Tag Archive: டெல்லி

சகிப்புத்தன்மையின்மை!




என் வாழ்க்கையில் அதிகாரம் என்றால் என்ன என்று நான் கண்கூடாக அறிந்தது 1994 இல் சம்ஸ்கிருதி சம்மான் விருதுக்காக டெல்லி சென்று அங்கே இந்தியா இண்டர்நேஷனல் செண்டரில் இரண்டு நாள் தங்கியிருந்தபோதுதான். அதற்கு முன்னரே இரு அமைச்சகங்களில் எனக்கு அறிமுகமுண்டு, செய்தித் தொடர்பு துறை மற்றும் கலாச்சாரத்துறை. ஆனால் அதிகாரம் தங்கத் தாம்பாளத்தில் பரிமாறப்பட்டிருப்பதை அங்கேதான் பார்த்தேன். பெரிய வளாகத்தினுள் அமைதியான சொகுசான பங்களா. புல்வெளிகள். உயர்தர உணவுகள். குடிவகைகள். ஓசையின்றி வெண்புகைபோல நடமாடும் பரிசாரகர்கள்.மேலுதடு அசையாமல் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/81384

நூறுநிலங்களின் மலை – 12




மணாலி சண்டிகர் வழியில் உண்மையில் இரவு மிகுந்த சிக்கலுக்குள்ளானோம். மணாலியில் நாங்கள் தங்கவில்லை. மணாலிச் சாலையோரம் ஓர் திபெத்திய அம்மா கூடாரம் கட்டி உணவகம் அமைத்திருந்தார்கள். அங்கே காலைச்சாப்பாடு சாப்பிட்டோம். அங்கிருந்து இரவுணவு உண்பது வரை கிட்டத்தட்ட பதினாறு மணிநேரம் தொடர்ச்சியான பயணம். மலையிறங்கியபின் அந்த அம்மணியை நினைத்துக்கொண்டோம். அபாரமான சுறுசுறுப்பு. சமையல் பரிமாறுதல் கணக்குச் சொல்லுதல் எல்லாமே அவர்கள்தான். பாடிக்கொண்டே இருந்தார்கள். எங்கள் ஊர் கன்யாகுமரி என்று கேட்டறிந்து மகிழ்ச்சி அடைந்தார்கள். டெல்லிக்கு அப்பாலிருந்து வந்திருக்கிறார்கள் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/39732