Tag Archive: தமிழகம்

பண்பாட்டை ஏன் சுமக்கவேண்டும்?




Aug 24, 2009 @ 0:09   அன்புள்ள  ஜெயமோகன், தென்றல் இதழில் உங்கள் பேட்டியை படித்தேன். அதில் நீங்கள் புலம்பெயர் இந்திய தமிழர்கள் வேற்று நாட்டையே தங்கள் நாடாக கொண்டு வாழ்வதை பற்றி ஒரு கசப்புடனே சொல்லியிருந்தீர்கள். வேறு நாட்டை தங்கள் வாழ்விடமாக கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? அமெரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ வாழ்வு தரம் சற்று மேம்பட்டு இருப்பதனால் தானே அவ்வாறு செய்கின்றனர். நீங்கள் பண்பாட்டு ரீதியாக உள்ள இழப்பை பற்றி பேசுகிறீர்கள். ஆனால் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/3705

கெட்டவார்த்தைகள்




  அன்புள்ள ஜெ.  வணக்கம் … பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/2196

மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்




தமிழகத்தின் மதமாற்ற தடைச் சட்டம் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கு இக்கருத்தரங்கில் கூறப் பட்ட காரணங்களை நான் வழி மொழிகிறேன். இந்தச் சட்டம், சமூகங்களுக்கு இடையே மனக் கசப்பையும் அவநம்பிக்கையையும் வளர்க்கக் கூடியதாக உள்ளது. நம்முடைய தேசத்தில் மதம் சில தளங்களை தவிர்த்துப் பார்த்தால் தனிப்பட்ட நம்பிக்கை என்ற தளத்தில் இயங்கவில்லை. தனிப்பட்ட நிலைபாடு என்ற தளம் அதற்கு முற்றிலும் இல்லை.இங்கே மதம் என்பது மத அடிப்படையிலான சமூகங்கள் என்றே பொருள் படுகிறது. ஆகவே மத விஷயங்களில் கூட்டாகச் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/601

உலகத்தொழிலாளர்களே!




மே மாதம் ஒன்றாம் தேதி, ஒலிபரப்புவதற்காக ஒரு பண்பலை வானொலியில் இருந்து தொலைபேசிப் பேட்டி எடுத்தார்கள். ஓரிரு சொற்கள், அதில் பாட்டுகளில் ஊடாக ஒலிக்கும் என நினைக்கிறேன்! அப்போது மனதில் பட்டதைச் சொன்னாலும் அதன்பின் அச்சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. இன்று உழைப்பாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது, மேம்பட்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி. எனக்கு இதற்கு ஒற்றை வரிப் பதிலாகச் சொல்லமுடியவில்லை. உழைப்பாளிகளின் இடம் என்பது சமூக அமைப்பு சார்ந்து மாறுபடக் கூடியது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் உழைப்பாளி …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/16732

ஒக்கலை ஏறிய உலகளந்தோன்




சங்க இலக்கியத்திற்கும் பக்தி காலகட்ட இலக்கியங்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு பின்னதில் பயின்றுவரும் பல அன்றாட வழக்குச் சொற்கள். சங்க இலக்கியச் சொல்லாட்சி நம்மிடமிருந்து விலகி தொலைதூரத்தில் நிற்கும்போது தேவார திருவாசக பிரபந்தப் பாடல்களின் சொல்லாட்சிகள் நமக்கு மிக அண்மையவாய் உள்ளன. நாம் செல்லமாகவும், மழலையாகவும், கடுமையாகவும், நுட்பமான பொருளில் பயன்படுத்தும் வட்டாரச் சொற்களை அப்பாடல்களில் காணும்போது ஒருவகை உவகை ஊற்றெடுக்கிறது. பல தஞ்சை வட்டார வழக்குச் சொற்களைக் கேட்டு நான் உவகை கொண்டதுண்டு. அதில் ஒன்று …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/2132

தமிழக வரலாறு தொடங்குமிடம் எது?




ஒரு சமூகம் எப்போது தன்னுடைய வரலாற்றை பதிவுசெய்ய வேண்டும் என்று எண்ணுகிறதோ அப்போதே அந்தச்சமூகத்தின் பண்பாடு முதிர்ந்துவிட்டது என்றுதான் அர்த்தம். தன்னைப்பற்றிய ஒரு தெளிவான சுயஅடையாளத்தை உருவாக்கிக் கொண்டபின்னர்தான் அச்சமூகம் ‘தான்’ என்றே உணர்கிறது. அந்த உணர்வில் இருந்துதான் தன்னுடைய இறந்தகாலத்தை அடியாளம் கண்டு வகுத்துக்கொள்கிறது. அதை தன்னுடைய எதிர்காலநினைவுக்காக கையளிக்கவேண்டும் என்று திட்டமிடுகிறது. அதன்விளைவாகவே அது ஏதேனும் ஒருவடிவில் தன் வரலாற்றை பதிவுசெய்ய முயல்கிறது. வரலாற்றுணர்வு உருவாவதற்கு நெடுங்காலம் முன்னரே அச்சமூகம் இருந்துகொண்டிருக்கும். அதன் வாழ்க்கையை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/58364

பறவைச்சரணாலயங்கள்




அன்புள்ள ஜெமோ, வணக்கம். நான் பூபாலன்.ஏற்கனவே சில கடிதங்கள் தவிர கணிணி,செல்லிடப்பேசி குறுந்திரை என தினமும் தொடர்ந்து உங்களுடன் உரையாடி க்கொண்டிருப்பவன்.பிறந்து வளர்ந்தது,சித்திரங்குடி,முதுகுளத்தூர் வட்டம்,இராமநாதபுரம் மாவட்டம்.தற்போது பிழைப்பிற்காய் சென்னையில்.எங்கள் ஊர் சித்திரங்குடி இந்தியாவின் மிகத்தொன்மையான வலசைப் பறவைகளின் வாழிடம்.(http://www.forests.tn.nic.in/WildBiodiversity/bs_cbs.html).சில நூற்றாண்டுகளாகவே பல்லாயிரக்கணக்கில் வெளிநாட்டுப்பறவைகள் வந்து தங்கி தலைமுறைகளை உற்பத்தி செய்து செல்லும் தொன்மையான பறவைகள் சரணாலயம்.தொண்ணுறுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அப்பத்தா, தான் இந்த ஊருக்கு வாழ்க்கைப்பட்டு வரும்போதே பல மாமாங்களாக இங்கு பறவைகள் வந்து போவதாக …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/36050

அற்பத்தனமும் அகங்காரமும்




மதிப்பிற்குரிய ஜெயமோகன், நீங்கள் அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொண்டதை (“இப்படி இருக்கிறார்கள்”) எழுதியிருந்தீர்கள் . என் நெடுநாள் சந்தேகம் , அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொள்வது சரியானதா என்று…. ஏனெனில், சில சமயம் சக மனிதர்களின் அற்பத்தனத்தை கண்டு பொங்கிருக்கிறேன் . கடுமையாக திட்டியிருக்கிறேன் . ஆனால் அதன் பின் வருத்தபட்டிருக்கிறேன். நான் இன்னமும் பண்படவில்லையோ என்று…. நல்ல தந்தை அல்லது ஆசிரியர் , தங்கள் மக்களின் அறியாமையை கண்டு கோபத்தில் தண்டிப்பது சரியானதா? அன்புடன், அருண் . அன்புள்ள …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/36883

ஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்?




பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு – நான் உங்களது திருச்சி நட்புகூடலில் கலந்து கொண்டேன். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இத்தனை எளிதாக கிடைக்கும் என்று நினைக்கவில்லை. மிக மகிழ்ச்சி. உங்களிடம் நான் கேட்க நினைத்த பல கேள்விகளை கேட்கவில்லை. அனால் கேட்க நினைத்து கேட்காமல் விட்ட ஒரு கேள்வி… நீங்கள் M.S.சுப்புலட்சுமி அவர்களது பூர்வீக வாழ்கையை விரிவாக எழுதி இருந்தீர்கள், அவரது ஆரம்ப கால வாழ்கை என்னைபோல பலரும் அறியாத ஒன்று. அதை சுப்புலட்சுமி அவர்களும் மறக்கவும் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/36561

காந்தமுள்




”ஐயா வணக்கம்” ”தமிழ்வணக்கம் தம்பி ” ”இல்லீங்க…நான் வேற” ”என்ன சொல்றீங்க தம்பி?” ”தமிழ் வேற நிகழ்ச்சிக்கு வாறவருங்க.எம்பேரு பிரபு…நான்தான் இவரைச் சந்தியுங்க நிகழ்ச்சிக்கு வாறவன்” ”நல்லா இருங்க…வாழ்க தமிழ்” ”அப்டிச்சொல்றீங்களா?”. ”ஆமா தம்பி தமிழ் எனக்கு மூச்சு… ”. ”சரிங்க விட்டுகிட்டே இருங்க…அப்ப கேள்விகளை ஆரம்பிக்கலாமுங்களா?” ”தாராளமா…வெல்க தமிழ்!” ”ஐயா இப்ப நீங்க இருக்கீங்க …நீங்க உங்கள தமிழியர்னுட்டு சொல்லிக்கிடறீங்க. அதனால மத்தவங்களும் ஒங்களை தமிழியர்னு சொல்றாங்க…அதனால நாம பொதுவா உங்கள தமிழியர்னு சொல்லலாம் இல்லீங்களா?” …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/1314

Older posts «