Tag Archive: தகழி சிவசங்கரப்பிள்ளை

தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்




  கதையில், குறிப்பாக நாவலில் வாசிப்பார்வம் எப்படி உருவாகிறது? அடுத்தது என்ன என்ற ஆவலை தொடர்ச்சியாக அது ஊட்டுவதன் மூலம்தான். அடுத்தது என்ன என்று ஒவ்வொரு தருணத்திலும் தெரிந்திருக்கையில் ஒரு நாவல் நமக்கு எப்படி அர்த்தப்படும்? சமகால வரலாற்று நாவல்களின் சவால் இது. சமகால வரலாற்றில் நாமறியாத தகவல்கள் குறைவு அபூர்வமான தகவல்களைப் பெரும்பாலும் கலைப்படைப்புகள் கண்டுபிடிப்பதில்லை. அவை தகவல் சார்ந்த புதுமைகளுக்காக முயல்பவை அல்ல. அறிந்தவற்றின் ஆழங்களையே அவை நாடுகின்றன. அறிந்த விஷயங்கள் மீதான புதிய …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/222

வீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -1

MT_VasudevanNair_mahesh_150




எம்.டி. வாசுதேவநாயர் என்ற பெயரையோ அவரது புகைப்படத்தையோ எங்கு பார்த்தாலும் என்னுடைய நினைவில் வந்துநிற்பது ஒரு பழைய புகைப்படம். அவர் ஒரு தென்னை மரத்தில் முக்கால்வாசி ஏறி அமர்ந்து கீழே பார்த்துக்கொண்டிருப்பார். எழுபதுகளில் அந்த புகைப்படம் மலையாள வார இதழ் ஒன்றில் வந்தது. அதைப்பற்றி நான் ஏன் இத்தனை காலம் நினைவில் வைத்திருக்கிறேன் என்று நானே வியந்திருக்கிறேன். அப்படி நினைவில் வைத்திருப்பதற்கான காரணமாக நான் கண்டுகொண்டது எங்கோ ஓர் இடத்தில் நான் அதற்கு ஆசைப்படுகிறேன் என்பதுதான். ஏனென்றால் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/61982

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1




பொத்தை என்ற நன்னீர் மீனைப்பற்றி கிராமங்களில் அடிக்கடி பேசப்படும். சப்பையான தாடைகொண்ட சிறிய வகை மீன். ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாக வாழக்கூடியது. அமைதியான தெளிநீரில் சிறிய கூட்டங்களாகப் புழுப்பிடிக்க வரும். பறவைகளாலோ மனிதர்களாலோ ஆபத்து அருகே வந்தது என உணர்ந்தால் மொத்த மீன்கூட்டமும் சிறு அம்புகள் போல சேற்றுப்பரப்பில் தைத்து வாலைச் சுழற்றி நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டுவிடும். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளுக்கு ‘பொத்தைக்கலக்கி’ என்ற செல்லப்பெயர் ஊரில் உண்டு. கலக்குவது ஒரு ராஜதந்திர உத்தி. கலங்கலிலேயே வாழும் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/25545