Tag Archive: பிரஹஸ்பதி

வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
49. விதையின் வழி தன் மனைவி தாரை சந்திரனின் மைந்தனாக புதனைப் பெற்று அவன் அன்னையென்றே தன்னை உணர்ந்து உடன் சென்றபின் தேவகுருவான பிரஹஸ்பதி நெடுநாள் தனியனாக இருந்தார். தன் உள்ளத்தை இறுக்கி இறுக்கி கல்லென்றாக்கிக் கொண்டார். மைந்தர் எவரையும் விழியெடுத்தும் நோக்காதவராக ஆனார். தன் மாணவர்களிலேயே இளமையும் எழிலும் கொண்டவர்களிடம் மேலும் மேலும் சினமும் கடுமையும் காட்டினார். அவர்களுக்கு உடல்வற்றி ஒடுங்கும் கடுநோன்புகளை ஆணையிட்டார். முன்னரே உடல் ஒடுங்கி அழகிலாத் தோற்றம் கொண்டிருந்த சுக்ரரையே தன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96552

வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
48. நில்லாத்துலா துலாவின் நடுமுள்ளென நடுங்கி நின்றிருக்கும்படியே அறத்தை தெய்வங்கள் அமைத்தன. எனவே தோன்றிய நாள்முதல் தேவரும் அசுரரும் போரிடுவது நின்றதில்லை. எவரும் முற்றிலும் வென்றதுமில்லை, முற்றழிந்ததுமில்லை. அழிந்தாலும் மீண்டு எழும் வல்லமை கொண்டிருந்தது தேவர்கள் கொண்டிருந்த அறம். ஒரு துளி ஆயிரமென கோடியென பெருகும் ஆற்றல் கொண்டிருந்தது அசுரர்களின் மறம். அமுதம் தேவர்களின் உணவு. நஞ்சே அசுரர்களுக்குரியது. அமுதோ நஞ்சின் இளையோள். தேவர்களின் ஆசிரியர் பிரஹஸ்பதி. அவருடைய முதல் மாணவராகிய சுக்ரரோ அசுரர்களுக்கு வழிகாட்டியென்றானார். அறிந்து …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/96529

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
15. இருகருவிருத்தல் தாரை  கருவுற்றிருக்கும் செய்தி அவர்கள் இருவரையுமே விடுவித்தது. அவர் அனைத்தையும் உதறி இளஞ்சிறுவன் என்றானார். குழவியின் நினைவன்றி பிறிதில்லாதவராக முகம் மலர காடுகளிலும் நகர்தெருக்களிலும் அலைந்தார். பிறக்கவிருக்கும் குழவிக்கு விளையாட்டுப்பொருட்களும் ஆடைகளும் கொண்டுவந்து சேர்த்தார். மனைவிக்கு வேதுவைக்கவும் மூலிகைச்சாறு கொடுக்கவும் தானே முன்னின்றார். பிறர் நகையாடுவதுகூட பெருமையென்றே தோன்றியது. “முதுமையில் பிறக்கும் மைந்தன் முற்றறிஞன் ஆவான் என சொல்லுள்ளது” என்று சொன்ன காமிக முனிவரிடம் அவர் அருகே நின்ற முனிவர்களின் ஏளனப்புன்னகையை உணராமல் “ஆம், …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/95313

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41
[ 10 ] சண்டன் “மும்முகப் பிரஜாபதியை நான்முகப் பிரஜாபதி வென்றதே கதை என்றறிக!” என்றான். முழவை மீட்டி “மும்முகன் அறியாதது ஒரு திசை மட்டுமே. அது வலமில்லை இடமில்லை பின்னாலும் இல்லை. தன் முன்பக்கத்தை. தன்னை நோக்காத மும்முகன் குலத்தோர் மறைந்தனர். தன்னை மட்டுமே நோக்கிய நான்முகன் மைந்தர் எழுந்தனர்” என்றான். வணிகர்கள் “ஆம்! ஆம்!” என்றனர். “அரிய சொல்” என்றார் ஒரு முதுவணிகர். ஜைமினி உரக்க “இவை முறையான கதைகளல்ல. இவற்றுக்கு நூற்புலம் ஏதுமில்லை. …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/92740

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13
மூன்றாம்காடு : துவைதம்  [ 1 ] காலையிளவெயில் எழுவது வரை துவைதவனத்தின் எல்லையில் இருந்த தாபதம் என்னும் சிறிய குகைக்குள் தருமனும் இளையவர்களும் திரௌபதியும் தங்கியிருந்தனர். அவர்களுக்குத் துணையாக வந்த ஏழு சௌனக வேதமாணவர்கள் இரவில் துயிலாமல் காவல்காக்க வழிநடைக் களைப்பால் அவர்கள் ஆழ்ந்து உறங்கினர். அத்துயிலில் தருமன் அம்பு பட்டு அலறும் தனித்த மான் ஒன்றை கனவு கண்டார். பீமன் பிடிகளுடன் முயங்கி நின்றிருக்கும் மதகளிற்றை. அர்ஜுனன் வானில் பறக்கும் வெண்நாரையை. திரௌபதி குகைக்குள் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/89414

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 13
பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 1 இளவேனிற்காலத்தின் தொடக்கம் பறவையொலிகளால் நிறைந்திருந்தது. ஒவ்வொரு பறவையும் அதற்கென்றே உயிரெடுத்ததுபோல் ஓர் ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தது. அஸ்தினபுரியின் சிற்றவையில் துரியோதனன் நீள்மஞ்சத்தில் கால்நீட்டி அமர்ந்திருக்க அவன் முன் போடப்பட்ட வெண்பட்டு விரிக்கப்பட்ட சிறிய இசைக்கட்டிலில் அமர்ந்து வங்கத்து சூதன் விருச்சிகன் பாடிக்கொண்டிருந்தான். துரியோதனனின் வலப்பக்கம் சாளரத்தருகே போடப்பட்ட பீடத்தில் சாய்ந்து வெளியே காற்றில் குலுங்கிய மரக்கிளைகளை நோக்கிக்கொண்டிருந்தான் கர்ணன். இடதுபக்கம் பானுமதி தன் இருக்கையில் அமர்ந்திருந்தாள். இளைய கௌரவர்கள் நால்வர் மட்டுமே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/82570

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
பகுதி 10 : சொற்களம் – 3 உணவுக்குப்பின் அனைவரும் மறுபக்கமிருந்த பெரிய இடைநாழி வழியாக நடந்துவந்து நான்குபக்கமும் பெரிய சாளரங்களில் வெண்ணிறமான பட்டுத்திரைச்சீலைகள் காற்றில் நெளிந்தாடிய இசைமன்றில் கூடினர். பெரிய வட்டவடிவக் கூடத்தில் மரவுரிமெத்தைமேல் பட்டு விரிக்கப்பட்டு அமர்விடம் அமைக்கப்பட்டிருந்தது. சாய்ந்துகொள்ள செம்பட்டு உறையிடப்பட்ட உருளைப்பஞ்சணைகளும் சுற்றணைகளும் போடப்பட்டிருக்க மேலே பட்டுத்திரைச்சீலை பறக்கும் தொங்குவிசிறிகளும் பாவட்டாக்களும் வெளியே சென்ற சரடுகளால் இழுக்கப்பட்டு அசைந்தன. நடுவே இருந்த அணிச்சேக்கையில் துருபதன் அமர்ந்துகொள்ள வலப்பக்கம் கிருஷ்ணனும் சாத்யகியும் அமர்ந்தனர். இளவரசர்கள் பின்னால் அமர …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/73006

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 1

ஓவியம்: ஷண்முகவேல்
பகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு – 1 முகில்களில் வாழ்கிறது அழியா நெருப்பு. ஆதித்தியர்களின் சிறகை வாழ்த்துக! அதை ஒளியென்றறிகின்றது விழி. இடியென்றறிகின்றது செவி. வெம்மையென்றறிகின்றது மெய். புகையென்றறிகின்றது மூக்கு. கனிந்துபொழியும் மழையென்றறிகின்றது நா. நெருப்பை வாழ்த்துக! தூயவனை, தோல்வியற்றவனை, பொன்மயமானவனை, புவியாளும் முதல்வேந்தனை, புனிதமான அக்னிதேவனை வாழ்த்துக! கற்களில் கடினமாக, தசைகளில் மென்மையாக, நீரில் குழைவாக கரந்திருப்பவன். வேர்களில் திசையாக, வயிற்றில் பசியாக, உடலில் விழைவாக வாழ்பவன். விழிகளில் அறிவாகவும், நெஞ்சில் நெறியாகவும், சொல்லில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/70235

வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 74

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன் [ 1 ] “பிறப்பும் இறப்பும் ஊடியும் கூடியும் பின்னும் வலையால் ஆனது இப்புடவி என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் இங்கு நிகழும் அனைத்துடனும் இணைந்துள்ளது என்பதே நிமித்திக நூலின் முதல் அறிதல்” என்றார் முதியசூதராகிய யூபாக்‌ஷர். “இப்புடவி ஒன்பதின் அடுக்குகளினாலானது என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் புடவி என்னும் பெருநிகழ்வின் ஏதேனும் ஒன்பது நிகழ்வுகளுடன் இணைந்திருக்கும்.” அவர் மென்மரத்தாலான குழைகளை காதிலணிந்திருந்தார். கழுத்தில் செந்நிறக்கற்களாலான மாலை. கன்னங்கரிய நிறம்கொண்டவர். முகத்தில் வெண்விழிகள் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/54020

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 6
பகுதி இரண்டு : கானல்வெள்ளி [ 2 ] அஸ்தினபுரியின் வடக்குக் கோட்டையை ஒட்டி இருந்த யானைக்கொட்டிலுக்கு நடுவே உள்ள சோலையில் இருவர்போருக்கு களம் அமைத்திருந்தனர். அதற்கு அப்பால் புராணகங்கை என்னும் நீண்ட பள்ளத்தாக்கு காடு அடர்ந்து கிடந்தது. அந்தக்காடு நோக்கித் திறக்கும் பெருவாயில் பெரும்பாலும் மூடப்படுவதில்லை. அவ்வழியாக எவரும் நகருக்குள் நுழையமுடியாது. யானைகளை மாலையில் அந்தக்காட்டுக்குள் திறந்துவிட்டு காலையில் திரும்பி வந்ததும் கொட்டிலில் கட்டுவார்கள். நகர்க்காவலுக்கும் பிறபணிகளுக்குமான ஆயிரம் யானைகளில் எழுநூறுயானைகள் அங்குதான் வாழ்ந்தன. பெரிய …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/45676

Older posts «