Tag Archive: சிக்கவீர ராஜேந்திரன்

மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’




    வரலாற்று நாவல் என்றால் என்ன என்று தமிழில் எளிய வாசகனிடம் கேட்டால் கல்கி, சாண்டில்யன் கதைகளைக் குறிப்பிடுவான். துரதிர்ஷ்டவசமாக சமீப காலம் வரை கல்வித்துறைசார்ந்த இலக்கிய விமரிசகர்களும் இதையே கூறிவந்தனர். ராஜா ராணி பற்றிய பாட்டிக்கதைகள் வரலாற்றுக் கதைகளா? ராஜாவுக்கு ராஜராஜ சோழன் என்றும் ராணிக்கு பெருந்தேவி என்றும் பெயரிட்டுவிட்டால் போதுமா? வரலாற்றுத் தகவல்களைப் பயன்படுத்தியதனால் மட்டும் ஒரு நாவல் வரலாற்று நாவல் ஆகிவிடுவதில்லை. வரலாறு மீதான அதன் ஆய்வுமுறையே அவ்வியல்பை தீர்மானிக்கும் அம்சமாகும். …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/190

கடிதங்கள்




அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஆரோக்கிய நிகேதனம் வாசித்தேன்.மகத்தான நாவல். என் சிறிய வாசிப்பு அனுபவத்தில் நான் வாசித்த மிக அற்புதமான நாவல்.தஸ்தாவெய்ஸ்கியின் நாவல்களை விட.மிகப் பெரிய விஷயம்.கண்ணீரைப் பின்தொடர்தல் வாசித்திருக்காவிட்டால் இதை நான் வாசித்திருக்க வாய்ப்பில்லை.நன்றி. சர்வோத்தமன். அன்புள்ள சர்வோத்தமன் முப்பெரும் பானர்ஜிகள் [மாணிக், தாராசங்கர், விபூதிபூஷன்] இந்திய இலக்கியத்தின் சிகரங்கள். இமயமலை அடிவார கிராமங்களில் எந்தப்பக்கம் திரும்பினாலும் வெள்ளிமலைச் சிகரங்கள் தெரியும். சிகரங்களுக்கடியில் வாழ்கிறோம் என்ற பிரக்ஞை இருந்துகொண்டே இருக்கும். இந்திய இலக்கியத்தில் அவர்கள் சிகரங்கள் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/30944