Tag Archive: தேவன்

மாலை விருந்தில்…




நான் எழுத்தாளர் டாப்னியுடன் இரவுவிருந்துக்குச் சென்றபோதுதான் பாட்டியை சந்திக்க நேர்ந்தது.  கூடவே எங்கள் நண்பர் லயனலும் வந்திருந்தார். இல்லத்தலைவரான மூத்தசீமாட்டியைச் சந்தித்தது எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அறிமுகம்செய்து வைத்தேன். ”நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று கேள்விப்பட்டேன்” திருமதி வேய்ன் சொன்னாள் ”எனக்கு எப்போதுமே இலக்கியவாதிகளைப் பிடிக்கும். பல வருடங்களுக்கு முன்பு நான் மிஸ்டர் தாக்கரேயையும் மிஸ்டர் டிக்கன்ஸையும் சந்தித்திருக்கிறேன்…” அது பாட்டி தன் பேச்சைத்தொடங்கும் முறையாக இருக்கலாமென்று எண்ணிக்கொண்டேன். எழுத்தாளர் டாப்னே தன் ஆர்வத்தை வெளிக்காட்டினார்.கிழவி சொன்னாள். …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/1604

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?




[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/79847

வெண்முரசு விழா – மஹாபாரதக் கலைஞர்கள்

திரு. கமலக்கண்ணன்




தொன்றுதொட்டு மகாபாரதக் கதையை நிகழ்த்துகலையாக நடத்தி வரும் ஐந்து மூத்த மகாபாரதப் பிரசங்கியர் வெண்முரசு புத்தக வெளியீட்டு விழா – 2014 -இல் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். ஒரு இடையறாச் சங்கிலியின கண்ணிகளை கௌரவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். முனைவர் இரா. வ. கமலக்கண்ணன் காஞ்சிபுரத்தில் வசித்துவரும் இவர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். ஆர்வத்தால் தாமே பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களை ஆழமாகக் கற்றுத் தேறியவர். வைணவ ஈடுபாடு உடையவர். ஆழ்வார் பாடல்களில் உள்ள ஆழமான பயிற்சி காரணமாக நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு எளிய உரை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/65258