Tag Archive: சமூகம்.

டாக்டர்கள் என்னும் சேவைவணிகர்கள்




அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் மருத்துவர்கள் மேல் பொதுமக்களுக்கு இருக்கக்கூடிய விமர்சனங்களை முன் வைத்து நீயா நானா நிகழ்ச்சி நடந்தது. அது சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிடத் தக்க விவாதத்தை நிகழ்த்தியது. எதிர்பார்த்தது போலவே மருத்துவர்கள் அவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டைப் பற்றி எந்தப் புரிந்துணர்வும் இல்லாமல் அதற்கான பொறுப்பு தங்களுக்கு உள்ளது பற்றிய எந்த உணர்வும் இல்லாமல், தனது துறை சார்ந்த பாசம் ஒன்றை மட்டுமே முன்னிறுத்தி, தன்னிடம் வரும் நோயாளிகள் அறிவற்று இருப்பதாகவும், TRP …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/60765

நிறம்




அன்புள்ள ஜெ, நிறவெறி குறித்த இந்த பதிவு என் நெஞ்சை வருடியது! http://aveenga.blogspot.com/2009/08/blog-post_08.html உங்கள் கருத்து? விஜயசங்கர் *** அன்புள்ள விஜயசங்கர், ஆத்மார்த்தமான பதிவு. நான் இதைப்பற்றி ஆழமாக நினைத்த ஒரு தருணம் சமீபத்தில் வந்தது என் பெண் சைதன்யா ஒருநாள் ”அப்பா எனக்கு ஐம்பது ரூபாய் வேண்டும்” என்று கேட்டாள். ”எதுக்குடி ஐம்பது ரூபாய்?” என்றேன். ”என்னோட ஃப்ரன்டு லாவண்யாவுக்கு பர்த்டே கிஃப்ட் குடுக்கணும்” வழக்கமாக இதற்கெல்லாம் இருபது ரூபாய்தான் கணக்கு. அதில் நாலைந்து பெண்களாக …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/5971

நமது கட்டிடங்கள்




நம்முடைய கட்டிடக்கலை தமிழகத்தில் இன்று எவ்வாறு அடையாளமிழந்து போய்விட்டிருக்கிறது என்று பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஒட்டி இணையக்குழுமத்தில் நிகழ்ந்த விவாதங்களுக்கு என் எதிர்வினை இது உலகில் எங்கும் எப்போதும் கட்டிடக்கலை ‘தூய்மை’யாக இருக்காது. ஒரு தலைமுறைக்குள் அமைப்பில் மாற்றம் வராமலும் இருக்காது. கட்டிடம் பண்பாட்டுச்சின்னமாக இருப்பதனால் ஒரு நாட்டில் நுழையும் எல்லாப் பண்பாடுகளும் கட்டிட அமைப்பைப் பாதிக்கின்றன. நடைமுறைத் தேவைகள் கட்டிட அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. ஆகவேதான் உலகக் கட்டிடக்கலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. நம்முடைய …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/16800

இந்தியா குறித்த ஏளனம்…




அன்புள்ள ஜெமோ,இங்கு எனது வெள்ளைகார நண்பர்கள் அடிகடி கூறும் இந்தியா பற்றிய கருத்து இது தான். இந்தியா ஏழை நாடு.இங்கு வேலை செய்யும் பல இந்தியர்கள் இந்தியர் அல்லாதவர்களிடம் அதிகம் பழகுவது இல்லை. பெரும்பாலனவர்க்கு நான் சொல்வது புரியுமா தெரியவில்லை.







Permanent link to this article: http://www.jeyamohan.in/6730

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?




நண்பர்களே, பொதுவாக நான் கல்லூரிகளுக்குச் செல்ல ஒத்துக் கொள்வதில்லை. என் அனுபவத்தில் ஓர் எழுத்தாளனாக என்னுடைய முக்கியத்துவம் சற்றும் உணரப்படாத இடங்கள் கல்லூரி தமிழ்த்துறைகள்தான். அவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்த எழுத்தாளனையும் மதிப்பிடத்தெரியாது. ஆகவே அங்கே நுண்மையான அவமதிப்புகளுக்கு நாம் ஆளாகவேண்டியிருக்கும். இங்கு என்னை அழைத்த நண்பருக்காக ஒத்துக்கொண்டேன். அவருக்காகவும் என் பேச்சை சிலராவது எதிர்பார்க்கக் கூடும் என்பதற்காகவும் வந்தேன். என் மனநிலை சரியாக இல்லை என்பதனால் உரை சிறப்பாக அமையாவிட்டால் மன்னிக்கவும் * பல …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/29

அழிமுகம்




காசர்கோட்டில் வேலைபார்த்த நாட்களில் அம்மாவும் அப்பாவும் தற்கொலைசெய்துகொண்டபின்னர் நான் நோயுற்றவனாகவும் கொந்தளிப்பு கொண்டவனாகவும் இருந்தேன்.தபால்தந்தித்துறை ஊழியர்களுக்கான கம்யூனில் தங்கியிருந்த நான் அங்கே உள்ள நண்பர்களை தினமும் பார்ப்பதும் பேசுவதும் சகிக்க முடியாமல் ஆனபோது அங்கிருந்து வெளியேறி மொகரால்புத்தூர் என்ற இஸ்லாமியக் குடியிருப்புக்குள் ஒரு பழைய வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே குடியேரினேன். அது நான்செய்த முதல் பிழை. அந்த பழங்காலத்து வீட்டில், தன்னந்தனிமையில் எனக்கு மேலும் மன அழுத்தம் ஏற்பட்டது. அங்கிருந்து ஆன்மீகம். காஸர்கோட்டின் ஆரம்பநாட்களிலேயே எனக்கு …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/868

செய்தொழில் பழித்தல்




  அன்புள்ள ஜெ, உங்கள் வலையில் வரும் கடிதங்களை கூர்ந்து படிப்பதுண்டு. குறிப்பாக நான் கவனித்தது என்னவென்றால், மென்பொருள் துறையில் பணிபுரியும் உங்கள் வாசகர்கள் அனைவருமே தங்கள் தொழில் குறித்த அறிமுகம் செய்துகொள்ளும்போது “சாப்ட்வேரில் கூலித்தொழில் செய்கிறேன்” என்று சொல்வதன் காரணம் மட்டும் புரியவில்லை. கூலித்தொழில் என்பது எந்தவிதத்திலும் மட்டமல்ல எனும்போதும், அதன் பயன்பாட்டு தொனி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. குளிர்சாதன அறையில் அமர்ந்து சுகவாசியாக செய்யும் வேலையை, கைநிறைய மட்டுமல்ல, வங்கி நிறைய, நமது அன்றாட …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/3157

கெட்டவார்த்தைகள்




  அன்புள்ள ஜெ.  வணக்கம் … பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/2196

விவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…




 ஜெயமோகன் சார், தங்களின் ராஜா ரவி வர்மா பதிப்பை இப்பொழுது தான் படித்தேன். எங்கள் வீட்டில் அதே சரஸ்வதி படம் உள்ளது. மிகவும் அழகாகவும் தெய்வீகமாகவும்    இருப்பதாகவே உணர்கிறேன்.  ஆனால் விவேகனந்தர் அதை பற்றி கூறியது ஞாபகம் வந்தது. தங்களின் பார்வைக்காக பின்வருமாறு. இது  “ஈஸ்ட் அண்ட் வெஸ்ட்” கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. As regards ourselves, we need not, of course, at any rate for the present, go in for collecting …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/2493

எம்.எ·ப்.ஹ¤செய்ன் கடிதம்.




அன்புள்ள ஜெயமோகன், ஹிந்து தெய்வங்களின் திருவுருவங்கள் விக்டோரிய ஒழுக்கவியலாளர்களின் கட்டமைப்புக்கும் இரசனைக்கும் உருவானவை அல்ல என்பது சரியான விஷயம். ஒரு குறுகலான ஒழுக்கவிதியுடன் ஹிந்து திருவுருவங்களை உருவாக்க செய்யப்படும் முயற்சிகள் மடத்தனமானவை. ஆபத்தானவை. ஹுசைனின் ஓவியங்கள் தாக்கி அழிக்கப்பட்ட செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டிருந்தால் அவை நிச்சயமாக நம்மை வெட்கி தலைகுனியவே வைக்கும். அதே சமயம் அவரது ஓவிய உலகில் நுழைந்து நாம் பார்ப்பதும் அவசியம் என்றே நான் நினைக்கிறேன். ஹுசைனின் ஓவிய …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/5135

Older posts «