Tag Archive: மழைப்பாடல்

வாழும் முன்னோர்களின் கதை

mahabharata-arjuna-and-krishna-1980s




வெண்முரசு வரிசையின் இரண்டாவது நூலாக எழுதப்பட்ட மழைப்பாடலில், விதுரர் திருதராஷ்டிரனிடம் சொல்வது போல், அறிவதால் கிடைக்கும் மகிழ்ச்சியாக மாறிய வாசிப்பனுபவமே வெண்முரசு வாசிக்கும் அனுபவம். ஆனால் அந்த அனுபவத்தைப் பெற என் மூளையைக் காட்டிலும் என் மனமே கலமாக மாறியிருக்கிறது. கிருஷ்ணா சந்துரு விமர்சனம். * கிருஷ்ணாசந்துருவின் இவ்விமர்சனத்தில் உள்ள ஒரு குறிப்பு காந்தாரத்துக்கும் தமிழ் மன்னர்களுக்குமான உறவைப்பற்றி மழைப்பாடலில் வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. தமிழ்மன்னர்கள் சந்திரகுலமா சூரியகுலமா என்ற விவாதமே பொருளற்றது. ஏனென்றால் நமக்குக் கிடைக்கும் குறிப்புகள் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/66984

சகுனியும் ஜெங்கிஸ்கானும்

shakuni_by_




[சகுனி- simoquin ஓவியம்] அன்புள்ள ஜெ மழைப்பாடலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். சகுனியின் கதாபாத்திரத்தைப்பற்றித்தான் யோசித்துக்கொண்டே இருந்தேன். திரும்பத்திரும்ப பேசப்பட்டு ஒரு type ஆக மாறிப்போன கதாபாத்திரத்தை அதிலிருந்து மீட்பது சாதாரணமான காரியம் கிடையாது.சகுனி என்றால் சதிகாரன், வன்மம் கொண்டவன், வஞ்சகன் என்றெல்லாம் தான் நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். நேர்ப்பேச்சிலேகூட அப்படித்தான். சகுனி என்று ஒரு தமிழ் சினிமாகூட வந்தது இந்நாவலில் அதை உடைத்து அவனை ஒரு மனிதனாகக் காட்டியிருக்கிறீர்கள். ஒரு தூய்மையான சத்ரியன். சத்ரியனுக்கு மண்ணாசை தான் லட்சணம். அது …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/63573

வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா – 2014

0000 VENMURASU HEADER 01




  வெண்முரசு நூல்கள் மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது. இதுகுறித்த மேலதிக தகவல்களும், விரிவான நிகழ்ச்சி நிரலும் விரைவில் வெளியிடப்படும். தேதி : நவம்பர் 9, 2014, ஞாயிற்றுக்கிழமை. இடம் : சென்னை ம்யூசியம் தியேட்டர் அரங்கம் நேரம் : மாலை 5 மணி தொடர்புக்கு:  பாலா: +91 9842608169 வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்




Permanent link to this article: http://www.jeyamohan.in/63987

பாரத தரிசனம்

indraprastha_by_ballerin_na-d5i31jx




அன்புள்ள ஜெ சார் மழைப்பாடல் நாவலை இன்றுதான் வாசித்துமுடித்தேன். பிரம்மாண்டம். மிகநுட்பமாக ஒவ்வொரு அத்தியாயமும் அமைந்திருந்தாலும் ஒவ்வொன்றும் தனியாக நிற்காமல் ஒன்றுடன் ஒன்று சரியாக இணைந்து விரிந்து ஒரு மாபெரும் கதையாக ஆகி நின்றிருப்பதை வியக்காமல் இருக்கமுடியவில்லை. வெறுமே கதையாக வாசிக்காமல் கவித்துவமாக அதை வாசிக்கவும் எல்லா அத்தியாயங்களும் இடம் அளிக்கின்றன மழைப்பாடலின் மிகப்பெரிய அழகே அது அளிக்கும் பிரம்மாண்டமான landscape சித்திரம்தான். முதலில் மழையில்லாத அஸ்தினபுரி. அதன்பிறகு பாலைவனம். பலபக்கங்களாக நீண்டுசெல்லும் பாலைவன வர்ணனை பெரிய …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/63179

நகரங்கள்

parallel_kingdom__age_of_ascension_splash_screen_by_alayna-d5uphrk




அன்புள்ள ஜெ சார் மழைப்பாடல், வண்ணக்கடல் இரண்டையும் ஒரே மூச்சாக வாசித்துமுடித்தேன். ஏற்கனவே நான் தொடராக வாசித்திருக்கிறேன். மழைப்பாடல் புத்தகம் கிடைத்தபோது அதை வாசித்து அதே சூட்டில் நிறுத்தாமல் வண்ணக்கடலையும் வாசித்தேன் இருநாவல்களிலும் நகரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அஸ்தினபுரம் அழுத்தமாக முன்னாடியே வந்துவிட்டது. அஸ்தினபுரத்தின் அத்தை டீடெய்ல்களும் இப்போது எனக்கே தெரியும் .ஒரு நல்ல வரைபடம் தயாரிப்பேன் [நான் ஒரு சிவில் எஞ்சீனியர்] அதன்பிறகு நகரங்கள் வந்துகொண்டே இருந்தன. சிபி நாட்டு தலைநகரம் விசித்திரமானது. பாறைகளை வெட்டித்துளைத்து …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/63175

தென்னகசித்திரங்கள்

prince_of_persia_by_nuro_art-d4fo248




ஜெ, வெண்முரசு இருநாவல்களை இப்போதுதான் வாசித்துமுடித்தேன். மழைப்பாடல், வண்ணக்கடல். இரண்டும் இரண்டுவகையான அனுபவங்கள். நிலம் என்றவகையில் மகாபாரதம் நிகழும் இடங்களை மட்டுமே காட்டியது மழைப்பாடல். அஸ்தினபுரி, காந்தார நாடு, சதசிருங்கம் எல்லாம் கண்முன்னால் காட்சியாக வந்திருந்தது ஆனால் மகாபாரதம் நடக்காத இடங்களான தென்னாடு, வேசரநாடு கலிங்கநாடு போன்றவற்றையும் ஆசுரம் போன்ற  நிலப்பரப்பையும் விரிவாகவும் நுணுக்கமாகவும் காட்டியது வண்ணக்கடல் இந்த வேறுபாடு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா செந்தில் அன்புள்ள செந்தில் ஆம். பாரதம் என்றால் பாரத மண்ணேதான். மகாபாரதத்தில் மொத்த …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/63171

நீலமும் இந்திய மெய்யியலும்

mukesh_singh_1




அன்பு ஜெயமோகன், வெண்முரசின் எப்பகுதியையும் நான் படித்ததில்லை. மகாபாரதத்தின் கதைத்தொகுதியை உங்கள் எழுத்தின்வழி நீங்கள் அணுகும் முயற்சி மட்டுமே புரிந்திருந்தது. இயல்பான மகாபாரதக் கதைப்போக்கை அப்படியே கொண்டுவருவதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன். மகாபாரதம் எனும் காப்பியம் ஆதியின் மனிதகுல வரலாற்றைப் புனைவு கலந்து சொன்ன வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு என்பதான என் புரிதல் அதையும் தாண்டிய தத்துவத்தளத்திற்கு விரியக் காரணமாக இருந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதற்காக இவ்விடத்தில் உங்களுக்கு நன்றி பகர்கிறேன். எனினும், வெண்முரசில் வெளிப்பட்டிருந்த …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/63435

மழைப்பாடல்- மாறுதலின் கதை

grant-morrison-18-days-Pandavas




[கிராண்ட் மோரிசன்/ மகாபாரதப்போர் ] அன்புள்ள ஜெமோ மழைப்பாடலை ஒருமுறை வாசித்து முடித்தேன். அது ஒரு மொத்தமான பார்வையை அளித்தது. அதன்பிறகு ஆங்காங்கே வாசித்து அப்படியே இன்னொருவாசிப்பையும் முடித்துவிட்டேன். மழைப்பாடல் மட்டுமே நிறைவூட்டும் ஒரு தனிநாவலாக இருக்கிறது. அதன் நிலக்காட்சிகளும் அதன் அழகியலும் அற்புதமான அனுபவம். ஆனால் அதைவிட முக்கியமானது குணாதிசயங்கள். குணச்சித்திரங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் அவை புழங்கும் விதத்தில் அந்தக்குணச்சித்திரங்கள் தெளிவடைந்து வந்துகொண்டே இருந்தன. ஒரு போட்டோ இணையத்தில் பார்க்கும்போது டவுன்லோட் ஆக ஆக …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/63431

மழை இசையும் மழை ஓவியமும்

20141007_082001




மழைப்பாடல் பிதாமகர் பீஷ்மர் கூர்ஜரத்துக்குப் பயணம் செய்யும் காட்சியுடன்  தொடங்கி மனதில் அபாரமான கற்பனையை விரித்து நம்மை ஆகர்ஷித்து உள்ளே இழுத்துக்கொள்கிறது. வார்த்தைகளில் உருக்கொண்டு கண்முன் விரியும் கடலின் பிரம்மாண்டமும் பெய்யும் மழையும் மிகுந்த மன எழுச்சியைத்தர நாம் நாவலுக்குள் பிரவேசிக்கிறோம் மழைப்பாடலின் மழைபற்றிய ஒரு பார்வை. மழைப்பாடல் பற்றி கேசவமணி எழுதிய விமர்சனம் ‘மழை இசையும் மழை ஓவியமும்’ அவரது இணையதளத்தில் வெளிவரும் தொடரின் முதல் பகுதி வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும் மழையின் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/63250

வரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்




ஜெ மழைப்பாடலை இப்போதுதான் முழுமையாக வாசித்துமுடிந்த்தேன். இரண்டு முழு வாசிப்பு தேவைப்பட்டது. அதன் அமைப்பில் உள்ள unity யும் ஒன்றுடன் ஒன்று அனைத்தும் கொண்டிருக்கும் conformity யும் வியப்புகொள்ளச் செய்கின்றன. ஒட்டுமொத்தமாக பெண்களின் கதை. இரண்டு பெண்கள். காந்தாரி,குந்தி. அவர்களுக்கு முன்னால் மேலும் இரு பெண்கள். அம்பிகை அம்பாலிகை. அவர்களுக்கு முன்னால் சத்யவதி. அவர்கள் சதுரங்கக் கட்டத்திலே ஒவ்வொரு காயாக தூகி வைத்துவிட்டு அவைகளே ஆடிக்கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்கள் என்று நினைத்தேன் நாவலின் கட்டுமானத்தில் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/58277

Older posts «