Tag Archive: ஏழாம் உலகம்

ஏழாம் உலகம் – கடிதம்




2எe அன்புள்ள ஜெ, நலமா? தங்களின் சங்கச்சித்திரங்களை சிறிது சிறிதாக வாசித்தேன். நல்ல வாசிப்பாகவும், சங்க பாடல்களை எப்படி பார்க்க வேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன். உங்களின் திருக்குறள் பற்றிய உரைகளையும் யூடிபில் கேட்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் நான் அவ்வப்போது திருக்குறளை புரிந்துகொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று சுழற்சி முறையில் வாசித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் ஒரு இடத்தில் கூறி இருப்பீர்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கும். அதனை அறிந்துக்கொண்டு …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/97344

ஏழாம் உலகம் -கடிதம்




வணக்கம் ஜெ… உங்கள் ஏழாம் உலகம் புத்தகம் படித்தேன், எப்படி உங்களால் அவர்கள் வாழ்கையை ஊடுருவி கண்டு எழுதினிர்கள் என்று வியப்பாக உள்ளது, எத்தனை குறையிருந்தாதுல் எப்படி அவர்களால் அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கையை வாழ முடிகிறது, நமக்கு எல்லாம் இருந்தும் எதோ ஒரு குறை சொல்லி வருத்தப்பட்டு கொண்டே இருக்கிறோம். குறிப்பாக குய்யன். அவர்களுக்கு ஒரு காதல் இருக்கிறது, அவர்களுக்குள்ளும் ஒரு தாய் இருக்கிறாள், இதை நாம் எப்போதாவது உணர்ந்து இருக்கிறோமா? உங்கள் புத்தகம் எனக்கு அந்த …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/97402

ஏழாம் உலகம்- கடிதங்கள்




  அன்புடன் ஆசிரியருக்கு விடுப்பு முடிந்து செவ்வாய்க்கிழமை அலுவலகம் சென்றேன். அன்றிரவு ஏழாம் உலகம் படித்து முடித்திருந்தேன். முதன்முறையாக  பத்து நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்ததால் ஒரு சிறிய தடுமாற்றம் இருக்கிறதென்றே நினைத்திருந்தேன். ஆனால் அது அப்படியல்ல என இப்போது புரிகிறது. ஏழாம் உலகத்தை மிக விரைவாக படிக்க முடிந்தது. ‘நாரோயிலு’ மொழியும் நன்றாக பழகிவிட்டது. முத்தம்மை அறிமுகமாகும் இடமே மனதை அறைந்துவிட்டது. அப்போதே ஏழாம் உலகம் என்னை வெளியே தூக்கி எறிந்துவிட்டதோ எனப் பயந்தேன். ஆனால் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/85161

என்னை வாசிக்கத் தொடங்குதல்

3




  அன்புடன் ஜெ, நான் ஐரோப்பிய நாடுஒன்றில் வசிக்கும் இலங்கைத் தமிழன். எனது தந்தையார் உங்களது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு தீவிர வாசகராக இருந்த போதிலும் ,எனது நண்பர்களால் விதைக்கப்பட்ட விச விதையினால் நான் உங்களது எழுத்துக்களை வாசிக்கவில்லை. ஆனால் நாற்பது வயதைக்கடந்த பின்னால்தான் சிறிதுசிறிதாக உங்களது எழுத்துக்களை வாசிக்கத்தொடங்கி உள்ளேன். ஒவ்வொரு எழுத்துக்களும் எனக்குள்இருந்த,இருக்கிற சந்தேகங்களை தீர்ப்பது போல இருக்கிறது. அதனால் உங்களது நாவல்களைப் படிப்பது என்று இருக்கிறேன் .ஆனால் எதனை முதல்வாசிப்பது என்று யோசிக்கிறேன். …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/80644

கதைகளின் வழி




அன்பின் ஜெயமோகன். வணக்கம். நான் மா.கார்த்திகைப்பாண்டியன். மதுரையைச் சேர்ந்தவன். தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன். உங்களுடைய அபுனைவுகளைக் காட்டிலும் புனைவுகளே எனக்கு மிக நெருக்கமாய் உணருகிறேன்.ஊமைச்செந்நாய்தான் நான் வாசித்த உங்கள் முதல் தொகுப்பு. ஊமைச்செந்நாயும் மத்தகமும் இன்றைக்கும் நான் படித்த உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பிறகு ஏழாம் உலகம், கன்னியாகுமரி, விஷ்ணுபுரம் என நாவல்கள். சமீபத்தில் எழுதப்பட்ட அறம் சிறுகதைகள் மீது எனக்கு ரொம்பவே வருத்தம் உண்டு. ஒரு வாசகனை எங்கே அடித்தால் வீழ்வான் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/21353

மின் தமிழ் பேட்டி 2

writer_sujatha_bday




10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/69818

பிறழ்வுகள்

download




அன்பின் ஜெ அவர்களுக்கு, சமீபகாலமாக அதிகம் வாசிக்கிறேன். அதிகம் என்றால் அதிக நேரம். இப்போதைக்கு ஒரே ஒரு சந்தேகம். தங்களின் ஏழாம் உலகம் வாசித்து ஒரு ஆண்டுகளாகிறது. இன்னமும் அந்தபெயரைக் கேட்டாலோ எங்காவது அந்த புத்தகத்தைப் பார்த்தாலோ அந்நாவலின் தாக்கம் மனதிற்குள் வந்துவிடுகிறது. சமீபத்தில் வாசித்த காடு என்னுள் உண்டாக்கிய பாதிப்பு அளப்பரியது. தற்போது சாடத் ஹசன் மண்ட்டோ படைப்புகள் வாசிக்கிறேன். அவரது ‘திற’ சிறுகதையை இன்று படித்து எனக்குள் மிகப்பெரும் தாக்கத்தை/சோகத்தை/அந்த சமூகத்தின் மீது வெறுப்பை …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/66339

துணை இணையதளங்கள்




விஷ்ணுபுரம் இணையதளம் [விஷ்ணுபுரம் சம்பந்தமான அனைத்துக்கட்டுரைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. நாவலை புரிந்துகொள்வதற்கான பிற கட்டுரைகளும் உண்டு] வெண்முரசு விவாதங்கள் இணையதளம் கொற்றவை விவாதங்கள் இணையதளம் பின் தொடரும் நிழலின் குரல் இணையதளம் பனிமனிதன் இணையதளம் காடு இணையதளம் ஏழாம் உலகம் இணையதளம் அறம் இணையதளம் வெள்ளையானை இணையதளம் இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணையதளம் நண்பர்களால் நடத்தப்படுகிறது. விஷ்ணுபுர நண்பர்களால் இரு இணையதளங்கள் நடத்தப்படுகின்றன. காந்தி இன்று இணையதளம் நண்பர் சுநீல் கிருஷ்ணனால் தொடங்கப்பட்டு அவரது …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/63054

ஏழாம் உலகம்- கடிதம்

Ezham-Ulagam-Wrapper---final




அன்புள்ள ஜெயமோகன், மீள வழியில்லாத வாழ்க்கை விதிக்கப்பட்ட மனிதர்களின் அவலம் – முதுகு தண்டு சில்லிட்டு போனது. ஒரு நடுக்கத்துடனேயே படித்து முடித்தேன். இதோ நானும் இருக்கிறேன் என்ற விமர்சனம் இல்லை. குறையுடலிகளின் அவலத்தால் அலைகழிப்பட்ட ஒரு வாசக கடிதம். கதையில் குறிபிடப்படும் சம்பவங்கள் நினைவுக்கு வரும் போது எதன் மீதாவது நம்பிக்கை வருமா என்று தெரியவில்லை. திருவந்திரம் கோயிலின் கருவறை எச்சிலும், பழனி படிகளில் சிதறி கிடக்கும் உருப்படிகளும், எதையும் நம்பவோ புரிந்து கொள்ளவோ விடபோவதில்லை. …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/64450

நூறுநாற்காலிகளின் யதார்த்தம்




அன்புள்ள ஜெயமோகன் , வணக்கம், சென்ற வாரம் தான் நூறு நாற்காலிகள் கதையை உங்கள் தளத்தில் படித்தேன். மனதில் கொப்பளிக்கும் உணர்வுகளை சொல்லவே முடியவில்லை, மிகவும் கனமாக உணர்கிறேன். கடந்த ஒரு வாரமாக கடுமையான பணிச்சூழலுக்கு நடுவேயும் அந்த கதை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது, அதன்பிறகு எதனையும் வாசிக்க முடியவில்லை. நான் பிறந்து வளர்ந்த தலித்துகள் அதிகம் வாழும் சூழலில் ஆதிக்க சாதி அடக்குமுறைகளையெல்லாம் நான் பார்த்ததே இல்லை, (கூட்டமாக இருப்பவர்களே ஆதிக்க சாதி இந்த காலத்தில்) …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/62088

Older posts «