Tag Archive: சிறுகதைகள் மதிப்பீடு

சிறுகதைகள் என் மதிப்பீடு -6




  எழுதத் தொடங்குபவர்களின் முக்கியமான சிக்கல்களில் இறுதியாக ஒன்றைச்சொல்லவேண்டும். ஒரு சூழல் உருவாக்கி நிலைநிறுத்தி வைத்திருக்கும் பொதுவான உணர்வு நிலைகளுக்குள், அழகியலுக்குள், கருத்தியலுக்குள், வடிவங்களுக்குள் சென்று விழுவது அது. இது விகடன் குமுதம் போன்ற பெரிய இதழ்களில் மட்டுமல்ல, காலச்சுவடு, உயிர்மை போன்ற சிற்றிதழ்களுக்கும் பொருந்தும். இதழ்கள் இருவகையில் பொதுப்போக்கை உருவாக்குகின்றன. ஒன்று, சமூகத்தில் இன்றிருக்கும் பொதுவான உணர்வுநிலைகளும் கருத்துநிலைகளும் இவற்றினூடாக இயல்பாக வெளிப்படும் இன்னொன்று இவ்விதழ்களுக்கு இருக்கும் தேர்வுமுறையினால் பொதுவான சில போக்குகள் இவ்விதழ்கள் வழியாக …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/92743

சிறுகதைகள் என் மதிப்பீடு -5




    எழுதும் பயிற்சியின் தொடக்க காலத்தில்  கதைக்கருக்களை கையாளும்போது எப்போதும் வரும் இடர் ஒன்று உண்டு. அந்தக் கதை யார் பார்வையில் சொல்லப்பட வேண்டும்? எல்லாக் கதைகளிலுமே ஆசிரியனின் கண்கள் சென்று அமரும் ஒருமுகம் உண்டு. நாவல்களில் அது ஒன்றுக்கு மேற்பட்ட முகமாக இருக்கலாம். மிகத் தெளிவாக வாசகனுக்குத் தெரிவதாக இருக்கலாம். அல்லது ஆசிரியனால் மிக நுணுக்கமாக அது மறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அக்கதைக்குள் ஆசிரியன் இருந்தாக வேண்டும்.   முற்றிலும் ஆசிரியனிடம் இருந்து விலகி கதை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/92655

சிறுகதைகள் என் மதிப்பீடு -4




  புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய சவால் உண்டு. சிலம்புவித்தை கற்றுக் கொள்பவர்கள் சிலம்பை மறந்தால் அன்றி களம் நின்று போராட முடியாது., அதைப்போல மொழிநடை தன்னியல்பாக கைகளில்எழுந்து வருமளவுக்கு உள்ளம் பழகினாலன்றி இலக்கிய நடையில் சரளமான ஓட்டத்தை உருவாக்க முடியாது. எண்ணி எண்ணி கதை எழுதுவதாகவும், ஒவ்வொரு சொல்லாகக் கதையை கோர்ப்பதாகவும் அவ்வப்போது சில எழுத்தாளர்கள் சொல்வதுண்டு. உண்மையிலேயே ஒரு எழுத்தாளர் அப்படிச் செய்தார் என்றால் அது துளிகளின் திரட்டாகவே இருக்கும். புனைவுக்கு இருந்தாகவேண்டிய ஓட்டம் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/92576

சிறுகதைகள் என் மதிப்பீடு -3




சிறுகதைகளைப்பற்றி நான் சொன்ன கருத்துக்கள் சார்ந்து எதிர்வினைகள் என ஏதும் வரவில்லை. ஆசிரியர்கள் இதை கவனிக்கிறார்கள் என நினைக்கிறேன். மாதவன் இளங்கோவின் முடி சிறுகதை சிறுகதைக்குரிய வரையறுக்கப்பட்ட வடிவத்தை இயல்பாக சென்றடைந்திருக்கிறது. ஒன்று குவிமையம். முடி என்பதில் தொடங்கும் கதை இறுதிச் சொல் வரை திசை மாறாமல் நேராக வளர்ந்து செல்கிறது. இரண்டாவதாகக் கதை சொல்லியின் விவரணைகள் சூழலையோ கதாபாத்திரங்களையோ அறிமுகம் செய்யும் போது சொல்லிச் செல்லல் நினைவோட்டல் என்ற முறையில் அலைபாயவில்லை. மூன்றாவதாக கதை இறுதி …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/92512

சிறுகதைகள் என் மதிப்பீடு -2




சிலசிறுகதைகள் 2  குறித்து என் பார்வைகளை முன்வைக்கும் முன் சில சுயவிளக்கங்கள். சம்பந்தமே இல்லாமல் எவரெல்லாம்  புண்படுவார்களோ, முகநூலில் குமுறுவார்களோ அவர்களிடமெல்லாம்  ‘மன்னிச்சிடுங்கண்ணாச்சி’ சொல்லிக்கொள்கிறேன்.   என் சிறுகதை விமர்சனத்தில் ஒரு சின்ன அத்துமீறல் உள்ளது. அது கதையை எப்படி எழுதியிருக்கலாம் என்று சொல்வது. விமர்சகன் அதைச் சொன்னால் ‘டேய் போடா’ என்றுதான் எழுத்தாளன் சொல்லவேண்டும். நான் சற்று ‘மூத்த’ எழுத்தாளன் என்பதனால் இந்த உரிமையை எடுத்துக்கொள்கிறேன்.   அதேபோல விமர்சகன் எழுத்தாளனை நோக்கிப் பேசக்கூடாது. அவன் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/92466

சிறுகதைகள் – என் மதிப்பீடு -1




  எழுத்தை விமர்சனம் செய்தால் எதிரிகளாகி விடுகிறார்கள் என்று ஒருகடிதத்தில் சொன்னது வேடிக்கைக்காகத்தான். அதற்காகவெல்லாம் விமர்சனம் செய்யாமல் இருந்துவிட முடியாது. எந்த ஒரு இலக்கியவாதிக்கும் அவனுடைய படைப்பின் உள்மடிப்புகளை உண்மையிலேயே தொட்டு அறிந்த ஒரு வாசகனின் எதிர்மறை விமர்சனமும் கூட உள்ளூற இனிதாகவே இருக்கும். கடுமையான விமர்சனங்கள்கூட அப்புனைவை எழுதியவனை விட ஒருபடி மேலே நின்றிருக்கும் வாசகனால் சொல்லப்படும்போது ஒருவகை ரகசிய வரவேற்பையே பெறுகின்றன சென்ற காலத்தில் தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் மிகக் கடுமையான விமர்சனங்களின் ஒரு …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/92266