Tag Archive: தேவதேவன்

கவிதையின் அரசியல்– தேவதேவன்
    எங்களூரில் தினம் ஒரு இடத்தில் ‘தகடு எடுப்பு’ நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ”அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு?”என்று கேட்டபடி வேடிக்கைபார்க்கும் கும்பல் பின்னால் போகும். அந்தி கறுத்ததும் வீட்டுக்கு தென்மேற்கு மூலையில் நுனிவாழை இலை விரித்து, பச்சைமட்டைக்கீற்றில் தேங்காயெண்ணை ஊற்றி சுருட்டிய துணித்திரியில் பந்தம் கொளுத்தி, நான்குபக்கமும் நட்டு, நடுவே கல்லில் சாமி ஆவாகனம் பண்ணி நிறுத்தி ,மஞ்சள்பொடிகலந்த அரிசிப்பொரியும் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/240

தேவதேவன் விபத்துக்குப்பின் குணமடைந்தார்
  கவிஞர் தேவதேவன் சென்ற ஏப்ரல் 27 அன்று காலை சில கட்டுமானப்பொருட்கள் வாங்குவதற்காகச் சென்று சாலையைக் கடந்தபோது சிறிய விபத்துக்குள்ளானார். அவரது மனைவி அப்போதே கூப்பிட்டு தகவல் தெரிவித்தார். நான் எர்ணாகுளத்தில் இருந்தேன். சற்று நேரத்திலேயே அஞ்சுவதற்கொன்றும் இல்லை என்று தெரிந்தது கவிஞர் தேவேந்திரபூபதி உட்பட அவரது நண்பர்கள் அவருக்கு உதவியாக இருந்தனர். அவர் இப்போது மீண்டு வீடு திரும்பிவிட்டார். நண்பர் செல்வேந்திரன் எழுதிய குறிப்பு   தேவதேவன் வீட்டில் நேற்று தேவதேவன் தலையில் ரத்தக் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/87449

அப்துல் ரகுமான் – பவள விழா

1
வானம்பாடி இயக்கத்தின் முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான அப்துல் ரகுமான் அவர்களுக்கு இன்றும் நாளையுமாக சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பவளவிழா கொண்டாடப்படுகிறது. கவிக்கோ கருவூலம் என்னும் நூலும் வெளியிடப்படுகிறது. அதற்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றேன் கவிஞர் என்பதுடன் அரசியல் பிரமுகர் என்னும் அடையாளமும் கொண்டிருப்பதனால் மிகப்பெரிய விழாவாக இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மு.கருணாநிதி உட்பட முக்கியமான அரசியல்வாதிகளும் மனுஷ்யபுத்திரன் போன்ற இலக்கியவாதிகளும் பங்குகொள்கிறார்கள் . நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள். தமிழ்ப்புதுக்கவிதை இயக்கம் ஒன்றுக்கும் மேற்பட்ட முன்னுதாரணங்களைக் கொண்டு உருவானது. முன்னோடிகளாக …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/80118

தேவதேவனை தவிர்ப்பது…

images
வணக்கம். பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எடுத்த தேவதேவன் கவிதைகள் கடந்த ஐந்து மாதங்களாக என்னிடம் இருக்கிறது. வாசித்துக்கொண்டே இருக்கிறேன். தேவதேவன் கவிதைகள் எப்போதும் என்னோடே வருகின்றன. ஏராளமான தருணங்களில் சிற்சில விஷயங்களுக்கெல்லாம் ஏற்றதாக தேவதேவன் கவிதை நினைவில் மின்னிக்கொண்டேயிருக்கிறது. பாதத்திலொரு முள்தைத்து முள்ளிள்ளாப் பாதையெல்லாம் முள்ளாய் குத்தும் என நாள்தோறும் பலமுறை உரக்கச்சொல்வேன். இப்படி ஏராளம். கவிதைகளுக்குள் சிக்கிக்கொண்டுவிட்டேனென்று தோன்றுகிறது. குறிப்பாக தேவதேவனைத் தாண்டிப்போவது ஆகாத காரியமென்று படுகிறது. இதனால் பிற புனைவுகளை வாசிப்பது குறைந்துவிட்டது. தேவதேவனைப் பார்த்து …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/77853

தேன்மலர்
அன்புள்ள ஜெயமோகன், நானும் என் நண்பனும் ஒரு கனத்த மனதுடன், ஒரு விரக்த்தியான மனநிலையில் நடந்து கொண்டிருந்தோம். வேலை இல்லை, அம்மா அப்பா சண்டை, அண்ணன் வீட்டை விட்டு வெளியேறியது, தோழி காதலியாக மறுப்பு , நட்பிடையேயான பொறாமைகள், பேசிக்கொள்ளப்படாத மன வருத்தங்கள்… என வகை வகையான பிரச்சனைகள். நட்பு கூட விரக்திக்கு வழி காண முடியாத ஒரு நிலை. பேசிக்கொள்ளவும் இல்லை. எவ்வளவு சிக்கலான ஒன்று இம்மனது! அச்சமயம் ஒரு கார் எங்கள் அருகே வந்து …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/75669

அந்நிய நிலத்தின் பெண்

unnamed
தேவதேவனின் அனைத்துக்கவிதைகளும் அடங்கிய ‘தேவதேவன் கவிதைகள்’ என்ற பெருந்தொகுதி தமிழினியால் வெளியிடப்பட்டபோது ஒரு விவாதம் எழுந்தது. இவ்வளவு பெரிய தொகுப்பாக கவிதைகளை வெளியிடலாமா, அது கவிதையனுபவத்தைக் குறைக்காதா, தனிப்பட்ட கவிதைகள் மேல் கவனம் நீடிக்கத் தடையாக இருக்காதா என இருக்கும், எளிய முதல்கட்ட வாசகனுக்கு. ஓரிரு கவிதைகளே அவனுக்குத் தேவையானவை. அவனைக் கூர்ந்து வாசிக்க வைப்பவை. ஆனால் நல்ல கவிதைவாசகன் அப்படி அல்ல. அவன் ஒரு மொத்த அனுபவத்தைத் தேடுபவன். முழுமையை நாடுபவன். ஒரு பெரிய கவிதைநூலின் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/68654

தேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து
  கவிஞர் தேவதேவன் – கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து. 2014 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிஞர் தேவதேவனின் வாழ்த்து. ஞானக்கூத்தனைப்பற்றி கே.பி.வினோத் எடுக்கும் ‘இலைமேல் எழுத்து’ ஆவணப்படத்தில் இருந்து. விஷ்ணுபுரம் விருது விழா டிசம்பர் 28 மாலை 6 மணிக்கு கோவை நானி கலையரங்கில் நிகழகிறது.
Permanent link to this article: http://www.jeyamohan.in/68399

விஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை

unnamed
அன்புள்ள நண்பர்களுக்கு, மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் பொருட்டு நம் நண்பர்களால் உருவாக்கப்பட்ட விருது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ . எல்லாவகையிலும் அடுத்த தலைமுறையினரால் அளிக்கப்படுவதாக இருக்கவேண்டும் இது என்பதை ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டோம். இதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இம்முறை மூத்த கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் ஒரு லட்சமும் நினைவுப்பரிசும் அடங்கியது இது.வழக்கமாக பரிசுபெறுபவர் பற்றி ஒரு நூல் வெளியிடப்படும். இம்முறை நண்பர் கெ.பி.வினோத் ஞானக்கூத்தனைப்பற்றி தயாரிக்கும் ஆவணப்படம் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/67272

வலியிலிருந்து தப்ப முடியாத தீவு

kuma__74278_zoom
நான் காசர்கோட்டில் பணியாற்றியபோது புணிஞ்சித்தாய என்ற ஓவியர் ஒருவர் மங்களூரில் இருந்தார். கர்நாடகத்தில் பிரபலமான நவீன ஓவியர். நேரடியாக ஓவியம் வரைந்து விளக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காக அவர் காசர்கோடு வந்திருந்தார். நான் உயிரோடு ஒரு நவீன ஓவியரை அப்போதுதான் பார்த்தேன் அவர் வரையும் விதம் ஆச்சரியமானது. முதலில் திரையில் வண்ணங்களை அள்ளி வீசுவார். அவை வழிந்துவர வர அவற்றை கத்தியால் நீவி ஓவியமாக்குவார். தற்செயலும் அவரும் சேர்ந்து வரையும் ஓவியங்கள். தரையில் அமர்ந்து நீர்வண்ண ஓவியம் வரைந்தார். …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/62687

மரபிலக்கியம் – இரு ஐயங்கள்
செவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவதுண்டு. இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் “நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேன். என் குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம். எதற்காக நேற்று என்ன எழுதினார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்பார்கள். இதன் மறுபக்கமாக வாசகர்கள் “நான் அறிந்து கொள்ள விரும்புவது இன்றைய வாழ்க்கையை. அதன் இன்றைய சிக்கல்களை. ஏன் நான் நேற்று எழுதப்பட்டவற்றை படிக்கவேண்டும்?” என்பார்கள். இவை முதல் பார்வைக்கு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/387

Older posts «