Tag Archive: மலையாள நாவல்

தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்




  கதையில், குறிப்பாக நாவலில் வாசிப்பார்வம் எப்படி உருவாகிறது? அடுத்தது என்ன என்ற ஆவலை தொடர்ச்சியாக அது ஊட்டுவதன் மூலம்தான். அடுத்தது என்ன என்று ஒவ்வொரு தருணத்திலும் தெரிந்திருக்கையில் ஒரு நாவல் நமக்கு எப்படி அர்த்தப்படும்? சமகால வரலாற்று நாவல்களின் சவால் இது. சமகால வரலாற்றில் நாமறியாத தகவல்கள் குறைவு அபூர்வமான தகவல்களைப் பெரும்பாலும் கலைப்படைப்புகள் கண்டுபிடிப்பதில்லை. அவை தகவல் சார்ந்த புதுமைகளுக்காக முயல்பவை அல்ல. அறிந்தவற்றின் ஆழங்களையே அவை நாடுகின்றன. அறிந்த விஷயங்கள் மீதான புதிய …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/222

புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.




    ‘ஆமாம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலையும் அதன் சுற்றுப்புறங்களையும் பற்றிய கதைதான் இது’ என்று புனத்தில் குஞ்ஞப்துல்லா தன்னுடைய மீசான் கற்கள் [மூலம். ஸ்மாரக சிலகள்] நாவலை தொடங்குகிறார். எவரிடம் அதைச் சொல்கிறார்? எதை அவர் ஆமோதிக்கிறார்? கேரள நவீனத்துவ இயக்கம் ‘ஆதுனிகத’ என்று சொல்லப்படுகிறது. இதை நாவலில் தொடங்கிவைத்த முன்னோடிகள் ஓ.வி.விஜயன் [கசாகின்டெ இதிகாசம்] காக்கநாடன் [உஷ்ணமேகல ] எம்.முகுந்தன் [மய்யழிப்புழயுடே தீரங்களில்] சேது [பாண்டவ புரம்] ஆகியோரில் ஒருவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா. நவீனத்துவத்தின் பிரச்சாரகராகவே …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/223

வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்




: வைக்கம் முகமது பஷீரின் ஒரு கதாபாத்திரம் குழந்தையாக இருக்கும்போது பள்ளியில் ஆசிரியர் கேட்கிறார் “ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் என்ன வரும்டா?” குழந்தை தன் ஊரில் குன்றுமேலேறி நின்று இரு ஆறுகள் இணைவதைப் பார்த்த ஞாபகத்தில், “இன்னொரு பெரிய ஒன்று’ என்று பதில் கூறுகிறது. அடிவிழுகிறது. எவ்வளவு சொல்லியும் குழந்தைக்குப் புரியவில்லை. இரண்டும் இணையாமலிருக்கும் போதுதான் இரண்டு. இணைந்துவிட்டால் எப்போதும் மிஞ்சுவது ஒன்றுதானே? முதிர்ந்து பழுத்தபிறகு பஷீர் எழுதிய கதையில் ஒரு கதாபாத்திரம் அறிகிறது `நான் நீ …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/191