அந்தணர் பகுதியிலிருந்து எந்த எதிர்ப்பொலியும் எழவில்லை. விழி திருப்பாமலேயே அங்கு நிலவிய இறுக்கத்தை அவன் உணர்ந்துகொண்டான். எனவே அவர்களை நோக்கி சொல்லெடுத்து  எதிர்ச்சொல் அவையில் எழவேண்டாமென்று எண்ணி  தன் அறிவிப்பை ஏற்று எதிர்வினையாற்றிய குலமூத்தாரை மட்டும் நோக்கி பேசி அரங்கை முடித்தான். அவன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/97335

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
73. சொற்றுலா தேவயானியை யயாதி மணந்த நிகழ்வு பாரதவர்ஷம் முழுக்க கதைகளாக பரவிச்சென்றது. ஒவ்வொரு நாளும் மலையடுக்கிலிருந்து எதிரொலி மீள்வதுபோல அக்கதைகளிலொன்று அவனிடமே திரும்பி வந்துகொண்டிருந்தது. “நூறாயிரம் முறை பிறந்து நூறாயிரம் தேவயானிகளை நான் மணந்திருக்கிறேன் போலும்” என்று வேடிக்கையாக அவன் பார்க்கவனிடம் சொன்னான்.  “இது முன்பு இலாத ஒரு பெருநிகழ்வு. முதல் முறையாக அசுரகுலமும் ஷத்ரியரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். அவர்களுடன் அந்தணர் ஆற்றலும் கலந்திருக்கிறது. தேவர்கள் அஞ்சும் தருணம்” என்றான் பார்க்கவன். “மண்ணில் அறம் வளர்வதே தேவர்களின் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/97309

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
72. விதைத்துயில் வெளியே காலடியோசை எழுந்தது.  கதவை மெல்லத் திறந்து சம்விரதர் உள்ளே வந்தபோது சர்மிஷ்டை எழுந்து “வணங்குகிறேன், உத்தமரே” என்று முகமன் உரைத்து வணங்கினாள். சம்விரதரின் கால்கள் சிறியவை. முதுமையால் உடலும் குறுகி கூன்விழுந்திருந்தது. அவரும் நிழலும் இரட்டையர்போல ஓசையற்றவர்கள். அவர் அவளை நோக்கியபடி வாழ்த்த மறந்து திகைத்து நின்றார். கண்களில் மிக மெல்லிய துயரமொன்று வந்து மறைந்தது. பின்னர் முறைமைகளைக் கடந்து அருகணைந்து அவள் கைகளை பற்றிக்கொண்டார். அவர் கைகளும் மிகச் சிறியவை. அவை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/97259

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
69. எண்ணுவதன் எல்லை யயாதி மலர்க்காட்டுக்குள் சென்று நின்று திகைத்து சுற்றிலும் பார்த்தான். உள்ளத்தில் மானுடப்புழக்கமிருப்பதாக பதிந்திருந்த இடத்தில் அது இல்லாதது அளித்த வெறுமையை வெல்ல “சென்றுவிட்டார்கள்” என்றான். பார்க்கவன் கூர்ந்து தரையைப் பார்த்து “அனைவரும் செல்லவில்லை… இங்கே ஏதோ நடந்திருக்கிறது. ஓடியிருக்கிறார்கள், கைகலப்புகூட நடந்திருக்கலாம்…” என்றான். பின்னர் ஒரு புரவியை பார்த்துவிட்டான். அருகே சென்றதும் இன்னொரு புரவியும் தெரிந்தது. அவன் அவற்றின் சேணங்களைப் பார்த்துவிட்டு “இரு புரவிகளுமே பெண்களுக்குரியவை… அப்படியென்றால் அவர்கள் இங்கே எங்கோ இருக்கிறார்கள்” …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/97210

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
68. நச்சுப்பல் தன் குடிலுக்குச் சென்றதும் தேவயானி சர்மிஷ்டையிடம்  “ஏன் முகத்தை வாழைக்கூம்புபோல வைத்துக்கொண்டிருக்கிறாய்? இப்போது என்ன ஆயிற்று?” என்றாள். “ஒன்றுமில்லை, எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றாள் சர்மிஷ்டை. “என்ன அச்சம்? இன்றுவரை நீ இளவரசி, இதே இடம்தான் அரசிக்கும். எவரோ சொல்வதைக் கேட்டு ஏன் அஞ்சுகிறாய்?” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை “இல்லை…” என சொல்லவந்து அப்படியே விழிகரைந்து விசும்பலானாள். “என்னடி இது…? அறிவிலிபோல…” என்றாள் தேவயானி. சாயை “நாம் நீராடச் செல்வோம்…” என்றாள். “நீந்தினால் இளவரசி …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/97143

Older posts «