Tag Archive: நாராயணகுரு

நாராயண குரு எனும் இயக்கம்-2




தொடர்ச்சி நடராஜகுரு   நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது. நாராயணகுருவின் இயக்கத்தை கேரள எல்லையில் இருந்து விடுவித்து உலகளாவக் கொண்டு சென்றது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் என்ற அளவில் நாராயணகுருவின் இயக்கம் அதன் பங்களிப்பை முடித்துவிட்டு ஆழமான தேக்கத்தை அடைந்து பலவகையான சிக்கல்களை நோக்கி செல்ல …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/7524

நாராயண குரு எனும் இயக்கம் -1




  நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/7522

அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம்




நான் நம் பெரும்பான்மை மார்க்ஸியர்கள் மேல் சொல்வது இதே குற்றச் சாட்டைத்தான். அவர்கள் தங்கள் மூடத்தனத்தால் ஒரு பழம் பெரும் பாரம்பரியம் அன்னிய ஏகாதிபத்திய சக்திகளால் வேருடன் கெல்லி அழிக்கப்படும் கொடூரமான வரலாற்று அநீதிக்கு துணை நிற்கிறார்கள். அதன் கருவியாகச் செயல்படுகிறார்கள். ஒருநாள் இதற்காகவும் அவர்கள் வருந்துவார்கள். இது நீங்கள் எழுதிய வரி. இதை என்னால் சரியாகப்புரிந்துகொள்ள முடியவில்லை. மார்க்ஸியர்கள் பழபெரும்பாரம்பரியத்தை அழிக்கிறார்கள் என்றால் எந்தப்பாரம்பரியத்தை? அஸீஸ் அன்புள்ள அஸீஸ், இந்துமதம், இந்துசிந்தனை மரபுதான். இந்தச் சொல் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/74909

மின் தமிழ் பேட்டி 2

writer_sujatha_bday




10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/69818

ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்- கடைசியாக.

PQAAAICMka1F_3xrMiT4OL9aj4GRIhoDvF7vQ5lbY-U2GSm38ZOx1wE8k4G5yP4uKVoc1pBhMAVw0PSmmVNLgv2lyPkAm1T1UN_p41eaRmZXR7y1wVYnQp5JldV6




பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்களா என்ற கட்டுரைக்கு என்னென்ன எதிர்வினைகள் வருமென எண்ணினேனோ அவையே வந்தன. கிட்டத்தட்ட நாநூறு கடிதங்களில் கணிசமானவற்றில் செருப்பாலடிப்பது, வாரியலால் அடிப்பது,மலத்தில் முக்கி அடிப்பது போன்ற வரிகள் இருந்தன. ‘செப்பல் அடி’ என்ற சொல் எனக்கு உண்மையில் புரியவில்லை. நான் செப்பலோசை கொண்ட செய்யுளின் ஒரு வரி என்றே ஆரம்பத்தில் புரிந்துகொண்டேன் இவற்றைச் சொல்லும் இளையதலைமுறையினரின் உள்ளம் எத்தனை கரிபடிந்தது என்று வியப்பாக இருக்கிறது. இவை அனைத்துமே தீட்டு உருவாக்கும் பொருட்கள். ஒருவனை சாதி ரீதியாக …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/67281

ஒரு பேராறு




பகவதி கோபம் கொண்டு கொந்தளித்தது. எம்பி எம்பி குதித்தது. நேராக குருவின் அருகே வந்து ‘ என்னை நீ நம்பலையா? என் மேலே சந்தேகமா? ஊ? திருட்டாந்தம் காட்டணுமா? திருட்டந்தம் காட்டணுமா?’ என்று கூவியது.







Permanent link to this article: http://www.jeyamohan.in/7941

அறிதலை அறியும் அறிவு




நான் பிரம்மசூத்திரத்தைப் பற்றி முதலில் கேள்விப்பட்டது பாரதியின் உரைநடையில். இடிப்பள்ளிக்கூடத்தில் பிரமராய வாத்தியாருடன் பாரதி பிரம்மசூத்திரம் சங்கர பாஷ்யத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போது அன்னிபெசண்ட் ஆதரவாளரான வேதவல்லி அம்மையார் வந்து அவர்களை நாடு பற்றி எரிகையில் வேதாந்தம் பேசும் கோழைகள் என்று வசைபாடி ஆண்களுக்கு திராணி இல்லாவிட்டால் வெள்ளைக்காரனிடம் பேசி சுதந்திரத்தைப் பெற பெண்கள் போகிறோம் என்றெல்லாம் எள்ளிநகையாடி, நாளிதழை மூஞ்சிமேல் தூக்கி வீசி செல்கிறாள். பாரதி தெரிந்துதான் அங்கே பிரம்மசூத்திரத்தை பேசுவதாக வைத்திருக்கிறார். ஏனென்றால் ‘முட்டவரும் காளையிடம் வேதாந்தம்பேசுவது’ …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/54763

பௌத்தமே உண்மை -ஒருகடிதம்




அன்புக்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,வணக்கம். பௌத்தத்தில் நான் கொண்டுள்ள பேரார்வத்தையும் ஈடுபாட்டையும் கண்டு எனது இனிய நண்பர் திரு. முரளி கிருஷ்ணன் அவர்கள் உங்களுடைய ‘‘இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்’’ மற்றும் ‘‘இந்திய ஞானம்-தேடல்கள்,புரிதல்கள் ‘’ஆகிய இரண்டு நூல்களையும், ‘‘நீங்கள் இவற்றைப்படித்துப் பார்க்க வேண்டும்’’ என்று எனக்குக் கொடுத்தார். இவற்றைப் படித்து நான் பெரிதும் வியப்பில் ஆழ்ந்தேன். ஆஹா! தத்துவத்திலும் இலக்கியத்திலும் அறிவியல்துறைகள் பலவற்றிலும் எவ்வளவு அகலமாகவும் விரிவாகவும் ஆழமானதாகவும் இருக்கிறது உங்களது அறிவு, எவ்வளவு …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/42960

காந்தியும் மடாதிபதிகளும்




அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு காந்தியின் சனாதனம் – 6 கட்டுரையில் நீங்கள் எழுதிய கீழ்க்கண்ட வரிகளைப் படித்தேன். ” காந்தி எந்த மடாதிபதியையும் சந்தித்ததில்லை, ஆசி வாங்கியதில்லை. அவர் சந்தித்த இந்துத் துறவியர் இருவர். சகோதரி நிவேதிதா மற்றும் நாராயணகுரு. அவர் மதித்த துறவி நாராயணகுரு மட்டுமே. நிவேதிதாவை அவரால் ஏற்க முடியவில்லை.” பரமஹம்ஸ யோகானந்தா எழுதிய “துறவியின் சுயசரிதம்” என்ற நூலில் மகாத்மா காந்தியை சந்தித்தது பற்றி ஒரு முழு அத்தியாயமே எழுதியிருக்கிறார். அத்தியாயம் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/27295

கல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]




1950களின் இறுதியில் ஆரம்பத்தில் இது நடந்தது. ஒருநாள் காலையில் ஒருவருக்கு தெரிய வருகிறது, அவருக்கு அன்று காலை திருமணம் நிச்சயமாகப் போகிறது. எல்லா ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்து முடிக்கப் பட்டிருந்தன. மாமா வீட்டில் இருந்து முந்தையநாள் இரவுதான் வந்திருக்கிறார். ‘எல்லாம் நிச்சயமாயிட்டது. நல்ல எடம். சொந்தம்தான்’ என்றார் அப்பா. அவர் கடும் மனக் கொந்தளிப்பை அடைந்தார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இரண்டு மணி நேரம் அறையை மூடிக்கொண்டு பதற்றமும் பரிதவிப்புமாக நடந்தார். சிறுஅழுகை வந்து நெஞ்சை முட்டியது.தன் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/8630

Older posts «